Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 05-02.2023
Share:

By Village Missionary Movement

Sunday, 05-Feb-2023

இன்றைய தியானம்(Tamil) 05-02.2023

 

ஐடா ஸ்கடர் 

 

”…உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது.” - மத்தேயு 5:16

  

Hai குட்டீஸ் பொங்கல் லீவு எல்லாம் சந்தோஷமாக இருந்ததா? இன்றைக்கு தன்னால் இயன்றதைச் செய்த ஐடா ஸ்கடர் என்ற அம்மா பற்றி பார்ப்போமா?        

 

இங்கிலாந்து நாட்டிலே, ஒரு ஹாஸ்டலில் தங்கி ஐடா என்ற பெண் படித்துக் கொண்டிருந்தாள். ஒரு நாள் அவளும் அவள் Friends-ம் ஜாலியாகப் பேசி சிரித்துக் கொண்டிருந்தனர். அப்பொழுது மேரி என்ற Friend ஐடாவிடம், “ஐடா, நீயும் உன்னுடைய அப்பா ஸ்கடர் மாதிரி இந்தியாவிற்கு மிஷனெரியாகப் போகப்போகிறாயா?’’ என்று கேட்டாள். உடனே ஐடா, அந்த அழுக்கான நாடான இந்தியாவிற்குப் போகவே எனக்குப் பிடிக்காது’’ என்றாள். கிளாரா என்ற Friend “ஐடா, நீயும் உன்னுடைய அப்பாவை மாதிரி டாக்டராகி ஊழியம் செய்“ என்று கூறினாள். உடனே ஐடா, “நான் அவ்வாறு செய்யவே மாட்டேன்” என்று கூறிவிட்டாள். 

 

ஐடா, விடுமுறைக்கு இந்தியா வந்தாள். ஒரு நாள் சாயங்கால நேரம் “டொக் டொக்” என்று கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது. ஐடா ஓடிப்போய் கதவைத் திறந்தாள். ஒரு ஐயா நின்று கொண்டிருந்தார். “அம்மா நீங்கள் டாக்டர் தானே. எனது மனைவி வயிற்று வலியால் மிகவும் அதிகமாய் வேதனைப்படுகிறாள், வந்து மருந்து கொடுங்கள் அம்மா” என்றார். நானில்லை, அப்பாதான் டாக்டர். அவர் வந்தவுடன் வரச் சொல்லுகிறேன்” என்றாள் “இல்லம்மா, நாங்கள் பெண்களுக்கு ஆண்களிடம் வைத்தியம் பார்க்க அனுமதிப்பதில்லை” என்று கூறிச் சென்று விட்டார்.

 

சிறிது நேரம் சென்ற பின்பு திரும்பவும் கதவு தட்டப்படும் ஓசை. ஐடா சென்று பார்த்தபோது ஒரு ஐயா “அம்மா வாருங்கள், என் மனைவிக்கு குளிர் 

காய்ச்சல் வந்து உயிருக்குப் போராடுகிறாள்” என்றார். ஐடா அதே பதிலைச் சொன்னவுடன் அவரும் சென்று விட்டார்.

 

காலையில் ஐடா ஜன்னல் வழியே பார்த்த போது மூன்று சவஊர்வலம், இறந்தவர்களை எடுத்துச் சென்று கொண்டிருந்தனர். உடனே “இயேசப்பா நான் டாக்டராகி இந்த மக்களைக் காப்பாற்றுவேன்” என்று அர்ப்பணித்தாள். ஐடா டாக்டராகி நமது தமிழ்நாட்டில் வேலூர் என்ற இடத்தில் சிஎம்சி ஹாஸ்பிடல் என்ற மருத்துவமனையைப் பெரிய அளவில் உண்டு பண்ணினார்கள். இன்றும் பெரிய வியாதிகளுக்கு அங்கு வைத்தியம் பார்க்கப்படுகிறது.

 

அன்புச் செல்லங்களே! நீங்களும் இயேசப்பாவுக்காக நானும் ஏதாவது செய்வேன் என்று அர்ப்பணியுங்களேன்!! 

- Sis. பியூலா

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al