Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 03-02.2023
Share:

By Village Missionary Movement

Friday, 03-Feb-2023

இன்றைய தியானம்(Tamil) 03-02.2023

 

TRY JESUS 

 

“கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப்பாருங்கள்; அவர் மேல் நம்பிக்கையாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்” – சங்கீதம் 34:8 

 

பெரிய அளவிலான அறிவியல் கருத்தரங்கம் ஒன்று நடந்தது அதில் அறிவியல் கண்டுபிடிப்புகள் பலவற்றை அங்குள்ள அறிவியல் கண்டுபிடிப்பாளர்கள் மக்களிடம் காட்டிக் கொண்டிருந்தனர். அதில் ஒரு அறிவியல் அறிஞர் கடவுள் இல்லை என்ற கொள்கை உடையவர். அவர் திடீரென்று மக்கள் மத்தியில் ஒரு அறிக்கையிட்டார். “கடவுள் ஒருவர் உண்டு என்று நிரூபிக்க யாராவது இந்தக் கூட்டத்தில் இருக்கிறீர்களா? “என்று சொல்லி ஏளனமாக சிரித்தார். அந்தக் கூட்டத்தில் கடவுளை வணங்குபவர்களும் அமைதியாக, மௌனமாக இருந்தார்கள். திடீரென்று ஒரு சிறு பையன் கையில் ஆப்பிளுடன் மேடைக்கு வந்து, “கடவுள் இருக்கிறார் என்பதை நான் நிரூபிக்கிறேன்” என்று சொல்லி ஆப்பிளை சாப்பிடத் தொடங்கினான். கடவுள் மறுப்பாளர்களுக்கோ கடுமையான கோபம்! ஏன் இப்படி செய்துகொண்டிருக்கிறாய்? என்று கேட்டார். அதற்கு அந்த சிறுவன் இப்பொழுது நான் சாப்பிட்ட ஆப்பிள் கசப்பா? இனிப்பா? இல்லை புளிப்பா? என்று கேட்டான். நீ சாப்பிட்ட ஆப்பிள் என்ன சுவையில் இருக்கிறது என்று எனக்கு எப்படித் தெரியும் என்றார். அப்பொழுது அந்த சிறுவன் நான் எப்படி இந்த பழத்தை ருசி பார்த்தேனோ அதே போலத்தான் நான் கடவுள் இருக்கிறாரென்று ருசி பார்த்திருக்கிறேன் என்று சொன்னதுமல்லாமல் நீங்களும் அவரை ருசித்துப் பாருங்கள் என்றான். அந்த கடவுள் மறுப்பாளரோ தன்னுடைய தவறை உணர்ந்து தலைகுனிந்தார்.

 

வேதத்திலும் கூட இவன் என் இருதயத்திற்கு ஏற்றவன் என்று சொன்ன தாவீது கர்த்தர் நல்லவர் என்றே அநேக சங்கீதங்களில் எழுதியுள்ளார். வேதத்திலுள்ள வார்த்தைகள் சொல்வதால் மட்டும் அவர் நல்லவராய் இருக்கவில்லை. நம்முடைய வாழ்க்கையின் ஒவ்வொரு அசைவுகளிலும் அவர் நல்லவராகவே இருக்கிறார். வனாந்தரத்தில் முறுமுறுத்த இஸ்ரவேல் ஜனங்களுக்கு அவர் நல்லவராக இருந்தார். ஆண்டவர் வனாந்தரத்தில் அலைந்து திரிந்த ஆகாரின் வாழ்க்கையிலும் ஆண்டவர் நல்லவராகவே இருந்தார். ஆண்டவர் இயேசு மூன்றரை ஆண்டுகள் மட்டும் அல்ல முப்பத்து மூன்றரை வருடமும் நல்லவரும், நன்மை செய்கிறவருமாய் இருத்தார்.

 

எனக்கன்பானவர்களே! அவர் நமக்காக மனித உருவில் வந்த தெய்வம். எனக்காகவும், இதை வாசித்துக் கொண்டு இருக்கிற உங்களுக்காகவும், நம்முடைய பாவங்களுக்காகவும் தவறுகளுக்காகவும் உயிரையும் கொடுத்தவர். நம் பாவங்களுக்காக ஒரு பாவமும் செய்யாத அவர் பலியானார். மூன்றாம் நாளில் உயிரோடு எழுந்தவர். மீண்டும் நமக்காக வரப்போகிறவர். ஏன் நீங்களும் இயேசுவை ருசி பார்க்கக் கூடாது? Try Jesus Today! 

- Bro. ஆல்வின் ஜேக்கப்

 

ஜெபக்குறிப்பு:

ஸ்கூல் மிஷன் ஊழியத்தின் முலம் சந்திக்கப்படும் மாணவர்கள் கிறிஸ்துவுக்குள் வளர ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet jojobet giriş matbet giriş holiganbet giriş matbet sahabet onwin bets10 bets10 giriş bets10 güncel giriş betcio atlasbet casibom giriş deneme bonusu casibom vaycasino vaycasino giriş meritking meritking giriş cratosroyalbet realbahis realbahis giriş jojobet jojobet jojobet jojobet jojobet holiganbet holiganbet cashwin esbet tambet casibom casibom giriş casibom casibom giriş imajbet imajbet giriş imajbetapp grandpashabet grandpashabet giriş grandpashabet güncel bets10 bets10 giriş bets10 güncel giriş matbet matbet giriş alobet betmartin pashagaming ultrabet lunabet betzula meritking jojobet