Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 25-01.2023
Share:

By Village Missionary Movement

Tuesday, 24-Jan-2023

இன்றைய தியானம்(Tamil) 25-01.2023

 

ஊழியர் பயிற்சி 

 

“…அவர்கள் தம்மோடுகூட இருக்கவும், பிரசங்கம் பண்ணும்படியாக… வியாதிகளைக் குணமாக்கிப் பிசாசுகளைத் துரத்தும்படி அவர்கள் அதிகாரமுடையவர்களாயிருக்கவும் அவர்களை ஏற்படுத்தினார்” - மாற்கு 3:14,15

 

இயேசுவின் இரத்தத்தால் கழுவப்பட்ட ஒவ்வொரும் சுவிசேஷத்தை அறிவிக்கும் நற்செய்தியாளர்கள் தான். ஆம், சுவிசேஷத்தை அறிவிப்பது நம் ஒவ்வொருவர் மீதும் விழுந்த கடமையாக இருக்கிறது. நாம் பெற்ற இரட்சிப்பின் அனுபவத்தை, நன்மைகளை பிறருக்கு அறிவிப்பதில் நமக்கு ஏன் தயக்கம் ஏற்படுகிறது? ஆத்துமாக்களை ஆதாயப்படுத்திக் கொள்ளுகிறவன் ஞானமுள்ளவன் (நீதி.11:3௦) ஞானம் உள்ளவர்கள் ஆத்தும ஆதாயம் செய்கிறவர்களாக இருக்கிறார்கள் என்று வேதம் சொல்கிறது. நமக்கு ஞானம் வேண்டுமென்றால், அது கர்த்தருடைய வார்த்தைக்கு கீழப்படிவதே ஆகும். அப்படி அவர் நம்மிடத்தில் என்ன கீழ்ப்படிதலை விரும்புகிறார் என்று யோசித்துப் பார்த்தால், மத்தேயு 28:19,20ல் நீங்கள் புறப்பட்டுப் போய் சகல ஜாதிகளையும் சீஷராக்குங்கள் என்றும் இதோ உலகத்தின் முடிவு பரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனே இருக்கிறேன் என்றும் கூறுகிறார். 

 

சுவிசேஷம் அறிவிக்க வாஞ்சையுள்ளவர்களுக்கும், அறிவிப்பதில் தயக்கம் உள்ளவர்களுக்கும் நாங்கள் மாதந்தோறும் பயிற்சி கொடுத்து வருகிறோம். இயேசுகிறிஸ்துவும் இந்த உலகத்தில் இருந்த நாட்களில் 12 பேரை தேர்வு செய்து அவர்களை சீஷராக்கி அவர்கள் தன்னுடன் கூட இருக்கவும், பிரசங்கம் பண்ணும்படியாகவும், வியாதிகளை குணமாக்கி, பிசாசுகளை துரத்தும்படியாகவும் அவர்களுக்கு அதிகாரம் கொடுத்தார். அவர்களை தன்னுடன் வைத்து மூன்றரை வருடங்களாக பயிற்சி கொடுத்தார். அப்.4:13ல் பேதுருவும், யோவானும் பேசுகிற தைரியத்தை பிரதான ஆசாரியர்கள் கண்டு அவர்கள் படிப்பறிவு இல்லாதவர்கள் என்றும் பேதைமை உள்ளவர்கள் என்றும் அறிந்தபடியினால் ஆச்சரியப்பட்டு, அவர்கள் இயேசுவுடன் இருந்தவர்கள் என்றும் அறிந்து கொண்டார்கள். இயேசுவைப் பற்றி அறிவித்தால் ஞானமும், தைரியமும் பொங்கிவரும் என்பதற்கு இவர்களே சாட்சி.

 

மூன்றரை வருடங்கள் தான், உலகத்தை கலக்கும் 12 சீஷர்களை இயேசு உருவாக்கி விட்டார். என்னை விசுவாசிக்கிறவன் என்னைக் காட்டிலும் பெரிய காரியங்களைச் செய்வான் என்று இயேசு சொல்லி இருக்கிறார். அப்படியென்றால் மூன்றரை ஆண்டுகள் ஊழியம் செய்த அவரைக் காட்டிலும் நாம் அதிகம் செய்ய முடியும் என்றே சொல்லுகிறார். நாம் அவருடைய வார்த்தைகளை விசுவாசித்தால் போதும் நிச்சயம் சாதிக்கலாம் என்பதில் சந்தேகம் இல்லை. நாம் வசிக்கும் இடங்களில் ஜெபக் கூட்டங்கள் நடத்தவோ, டியூஷன் சென்டர் நடத்தவோ, சிறுபிள்ளைகள் மத்தியில் ஊழியம் செய்யவோ இப்படி நம்மால் இயன்றதை செய்வோம். இதை கிராம மிஷனெரி இயக்க ஊழியர்களாக நங்கள் பணித்தளங்களில் செய்து வருகிறோம். நீங்களும் எங்களோடு கைகோர்த்து நில்லுங்கள். நாம் சேர்ந்து தேசத்தை சுதந்தரிப்போம். அல்லேலூயா!

- A. பியூலா  

 

ஜெபக்குறிப்பு: 

மீடியா ஊழியத்தில் ஈடுபடும் நபர்களை தேவன் அவருடைய ஞானத்தினால் நிரப்ப ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet jojobet giriş matbet giriş holiganbet giriş matbet sahabet onwin bets10 bets10 giriş bets10 güncel giriş betcio atlasbet casibom giriş deneme bonusu casibom vaycasino vaycasino giriş meritking meritking giriş cratosroyalbet realbahis realbahis giriş jojobet jojobet jojobet jojobet jojobet holiganbet holiganbet cashwin esbet tambet casibom casibom giriş casibom casibom giriş imajbet imajbet giriş imajbetapp grandpashabet grandpashabet giriş grandpashabet güncel bets10 bets10 giriş bets10 güncel giriş matbet matbet giriş alobet betmartin pashagaming ultrabet