Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 24-01.2023
Share:

By Village Missionary Movement

Monday, 23-Jan-2023

இன்றைய தியானம்(Tamil) 24-01.2023

 

சுவிசேஷம் அறிவிப்போம் 

 

“சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும் ஜாக்கிரதையாய்த் திருவசனத்தைப் பிரசங்கம்பண்ணு” – 2. தீமோ. 4:2

 

தினமும் யாருக்காவது சுவிசேஷம் அறிவித்துவிட வேண்டும் என்று வாஞ்சையுள்ள ஒரு அம்மா இருந்தார்கள். ஒருமுறை மலேசியாவிற்கு மகளைப் பார்க்க சென்றார்கள். விமானத்தில் அனைவரும் அவரவர் சீட்டில் அமர்ந்து விட்டனர். யாரோடும் பேசுவதற்கு வாய்ப்பில்லை. அப்போது விமான பணிப்பெண் குளிர்பானம் கொண்டு வந்தாள். அவளிடம், “உங்களுக்கு இயேசுவைத் தெரியுமா?” என்று கேட்டார்கள். பணிப்பெண் விரைந்து சென்றாள். விமானத்தில் பயணம் செய்வோரின் பெயர் பட்டியலை அலசிவிட்டு அம்மாவிடம் வந்து, “அம்மா இயேசு என்ற பெயரில் இன்று இந்த விமானத்தில் யாரும் பயணிக்கவில்லையே” என்று கவலையோடு தெரிவித்தாள். அவர்களுக்கு ஒரு புறம் சிரிப்பு வந்தாலும், மறுபுறம் வேதனையடைந்தார்கள். பின் அப்பணிப் பெண்ணுக்கு இயேசுகிறிஸ்துவைப் பற்றிக் கூறி ஒரு சுவிசேஷக் கைப்பிரதியைக் கொடுத்தார்கள்.

 

நாமும் கூட நம்மை சுற்றி இருப்பவர்களுக்கு இயேசுகிறிஸ்துவைப் பற்றி தெரியும் என்று நினைக்கிறோம். ஆனால் உண்மை அதுவல்ல. சில சினிமாக்களில் பார்ப்பது போல இயேசுகிறிஸ்துவின் படத்தின் முன் மெழுகுவர்த்திகளை ஏற்றி வைப்பதும், குருவானவரிடம் பாவமன்னிப்பு கேட்பதும் தான் கிறிஸ்தவம் என்று எண்ணிக் கொண்டுள்ளனர். ஒருமுறை விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்திற்கு சென்றிருந்தபோது ஒரு பாட்டியிடம், இயேசுகிறிஸ்து ரொம்ப நல்லவர். உங்களுக்கு நல்லது செய்வார் என்று கூறிய போது, “அவருக்கு ஓட்டுப்போட சொல்லுறீங்களா” என்று கேட்டார். இதைக் கேட்டு அதிர்ந்து போனோம். 

 

ஆம், ரோமர் 10:14 கூறுவதுபோல, இயேசுகிறிஸ்துவை கேள்விப்படாதவர்கள் எப்படி விசுவாசிப்பார்கள்? பிரசங்கிக்கிறவன் இல்லாவிட்டால் எப்படி கேள்விப்படுவார்கள்? ஆண்டவர் எமது இயக்கத்திற்கு தந்த “பிலிப்பு சுவிசேஷக் குழு ஊழியம்” என்ற திட்டத்தின்படி, வாரந்தோறும் சனிக்கிழமைகளில் பணித்தளங்களில் ஊழியம் செய்ய வாஞ்சையுள்ளவர்களை ஒன்று சேர்த்து கிராமங்களுக்குச் செல்கிறோம். துண்டுப்பிரதி வழங்குதல், தெரு பிரசங்கம், சிறுவர்கள் ஊழியம் இவ்வாறு ஒவ்வொரு கிராமத்திலும் செய்கிறோம். நீங்களும் இருக்கிற இடத்தில் உங்கள் நண்பர்களோடு சேர்ந்து சுவிசேஷம் அறிவிக்கப்படாத ஜனங்களைத் தேடி செல்லுங்கள். ஒருமுறையாகிலும் அவர்கள் சுவிசேஷத்தை கேட்டு விடட்டும். ஆண்டவரின் வருகை சமீபமல்லவா? ஆகவே செயல்படுவோம் .

- Mrs. ஜெயக்குமாரி 

 

ஜெபக்குறிப்பு: 

நாம் வெளியிடும் மோட்சப்பயணம் , கழுதைகளின் கையேடு, கண்மணியே கேள், யோசுவாவே எழும்பு, ஜெபக்குழு தலைவர் கையேடு ஆகிய ஐந்து பத்திரிக்கைகளுக்காக ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet jojobet giriş matbet giriş holiganbet giriş matbet sahabet onwin bets10 bets10 giriş bets10 güncel giriş betcio atlasbet casibom giriş deneme bonusu casibom vaycasino vaycasino giriş meritking meritking giriş cratosroyalbet realbahis realbahis giriş jojobet jojobet jojobet jojobet jojobet holiganbet holiganbet cashwin esbet tambet casibom casibom giriş casibom casibom giriş imajbet imajbet giriş imajbetapp grandpashabet grandpashabet giriş grandpashabet güncel bets10 bets10 giriş bets10 güncel giriş matbet matbet giriş alobet betmartin pashagaming ultrabet lunabet betzula meritking jojobet