Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 23-01.2023
Share:

By Village Missionary Movement

Monday, 23-Jan-2023

இன்றைய தியானம்(Tamil) 23-01.2023

 

உன்னால் முடிந்ததை செய் 

 

“செய்யும்படி உன் கைக்கு நேரிடுகிறது எதுவோ, அதை உன் பெலத்தோடே செய்; நீ போகிற பாதாளத்திலே செய்கையும் வித்தையும் அறிவும் ஞானமும் இல்லையே” - பிரசங்கி 9:10

 

அட்லாண்டிக் பெருங்கடலில் கப்பலில் பிரயாணம் செய்து கொண்டிருந்த ஒரு மனிதன் திடீரென்று நோய்வாய்ப்பட்டான்.ஒரு இரவில் அவன் படுத்திருந்த போது, ஒரு மனிதன் கடலில் தவறி விழுந்து விட்டான் என்று யாரோ அலறுவது அவன் செவிகளில் விழுந்தது. முதலில் தான் என்ன செய்ய முடியும் என்று நினைத்தான். ஆனால் மறுநொடியே ஒரு விளக்கை ஏற்றி அறையின் ஜன்னலில் தொங்க விடலாமே என்ற எண்ணம் தோன்ற அப்படியே செய்தான். கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த மனிதனின் தலையில் அவ்வெளிச்சம் பட்டது. அந்த நொடியிலேயே, மீட்பு படகில் அவனை தேடிக் கொண்டிருந்தவர்கள், இம்மனிதனின் தலைமுடியைப் பிடித்து இழுத்து அவனைக் காப்பாற்றினார்கள்.

 

இம்மனிதன் செய்ததைப் போலவே நம்மால் முடிந்தது ஒரு சிறு காரியமாக இருந்தால் கூட அதை தேவனுக்காக செய்தால், நித்திய மரணத்தை நோக்கிச் செல்லும், ஒரு ஆத்துமா இரட்சிக்கப்பட முடியும். ஒருநாள் நித்திய வீட்டிற்கு செல்லும்போது, ஆண்டவர் நம்மைப் பார்த்து, நல்லது, உத்தமமும் உண்மையுமுள்ள ஊழியக்காரனே கொஞ்சத்திலே உண்மையாயிருந்த நீ, எஜமானுடைய சந்தோஷத்திற்குள் பிரவேசி என்பார். 

 

நாகமான் வீட்டில் அடிமையாயிருந்த, பெயர் சொல்லப்படாத அந்த சிறு பெண் தன்னால் இயன்றதை செய்தாள். தனக்கு தெரிந்ததை விசுவாசத்தோடு சொன்னாள். விளைவு, சீரிய தேசத்திற்கே இரட்சிப்பு! ஆம், நம்முடைய முயற்சிகள் அற்பமாயிருக்கலாம். ஆனால் தேவன் அவற்றை அவருடைய நாம மகிமைக்காக உபயோகிக்க வல்லவராயிருக்கிறார். பெரிய பெரிய செயல்களைச் செய்ய காத்திருக்க வேண்டாம். நம் வெளிச்சம் தொலைதூரம் செல்ல எதிர்பார்த்திருக்க வேண்டாம். நம்மால் இயன்ற காரியங்களை நம்மை சுற்றியுள்ளவர்களுக்கு உண்மையாய் செய்வோம். அப்போது நாம் தங்கியிருக்கும் மூலை முடுக்குகள் கூட பிரகாசிக்கும்.

 

ஆம், நமது வாழ்வு ஆண்டவர் நமக்குக் கொடுத்த பரிசு. இவ்வாழ்க்கையைக் கொண்டு அவரது நாமத்தின் மகிமைக்காக நாம் செய்யும் சிறுசிறு நற்செயல்களும் அவருக்கு கொடுக்கும் நன்றி கடன். அல்லேலூயா. 

- Mrs. கீதா ரிச்சர்ட் 

 

ஜெபக்குறிப்பு:

புதிய பணித்தளங்களில் பணிசெய்யும் ஊழியர்களுக்கு ஐந்து இருசக்கர வாகனங்கள் உடனடியாக தேவை ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al