Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil)  25-02-2021
Share:

By Village Missionary Movement

Thursday, 25-Feb-2021

இன்றைய தியானம்(Tamil)  25-02-2021

தீமையிலும் நன்மை 

“...நீ உனக்குக் கெடுதி ஒன்றுஞ் செய்துகொள்ளாதே;” – அப். 16:28

ஹெலன் தன்னுடைய ஸ்கூட்டியில் சென்று கொண்டிருந்த போது திடீரென ஒரு சிறுபெண் குறுக்கே ஓடி வர, வண்டி நிலைதடுமாறி அருகிலிருந்த மரத்தில் மோதியதில் ஹெலன் கீழே விழுந்தாள். கண் திறந்து பார்த்தபோது பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதை உணர்ந்தாள். 2வாரத்திற்குப் பின்பு ஹெலன் வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டாள். அன்று அவள் வீட்டின் வாசலில் ஒரு விலையுயர்ந்த கார் ஒன்று வந்து நின்றது. அதிலிருந்து இறங்கியவர் ஹெலனை பார்த்து, உன் விபத்திற்குக் காரணம் என் மகள் தான் என்று கூறி மன்னிப்பு கேட்டு, நான் ஏதாவது உதவி செய்ய வேண்டுமா? என்று கேட்டார். ஹெலன் அவரை சிரித்த முகத்துடன் பார்த்து, “எந்த உதவியும் வேண்டாம். இந்த விபத்தில் மரித்திருந்தால் கூட மோட்சத்திற்குத்தான் சென்றிருப்பேன்” என்று சிறிதும் யோசிக்காமல் சொன்னாள். அந்த மனிதன் யோசித்தபடியே, “நான் ஒரு பணக்காரன், மரணத்தை நினைத்தால் மிகவும் பயப்படுகிறேன், நான் மோட்சம் போவதற்காக எவ்வளவும் செலவளிக்கத் தாயார். நீ இதைப் பற்றி எனக்குக் கொஞ்சம் சொல்லேன்” என்றார். ஹெலன் தெளிவாய் நற்செய்தியை அறிவித்தாள். உதவி செய்ய வந்தவர் உதவி பெற்று சென்றார். 

பவுலும், சீலாவும் சிறைச்சாலையில் கட்டுகள், சங்கிலிகள் மத்தியிலும் நடுராத்திரியில் தேவனைத் துதித்து பாடினபோது அவர்கள் சங்கிலிகள் கழன்று போனது. சிறைச்சாலைக்காரன் பவுலும், சீலாவும் ஓடிப்போனார்களென்று எண்ணி தன்னைத்தானே கொல்லப் பார்த்தான். அப்போது பவுல் அந்த சிறைச்சாலைக்காரனைத் தடுத்து அவனை உற்சாகப்படுத்தினான். பவுலின் இந்த செயலால் அந்த சிறைச்சாலைக்காரனின் குடும்பமே இரட்சிக்கப்பட்டது. பவுலும் சீலாவும் சிறைச்சாலை அனுபவத்தை மகிழ்ச்சியாக எண்ணி இருக்க மாட்டார்கள். இது அவர்களுடைய வாழ்க்கையில் நடந்த தீமையான காரியம்தான். ஆனால் அந்த வேதனையின் நேரத்திலும் ஒரு நன்மை நடந்தது. 

ஆம், பிரியமானவர்களே! உங்களது வாழ்வில் குறுக்கிடும் பிரச்சனைகளைக் கண்டு சோர்ந்து போகாதிருங்கள். அதிலும் ஒரு நன்மை இருக்கும். ஹெலனைப் போல, பவுல்-சீலாவைப் போல நீங்களும் உங்களது கஷ்டத்தின் மத்தியிலும்  யாரையாவது தேவனுக்கென்று ஆயத்தப்படுத்த முடியும். 
-    Mrs. மனுஷியா பவுல்ராஜ் 

ஜெபக்குறிப்பு:
Peace Centre ஆரம்பிப்பதற்கான வேலைகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. தேவையுள்ள நபர்கள் இங்கு வந்து விடுதலை பெற்று செல்ல ஜெபியுங்கள்.

இந்த தியானச் செய்தியை பெற்றுக்கொள்ள
Whats app: 
தமிழில் பெற -  +91 94440 11864
ஆங்கிலத்தில் பெற - +91 86109 84002
ஹிந்தியில் பெற - +91 93858 10496
தெலுங்கில் பெற - +91 94424 93250

Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.vmmorg.template.msmapp

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet jojobet giriş matbet giriş holiganbet giriş matbet sahabet onwin bets10 bets10 giriş bets10 güncel giriş betcio atlasbet casibom giriş deneme bonusu casibom vaycasino vaycasino giriş meritking meritking giriş cratosroyalbet realbahis realbahis giriş jojobet jojobet jojobet jojobet jojobet holiganbet holiganbet cashwin esbet tambet casibom casibom giriş casibom casibom giriş imajbet imajbet giriş imajbetapp grandpashabet grandpashabet giriş grandpashabet güncel bets10 bets10 giriş bets10 güncel giriş matbet matbet giriş alobet betmartin pashagaming ultrabet lunabet betzula meritking jojobet