Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 19-01.2023
Share:

By Village Missionary Movement

Wednesday, 18-Jan-2023

இன்றைய தியானம்(Tamil) 19-01.2023

 

சிறுவர் ஊழியம்

 

“…இந்தச் சிறுபிள்ளையை என் நாமத்தினிமித்தம் ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான்;” - லூக்கா 9:48

 

சாயங்காலம் 4 மணிக்கு மேல் கிராமத்திற்கு சென்று பார்த்தால் சிறு பிள்ளைகள் தெருவிலோ, சாவடி முன்பாகவோ அல்லது அந்த கிராமத்தில் இருக்கும் பள்ளியின் முன்பாகவோ விளையாடிக் கொண்டிருப்பார்கள். அவர்களிடத்தில் சென்று ஒரு கதை சொல்லித்தரவா என்று நாம் கூறினால் உடனே சரி என்று சொல்லி நம்முடன் நம் பின்னாலேயே வந்துவிடுவார்கள். என்ன ஆச்சரியம் பாருங்கள். இவர்களுக்கு கதைகள் மூலம் சுவிசேஷம் அறிவிப்பது தான் சிறுவர் ஊழியம். சில வேலைகளில் அவர்களின் பெற்றோர்களும் கூட அவர்கள் என்ன சொல்லித் தருவார்களோ என்று சந்தேகித்துக் கூட வந்து விடுவார்கள். நாம் சொல்லித் தரும் பாடல்கள், கதைகள், வசனங்கள் மற்றும் நாம் கற்றுத்தரும் ஒழுக்க நடைமுறைகளை பார்த்து அவர்களே அடுத்த முறை தாமாகவே பிள்ளைகளை அனுப்பி வைத்துவிடுவார்கள்.

 

பிள்ளைகள் அப்பங்கேட்கிறார்கள் அவர்களுக்கு கொடுப்பாரில்லை என்று வேதத்தில் நாம் வாசிக்கிறோம். அப்படியென்றால் புறஜாதி பிள்ளைகளுக்கும் இயேசு தேவை. இந்த சிறுவயதில் அவர்கள் கற்றுக் கொள்கிற பாடங்கள் தான் அவர்கள் பெரியவர்கள் ஆகும் போது அதன் படி நடக்க உதவியாக இருக்கும். இந்த வயதில் இயேசுவின் அன்பை அவர்களுக்கு விதைக்காவிட்டால் பெரியவர்கள் ஆகும்போது அவர்கள் நிச்சயமாக வழிதப்பிப் போக அநேக வாய்ப்புகள் உண்டு. கிராம மிஷெனெரி இயக்கத்தின் தரிசனமே என் ஆட்டுக்குட்டிகளை மேய்ப்பாயாக என்ற வசனமே! சிறுபிள்ளைகள் மத்தியில் குறிப்பாக கிராமங்களில் உள்ள சிறுபிள்ளைகள் ஆண்டவருடைய அன்பை அறிந்து கொள்ள செயல்படுகிறோம். இதற்காக நாங்கள் சிறப்பாக கற்பிக்கப்பட்டோ அல்லது கற்றுக் கொண்டோ வரவில்லை. ஆண்டவர் எங்களுக்கு செய்த நன்மைகளை ஒரு சிறு கதையாக கூறுகின்றோம். கதைக்கு ஒத்த வசனத்தையும் கூறி இயேசுவை அறிவிக்கிறோம்.

 

பிரியமானவர்களே! இன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள் என்ற கூற்றின்படி நாம் இயேசுவின் அன்பை இப்பொழுதே அறிவிக்காவிட்டால் அவர்களுடைய வருங்கால நிலை என்னவாக இருக்கும் என்று சிந்தித்துப் பாருங்கள். ஒருவேளை அவன் இயேசுவின் அன்பை அறிந்து கொண்டால் இயேசுவின் சீஷனாய் மாறிவிடுவான். லட்சோப லட்ச ஆத்துமாக்கள் இயேசுவின் பிள்ளைகளாக மாற அவன் ஏதுவாக மாறிவிடுவான். இந்தியாவில் சுவிசேஷம் அறிவிக்கப்பட்டு 2000 ஆண்டுகள் ஆயினும் இன்றும் மூன்று சதவீத மக்களே ஆண்டவரை அறிந்து கொண்டிருக்கிறார்கள். ஆகவே நாம் செயல்பட்டே ஆக வேண்டும். நீங்கள் விரும்பினால் எங்களோடு பகுதி நேரமாகவோ அல்லது முழுநேரமாகவோ இணைந்து கிராமங்களில் உள்ள சிறுவர்களை சந்திக்க முன் வருவீர்களா? வருங்கால தலைமுறையினரை செழித்தோங்க செய்வீர்களா? தேசம் உங்கள் கையில் இன்றே செயல்படுங்கள்.

 

நினைவிற்கு: சிறுவன் செய்யும் சிறு தவறை முளையிலேயே கிள்ளி எறிந்தால் அவன் எதிர்காலத்தின் பெருமகனாய் தேசத்தில் திகழ்வான் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

- Mrs. மெர்ஸி அலெக்சாண்டர்

 

ஜெபக்குறிப்பு:

தமிழ்நாடு முழுவதும் 3000 இடங்களில் டியூசன் சென்டர்கள் தொடங்க உள்ளோம். இதில் தேவகரம் உடனிருக்க ஜெபியுங்கள்

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet jojobet giriş matbet giriş holiganbet giriş matbet sahabet onwin bets10 bets10 giriş bets10 güncel giriş betcio atlasbet casibom giriş deneme bonusu casibom vaycasino vaycasino giriş meritking meritking giriş cratosroyalbet realbahis realbahis giriş jojobet jojobet jojobet jojobet jojobet holiganbet holiganbet cashwin esbet tambet casibom casibom giriş casibom casibom giriş imajbet imajbet giriş imajbetapp grandpashabet grandpashabet giriş grandpashabet güncel bets10 bets10 giriş bets10 güncel giriş matbet matbet giriş alobet betmartin pashagaming ultrabet