Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 05-01.2023
Share:

By Village Missionary Movement

Wednesday, 04-Jan-2023

இன்றைய தியானம்(Tamil) 05-01.2023

 

இயன்ற மட்டும் கொடுத்தேன் 

 

“நான் என்னாலே இயன்ற மட்டும் என் தேவனுடைய ஆலயத்திற்கென்று சவதரித்தேன்” – 1நாளா. 29:2

 

சமீபத்தில் குழு ஊழியமாக அருகில் உள்ள மாவட்டத்திற்கு சென்றிருந்தோம். அது ஒரு மலையடிவாரம்! அங்கு ஒரு சில பெண்களாக ஜெபத்திற்கு கூடி வந்தனர். பாடல்களை பாடவும், வேதவசனத்தை தியானித்து அவர்களோடு கலந்து பேசி ஜெபத்தை நிறைவு செய்தோம். அந்த கிராமத்தை விட்டு கிளம்பும்போது அங்கு வந்த பெண்களில் ஒருவர் என்னிடம் வந்து, சார் என் குடும்பத்தில் வறுமை நீங்கணும் எனக்காக ஜெபம் பண்ணுங்க என்றார்கள். நான் ஜெபித்து முடித்தவுடனே காணிக்கை கொடுத்தார். அதை நான் வேண்டாம் என்றாலும் வலுக்கட்டாயமாக 100ரூ காணிக்கையை என் கையில் கொடுத்து சென்றார். இதில் இன்னொரு விஷயம் என்னவென்றால் காணிக்கை கொடுப்பதற்கு இன்னொருவரிடம் கடனாக வாங்கி கொடுத்தார்கள். அதுதான் இங்கு கவனிக்கப்பட வேண்டிய முக்கியமான பகுதியாக உள்ளது.

 

இன்றைய வேதபகுதியில் மக்கெதோனியா சபையினர் தங்கள் உபத்திரவத்திலும், கொடிய தரித்திரத்தினால் சோதிக்கப்படுகையிலும் ஊழியர்களுக்கு உற்சாகமாக காணிக்கை கொடுத்தார்கள் என வாசிக்கிறோம். கொடுப்பதற்கு உங்களிடம் எவ்வளவு இருக்கிறது என்பது முக்கியமல்ல, மாறாக இருதயத்தில் “என்னால் இயன்ற மட்டும்” என்ற வாஞ்சை இருக்குமென்றால் நம்மால் எதையும் செய்ய முடியும். சகலவித கிருபையை பெருகச் செய்கிற தேவன் மக்கெதோனியா சபைகளுக்கு அளித்த கிருபையை நமக்கும் தந்தருளுவாராக.

 

கிறிஸ்துவில் பிரியமானவர்களே, இன்றைய தியான செய்தியில் முக்கியமானதொன்றை ஆண்டவர் உங்களிடம் பேச விரும்புகின்றார். தேவனுடைய பணிக்கு உதவி செய்வதில் நமக்குள் கேள்விகளும், முரண்பாடுகளும் இருக்குமென்றால் யார் தேவனுடைய ஊழியத்திற்கு உதவி செய்ய முடியும்? ஊழியத்திற்கு கொடுப்பதில் நமது இருதயமும் கைகளும் தாராளமாக கொடுக்க முன் வர வேண்டும். விசனமாயுமல்ல, கட்டாயமாயுமல்ல அவரிடத்தில் பெற்றுக் கொண்டதை அவருக்கு கொடுப்பதில் உற்சாகமும், மனவிருப்பமும் நமக்குள் காணப்பட வேண்டும். கொரிந்து சபை மக்களிடம் பணம் இருந்தும் கொடுக்க மனதில்லாது இருந்தார்கள். ஆனால் கொடுப்பதற்கு ஒன்றுமில்லாது இருந்த மக்கெதோனியா சபையார் உதவி செய்வதற்கு தங்களால் இயன்ற மட்டும் செயல்பட்டார்கள். ஆகவே இந்த கடைசிநாட்களில் நாம் ஊழியத்துக்கு செல்லவில்லை என்றாலும் நம்மால் இயன்ற மட்டும் ஊழியங்களுக்கு எவ்வளவு ஆதரவாக இருக்க முடியுமோ அவ்வளவு உதவி செய்வது நல்லது. பரலோகத்தில் உங்களுக்கு பொக்கிஷம் உண்டாயிருக்கும். ஆண்டவர் உங்களை வழிநடத்துவாராக!

- P. ஜேக்கப் சங்கர்

 

ஜெபக்குறிப்பு: 

சபைகள் இல்லாத தேவையுள்ள ஆயிரம் கிராமங்களில் சபைகளை கட்டி எழுப்பும் தரிசனத்தில் நம்முடன் அநேகர் இணைய ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al