By Village Missionary Movement
Monday, 02-Jan-2023இன்றைய தியானம்(Tamil) 03-01.2023
இன்னும் 12 மாதம்
“பொய்யான மாயையைப் பற்றிக் கொள்ளுகிறவர்கள் தங்களுக்கு வரும் கிருபையைப் போக்கடிக்கிறார்கள்.” - யோனா 2:8
கிறிஸ்துவில் மிகவும் பிரியமானவர்களே! இந்த புதிய வருடத்தில் பிரவேசித்திருக்கிற நாம், இந்த வருடத்தின் 12 மாதங்களையும் கர்த்தரிடத்தில் கிருபையாய் பெற்றிருக்கிறோம் என்று எண்ணி அவருக்கு நன்றிகளை ஏறெடுப்போம். இருப்பினும் நாளைய தினத்தைக் குறித்து பெருமை பாராட்டாதே என்றும் ஒருநாள் பிறப்பிப்பதை அறியாயே என்றும் வேதம் கூறுகிறது. ஆகவே ஒவ்வொரு நாளையும் தேவசமுகத்தில் அர்ப்பணித்து நம்மைக் காத்துக்கொள்வோம்.
தானியேலின் நாட்களில் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் பூமி எங்கும் ஆட்சி செய்து கொண்டிருக்கும் போது ஒரு சொப்பனம் கண்டு திகில் அடைகிறார். அந்த நேரத்தில் ஆண்டவர் தானியேல் மூலமாக அந்த சொப்பனத்தின் அர்த்தத்தை விளக்குகிறார். அந்த விளக்கத்தின் முடிவில் தனக்கு வரப்போகும் அழிவிலிருந்து தப்பித்துக் கொள்ள தானியேலிடமிருந்து ஒரு ஆலோசனை கொடுக்கப்படுகிறது. அதாவது நீதியை செய்து சிறுமையானவர்களுக்கு இரங்கி தம்முடைய பாவங்களை அகற்றினால் அவரின் அழிவு நீங்கும் என்பதே அந்த ஆலோசனை. ஆனாலும் அந்த ஆலோசனை கொடுக்கப்பட்டு ‘’பன்னிரண்டு மாதங்கள்’’ ஆகியும் கிருபையின் நாட்களை உணர்வில்லாமல் வீணடித்துப்போட்டார். அதன் தொடர்ச்சியாக ‘’நான் கட்டின மகா பாபிலோன் அல்லவா?’’ என்று பெருமையான வார்த்தையை தேவனுக்கு விரோதமாக பேசி, மனிதர்களினின்று தள்ளப்பட்டார். இராஜ்யபாரம் அவரை விட்டு நீங்கிற்று.
இதை வாசிக்கிற அருமையான தேவனுடைய பிள்ளைகளே ! உங்களில் உள்ள சிறுசிறு குறைகளை நீக்கி தம்முடைய திட்டத்தை உங்களில் நிறைவேற்றி, உங்களுடைய வாழ்க்கையை வளமாக மாற்றவும் எச்சரிப்போடு கூடிய வாக்குத்தத்தங்களையும் அந்த வாக்குத்தத்தங்களை சுதந்தரித்துக் கொள்ளவும் இன்னும் 12 மாதங்களைக் கொடுத்துள்ளார்.
நீங்கள் தேவன் கொடுத்துள்ள இந்த வாய்ப்பை பயன்படுத்தி தேவனுக்காக மகிமையான காரியங்களை செய்து வளமான வாழ்வை சுதந்தரிக்கப் போகிறீர்களா? அல்லது நேபுகாத்நேச்சாரைப் போல கிருபையின் நாட்களை வீணடிக்கப் போகிறீர்களா?
- K. பெஞ்சமின்
ஜெபக்குறிப்பு:
வாலிபர் எழுப்புதல் மாலை மூலம் சந்திக்கப்பட்ட வாலிபர்கள் தேவனுக்கென்று வைராக்கியமாய் எழும்ப ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864