Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 02-01.2023
Share:

By Village Missionary Movement

Monday, 02-Jan-2023

இன்றைய தியானம்(Tamil) 02-01.2023

 

இயன்றதை செய்வோம்

 

“இவள் தன்னால் இயன்றதைச் செய்தாள்; நான் அடக்கம்பண்ணப்படுவதற்கு எத்தனமாக, என் சரீரத்தில் தைலம்பூச முந்திக்கொண்டாள்.” – மாற்கு 14:8 

 

எங்கள் வீட்டிற்கு அருகாமையில் 80 வயது மதிக்கத்தக்க வயதான தாயார் இருந்தார்கள். அவர்களுக்கு கையில் இரண்டு விரல்கள் தான் நன்கு செயல்பட வரும். ஆனாலும் அவர்கள் அந்த கரங்களை வைத்து அழகாக கடிதம் எழுதுவார்கள். தேவையுள்ளவர்களுடைய முகவரியை தெரிந்தெடுத்து நற்செய்தி நூலான யோவான் புஸ்தகத்தை அனுப்பி வைப்பார்கள். இது அவர்களது நெடுநாள் பழக்கமாக இருந்தது. வயது முதிர்ந்த நிலையிலும் இயேசுவைப் பற்றி அறிவிக்க அவர்களால் இயன்றதைச் செய்து அவர்கள் ஓட்டத்தை வெற்றியாய் ஓடி முடித்தார்கள்.

 

வேதத்திலும் இயேசுவின் பாதத்தில் விலையேறப் பெற்ற தைலத்தை ஊற்றிய ஸ்திரீயைப் பார்த்து இயேசு “இவள் தன்னால் இயன்றதை செய்தாள்” என்று கூறுகிறார். இவள் தன்னிடத்திலிருந்ததை இயேசுவுக்கு கொடுத்தாள். இயேசு என் மீது பாராட்டிய அன்பிற்கு ஈடாக நான் எதையும் கொடுக்க முடியாது. ஆனாலும் நான் ஆண்டவர் மீது வைத்திருக்கும் அன்பை வெளிப்படுத்தும் விதமாக நான் இக்காரியத்தை செய்கிறேன் என்று செய்திருப்பாள். மேலும் அவள் தடைகளை தாண்டி செயல்பட்டாள். அவள் இக்காரியத்தை செய்கிறதை சுற்றியிருந்த மக்கள் பாராட்டவில்லை மாறாக குறை கூறுகின்றனர், முறுமுறுக்கின்றனர். தங்களது எண்ணங்களை தெரிவிக்கின்றனர். ஆனால் அதையெல்லாம் பெரிதுபடுத்தாதபடி அவள் செயல்பட்டாள் என்று பார்க்கிறோம். தருணத்தை பயன்படுத்திக் கொண்டாள். இவள் என்னிடத்தில் தைலம் பூச முந்திக் கொண்டாள் என்று இயேசு பாராட்டுகிறார். இயேசுவானவரை சந்திக்க மற்றொரு வாய்ப்பு கிடைக்கும், அப்பொழுது இதைச் செய்யலாம் என்று தள்ளிப்போடவில்லை. என்னையும் நான் செய்கிற இந்த செயலையும் அவர் ஏற்றுக் கொள்வாரா என்று யோசிக்கவில்லை. அவளுக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டாள். தன்னால் இயன்றதைச் செய்தாள் என்ற பாராட்டையும் பெறுகிறாள். இவள் செய்தது உலகமெங்கிலும் சொல்லப்படும் என்று இயேசு கூறினார்.

 

இதை வாசிக்கின்ற அன்பு வாசகர்களே, நீங்கள் இப்புதிய ஆண்டில் நுழைந்துள்ளீர்கள் என்றால் தேவன் உங்கள் மீது வைத்த கிருபையே. நீங்களும் உங்களால் இயன்றதை செய்வீர்கள் என்று எதிர்பார்ப்போடு இப்புதிய ஆண்டை ஈவாக தந்துள்ளார். உங்களால் என்ன முடியுமோ அதை இயேசுவுக்காக செய்ய முன் வாருங்கள். இன்னும் ஆண்டவர் அவரை அறியாத கோடிக்கணக்கான ஜனங்களுக்காக அழுது கொண்டிருக்கிறார். அவர்கள் ஆண்டவரை அறிந்து கொள்ள அவருடைய கண்ணீரை துடைக்கும்படி நீங்கள் உங்களால் இயன்றதை செய்யும்பொழுது ஜனங்கள் இயேசுவைக் கண்டுகொள்வார்கள்.

- Mrs. ஜெபா டேவிட் கணேசன்

 

ஜெபக்குறிப்பு:

இப்புதிய ஆண்டில் தேவனுடைய கரம் ஊழியத்தின் ஒவ்வொரு பகுதியிலும் உடனிருந்து வழிநடத்த ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al