Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 31-12-2022 (Christmas Special)
Share:

By Village Missionary Movement

Saturday, 31-Dec-2022

இன்றைய தியானம்(Tamil) 31-12-2022 (Christmas Special)

 

கடைசியாக...

 

“நீங்கள் விசுவாசமுள்ளவர்களோவென்று உங்களை, நீங்களே சோதித்து அறியுங்கள்...’’ – 2 கொரி.13.5

 

ஆண்டின் இறுதி நாளில் வந்திருக்கும் நாம் நம் வாழ்வை சற்று பின்னோக்கிப் பார்ப்போமானால், நாம் விரும்பும் அநேக காரியங்களைத் தினமும் செய்து கொண்டிருப்போம்; ஆனால் தேவன் விரும்பும் காரியத்தை எப்போது செய்தோம் என யோசித்தோமானால், அது கேள்விக்குறியாகவே இருக்கும். நம்மிடமே நாம் கேட்டு நிதானிக்க வேண்டிய கேள்விகளை கீழே காண்போம்.

 

1.கடைசியாக நான் யாருடைய இரட்சிப்பிற்காக அழுதேன்?

 

2. கடைசியாக நான் எப்போது தேவனை சந்தோஷப்படுத்தினேன்? 

 

3. கடைசியாக நான் எப்போது பசியாயிருந்த ஒரு ஏழைக்கு உணவளித்தேன்?

 

4. கடைசியாக நான் யாருக்கு சுவிசேஷம் அறிவித்தேன்?

 

5. கடைசியாக நான தேசத்திற்காக எப்போது ஜெபித்தேன்? 

 

6. கடைசியாக நான் எப்போது ஒரு நோயாளியை சந்தித்து ஜெபித்தேன்?

 

7. கடைசியாக எப்போது நான் தேவபிரசன்னத்தை உணர்ந்தேன்?

 

8. கடைசியாக நான் எப்போது பிறருக்கு கைப்பிரதி கொடுத்தேன்?

 

9. கடைசியாக எப்போது நான் என் சபைக்காக கண்ணீரோடு ஜெபித்தேன்?

 

10. கடைசியாக எப்போது என் தவறை உணர்ந்து, அயாலனிடம் மன்னிப்பு கேட்டேன்?

 

11. கடைசியாக எப்போது நான், கிறிஸ்துவினிமித்தம் அவமானப்பட்டேன்?

 

12. கடைசியாக நான் எப்போது தேவசித்தத்தைச் செய்தேன்? 

 

13. கடைசியாக எப்போது நான் என்னை பகைக்கிறவர்களுக்காக ஜெபித்தேன்?

 

14. கடைசியாக நான் எப்போது, என்னுடைய மரணத்திற்கு பின்பாக சொல்லப்படும் சாட்சியைக் குறித்து யோசித்தேன்?

 

15. கடைசியாக நான் செய்த பொருத்தனையை நிறைவேற்றினேனா?

 

மேற்கண்ட கேள்விகளை நாம் நம்மிடம் கேட்டு நம் மனசாட்சியின்படி உண்மையாய் பதில் சொல்லுவோமானால், அநேக கேள்விகளுக்கு நாம் பதிலை யோசித்து சொல்லவே முடியாத நிலையில் தான் இருக்கிறோம். காரணம், இக்காரியங்களை செய்து அநேக மாதங்கள், ஏன் வருடங்கள் கூட ஆகியிருக்கலாம். கிறிஸ்தவ வாழ்வின் இயல்பான இக்காரியங்கள் கூட நம் வாழ்வில் இல்லையென்று உணர்வோமானால் இன்றே இவைகளைச் செய்யும்படி தீர்மானிப்போம். தேவன் நமக்கு கிருபையருளுவாராக.

- K. டேவிட் கணேசன்

 

ஜெபக்குறிப்பு:

வரப்போகும் புதிய ஆண்டு ஆசீர்வாதமாக காணப்பட ஜெபியுங்கள்.  

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al