By Village Missionary Movement
Thursday, 22-Dec-2022இன்றைய தியானம்(Tamil) 23-12-2022 (Christmas Special)
அர்த்தமில்லாத கிறிஸ்துமஸ்
“…புறஜாதியார் நிந்திக்கிறதினிமித்தம் நீங்கள் நம்முடைய தேவனுக்குப் பயந்து நடக்கவேண்டாமா?” -நெகேமியா 5:9
பிரியமானவர்களே! அர்த்தமுள்ள கிறிஸ்துமஸ் என்ற தலைப்பில் ஒவ்வொரு நாளும் தியானித்து வருகிறோம். இந்த நாளில் “எது அர்த்தமில்லாத கிறிஸ்துமஸ்?’’ என்று சிந்தித்துப் பார்த்தால் நலமாய் இருக்கும்.
1. பக்கத்து வீட்டுக்காரர்களின் தண்ணீரோ, குப்பையோ நம் வீட்டு முற்றத்தில் வந்தாலோ அவர்களின் வாகனத்தை நம் வீட்டு முன்பாக நிறுத்தும்போதோ எரிச்சலும், கோபமுமடைகிறோம். இதுபோன்ற சின்ன சின்ன விஷயங்களில் பகைமையோடு இருக்கும்போது, கிறிஸ்துமஸ் காலங்களில் மட்டும் வீட்டு வாசலில் தொங்கவிடப்படும் ஸ்டார் கிறிஸ்துவுக்கு மகிமையாய் இருக்குமா அல்லது மற்றவர்களுக்கு சந்தோஷத்தைக் கொடுக்குமா?
2. நாம் வேலை பார்க்கும் இடங்களில் வருடம் முழுவதும் முகத்தை சுளித்துக் கொண்டு, கிறிஸ்தவர்கள் அல்லாத நண்பர்களிடம் எரிந்து எரிந்து விழுகிற நபராய் இருந்துவிட்டு, கிறிஸ்துமஸ் காலங்களில் சிரித்த முகத்தோடு கேக் கொடுக்கும்போது, அது உண்மையிலேயே Happy Christmas ஆகுமா?
3. அரசு அலுவலகங்களில் பணியாற்றும் கிறிஸ்தவர்கள் தங்கள் வேலையில் லஞ்சம் வாங்குவது, உண்மையை புரட்டுவது என்பது போன்ற துணிகர செயலில் ஈடுபட்டுவிட்டு, கிறிஸ்துமஸ் காலங்களில் கடைநிலை பணியாளர்களுக்கு ஆடைகள் மற்றும் கேக் கொடுக்கும்போது அது கிறிஸ்துவுக்கு மகிமையாக இருக்குமா? அல்லது கிறிஸ்துவின் முகத்திற்கு அவமானமாய் இருக்குமா?
4. கல்லூரியில் படிக்கும்போது கிறிஸ்தவ பிள்ளைகளாய் இருந்தும் மற்றவர்களைப் போல பிறரை கேலி செய்வது, அசுத்தமான காரியங்களைப் பேசி மகிழ்வது, தவறான இணையதளங்களை பகிர்ந்து கொள்வது girl friend, boy friend என மனம்போல சுற்றுவது இப்படி இருந்துவிட்டு கிறிஸ்துமஸ் அன்று மட்டும் உண்மையுள்ள கிறிஸ்தவர்களைப் போல வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்ளும்போது உங்கள் நண்பர்கள் முன் இயேசு மகிமைப்படுவாரா?
பிரியமானவர்களே! மேற்கண்ட ஒவ்வொரு குறிப்புகளிலும் அர்த்தமற்ற கிறிஸ்துமஸை பார்க்கிறோம். ஆம், நாம் உண்மையுள்ள கிறிஸ்தவனாக இருக்கும்போதுதான் அர்த்தமுள்ள கிறிஸ்துமஸ் கொண்டாடமுடியும். இல்லாவிட்டால் நமது கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் ஆடம்பரமும், ஆர்ப்பாட்டமும் இருக்கும், ஆனால் அர்த்தம் இருக்காது. கிறிஸ்துமஸ் அன்று மட்டுமல்ல ஒவ்வொருநாளும் கிறிஸ்துவை பிரதிபலிக்கும் கிறிஸ்தவர்களாக நாம் வாழ்ந்தால் நாம் கொடுக்கும் கிறிஸ்துமஸ் பரிசுகளும், வாழ்த்துகளும் அர்த்தமுள்ளதாக இருக்கும். அது நமக்கு மட்டுமல்ல, நம்மை சுற்றியுள்ளவர்களுக்கும் சந்தோஷத்தைத் தரும்.
- Mr. பெஞ்சமின்
ஜெபக்குறிப்பு:
கெத்செமனே வளாகத்தை சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள மக்களை கூட்டி கிறிஸ்து பிறப்பின் நற்செய்தி அறிவிக்க எடுக்கும் முயற்சியில் தேவகரம் உடனிருக்க, தேவைகள் சந்திக்கப்பட ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864