Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 18-12-2022 (Christmas Special)
Share:

By Village Missionary Movement

Saturday, 17-Dec-2022

இன்றைய தியானம்(Tamil) 18-12-2022 (Christmas Special)

 

மனந்திரும்புதலில் அர்த்தமுள்ள கிறிஸ்துமஸ்

 

‘’… மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.’’ - லூக்கா 15:7 

 

அன்பு செல்வங்களே! எப்படி இருக்கீங்க. நீங்க எல்லாரும் சுகமா இருக்க ஆண்டவரை வேண்டிக்கிறேன். இந்த வருடம் இப்பொழுதுதான் ஆரம்பித்தது போல் இருந்தது. கட...கட...வென்று ஓடி கடைசி மாதத்துக்கு வந்துட்டோம் பாத்தீங்களா? இந்த மாதம் முழுவதும் இயேசப்பாவுக்கு நன்றி சொல்லிக் கொண்டே இருக்கணும். 

 

கிறிஸ்துமஸ் பண்டிகை என்றாலே கேக், பிரியாணி, X-mas tree, X-mas தாத்தா இன்னும் விதவிதமான அலங்கரிப்பு, இப்படி busy யாக இருந்தாலும் புது டிரஸ் எடுக்க யாரும் மறப்பதில்லை அப்படித்தானே. உங்களுக்கெல்லாம் Dress எடுத்தாச்சா...ம்.... Super. கேனா என்ற குட்டிப் பாப்பா வீட்டில் புது டிரஸ் எடுக்க பணம் இல்லை. அப்பா ஒரு வாரமாக கிடைக்கின்ற வேலைகளையெல்லாம் செய்தார். அதில் வந்த பணத்தை வைத்து குறைந்த விலைக்கு துணி எடுத்து தைக்க கொடுத்தார்கள். கேனாவுக்கு ரொம்ப சந்தோஷம். Tailor சரியாக அளவு எடுத்து துணியை Cut பண்ணினார். வேண்டாத துணிகளை நீக்கிவிட்டு அழகாக தைக்க ஆரம்பித்தார். இப்பொழுது கேனா போடக்கூடிய Super-ரான டிரஸ் வந்துவிட்டது. Tailorக்கு fees கொடுக்கணும் இல்லையா? அப்பா fees கொடுத்து அந்த டிரஸ்ஸை வாங்கி கேனாவுக்கு கொடுத்தபோது அவள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. 

 

துணியை எடுத்து Tailor கையில் கொடுத்ததுபோல, நம் வாழ்க்கையையும் ஆண்டவர் கையில் கொடுக்க வேண்டும். வேண்டாத துணிகளை Tailor cut பண்ணினதுபோல நம்மிடம் காணப்படும் கோபம், சண்டை, பொறாமை, பொய், திருட்டு இப்படிப்பட்ட பாவங்களை நீக்கிவிட்டு, இயேசுவைப்போல, அவர் பிள்ளையாய் வாழும்படி நம்மை சரிசெய்து விடுவார். Tailor தைப்பதற்கு fees வாங்கினதுபோல நம்மிடம் fees எதுவும் வாங்கமாட்டார். மாறாக அவர் உயிரையே நமக்கு fees ஆக கொடுப்பதற்குதான் இந்த பூமிக்கு வந்தார். 

 

என்ன குட்டீஸ்! Jesus உங்களிடம் கேட்பதெல்லாம் பாவம் நிறைந்த இருதயத்தைத்தான். பாவ இருளை நீக்கி பரிசுத்தர் வாழும் இடமாக உன் இதயத்தை தர நீ ஆயத்தமா? சுத்தமான இருதயத்தோடு அர்த்தமுள்ள கிறிஸ்துமஸ் கொண்டாட என் வாழ்த்துக்கள். 

- Sis. தெபொராள்

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al