Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 17-12-2022 (Christmas Special)
Share:

By Village Missionary Movement

Saturday, 17-Dec-2022

இன்றைய தியானம்(Tamil) 17-12-2022 (Christmas Special)

 

சபைகளுக்குள் அர்த்தமுள்ள கிறிஸ்துமஸ் 

 

“விசுவாசத்தில் பலவீனமுள்ளவனைச் சேர்த்துக்கொள்ளுங்கள்; ஆனாலும் மன ஐயங்களைக் குற்றமாய் நிர்ணயிக்காமலிருங்கள்.” - ரோமர் 14.1 

 

ஒரு கல்லூரி வளாகத்தில் ஊழியர்களுக்கென்று ஒரு கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. அந்தக் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த கத்தோலிக்க மாணவர்கள் அக்கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டி விரும்பி கலந்துகொண்டனர். அங்கு பிரசங்கித்த ஊழியர், கத்தோலிக்கர் குறித்தும் அவர்கள் வழிபாடு தவறானது என்றும் கூறிய வார்த்தைகள், அதில் பங்குபெற்ற மாணவர்களை துக்கத்தால் நிறையச் செய்தது. ஏனென்றால் இந்த மாணவர்கள் தங்களது மனபாரமான வாழ்க்கையில் ஒரு மறுமலர்ச்சி ஏற்படாதா என்று எண்ணி மிகவும் விருப்பத்தோடு கலந்துகொண்ட அவர்களுக்கு வெறுப்புதான் ஏற்பட்டது. ஆவிக்குரிய காரியங்களைக் குறித்தும், பரிசுத்த ஆவியானவரைக் குறித்தும் அவர்கள் பிரசங்கம் செய்தாலும், அதை ஏற்றுக்கொள்ள மனமின்றி காணப்பட்டனர். சிலை வணக்கம் வேதத்திற்கு புறம்பானது என்றாலும், அதை கூறிய விதத்தில் கிறிஸ்துவின் சிந்தை இல்லாமல் போனதே இதற்கு காரணம். 

 

வேதத்தில் பேதுரு, கொர்நேலியுவை சந்திப்பதற்கு முன்பாக அவருக்குள் இருந்த மாம்சீக சிந்தை என்னவென்றால், அந்நிய ஜாதியானோடு கலந்து அவனிடத்தில் போக்குவரத்துமாயிருப்பது யூதனானவனுக்கு விலக்கப்பட்டது என்றே எண்ணினார். ஆனால் தேவன் சுத்தமாக்கினதைத் தீட்டாக எண்ணாதே என்ற விளக்கத்தை தரிசனத்தின் மூலம் பெற்றுக்கொண்டவுடன் அவர் தன் எண்ணத்தை மாற்றிக்கொண்டார். பின்பு அந்நிய ஜாதியான கொர்நேலியு வீட்டிற்குச் சென்று தேவ சமூகத்தில் கூடியிருந்த யாவருக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கித்தார்.

 

கொர்நேலியு, யூத ஜனங்கள் எல்லாராலும் நற்சாட்சி பெற்றவர்தான், அநேகருக்கு நன்மை செய்தவர்தான், யூத ஜனங்களுக்குப் பரீட்சயமானவர்தான். பேதுருவைக் குறித்துப் பார்த்தால் அவர் கிறிஸ்துவை பகிரங்கமாகப் பிரசங்கிக்கிறவர்தான். ஆனால் பேதுரு யூத கோட்பாட்டின்படி புறஜாதியாரை தங்கள் வீட்டிற்குள் ஏற்றுக்கொள்ளாதவராகவும் இருந்தார்கள். 

 

பிரியமானவர்களே! உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்தில் அன்புகூருவாயாக என்று கற்பனைகளைப் பெற்ற நாம் சபைகளுக்குள் எத்தனை பிரிவினைகளாகப் பிரிந்து கிடக்கிறோம். நம்மைப் போல மற்றவர்களை நேசிக்க மனமுண்டா? மற்றவர்களிடத்தில் எந்த அளவிற்கும் அவர்கள் சஞ்சலப்படாதபடிப் பேச முயற்சிக்கிறோமா? ஒருவரிடத்தில் மற்றவர்களுக்காய்ப் பரிந்து பேசுகிற இருதயம் நமக்குண்டா? சபைகளுக்குள் ஆண்டவரைப் பற்றி அறியாத ஜனங்கள் வந்தால் அவர்களை உங்கள் கூட்டணிக்குள் சேர்த்துக்கொள்ள மனவாஞ்சை இருக்கிறதா? இப்படி நம்மிடத்தில் நாம் பல கேள்விகளைக் கேட்டு அதை எப்படி வசனத்தின்படி சரிசெய்யலாம் என்று சிந்தித்து செயல்பட நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம். இந்த கிறிஸ்துமஸ் கத்தோலிக்க மாணவர்கள் கிறிஸ்துவை அறிகின்ற அறிவில் தடைபட்டதுபோல் இல்லாமல் பேதுரு- கொர்நேலியு போல் புறஜாதிகளை 

நேசித்து ஆதரிக்கிறதாய் இருப்பதாக. ஆமென்.

- Mrs. ஏஞ்சலின் 

 

ஜெபக்குறிப்பு:

YouTube-ல் வெளிவரும் அதிகாலை ஆராதனை, சுகமளிக்கும் ஆராதனை மூலம் அநேகர் தேவ அன்பை ருசிக்க ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al deneme bonusu deneme bonusu veren siteler online casino online casino Online casino nz Best payout online casino nz jojobet jojobet giriş jojobet güncel giriş meritking meritking giriş meritking güncel giriş perabet perabet giriş perabet güncel giriş holiganbet holiganbet giriş holiganbet güncel giriş Meritking Perabet Holiganbet jojobet jojobet giriş jojobet güncel giriş bahsegel bahsegel bahsegel bahsegel perabet perabet giriş perabet perabet giriş holiganbet holiganbet giriş holiganbet holiganbet giriş belugabahis matbet romabet alobet alobet giriş bahissenin bahissenin giriş bayconticasino bayconticasino giriş atlasbet atlasbet giriş betcio betcio giriş grandpashabet grandpashabet giriş marsbahis marsbahis giriş matbet matbet giriş nakitbahis nakitbahis giriş pashagaming pashagaming giriş Meritking Meritking giriş imajbet imajbet giriş İmajbet Prizmabet Yakabet Betsat Betnano Restbet Perabet Perabet Giriş Perabet Güncel Giriş Cratosroyalbet