Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 15-12-2022 (Christmas Special)
Share:

By Village Missionary Movement

Thursday, 15-Dec-2022

இன்றைய தியானம்(Tamil) 15-12-2022 (Christmas Special)

 

ஸ்டார் நியூஸ்

 

“…அநேகரை நீதிக்குட்படுத்துகிறவர்கள் நட்சத்திரங்களைப் போலவும் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் பிரகாசிப்பார்கள்’’ - தானியேல்.12:3

 

கிறிஸ்துமஸ் என்றாலே வீட்டை சுத்தம் செய்வது, பெயிண்ட் அடிப்பது, குடில் பொம்மை அமைப்பது, வீட்டில் ஸ்டார் தொங்க விடுவது, புத்தாடைகள் வாங்குவது என்று மிக உற்சாகமாக இருப்போம். இந்நாட்களில் கிறிஸ்தவர்கள் மட்டுமல்ல, புறமத நண்பர்களும் தங்களது வீட்டில் ஸ்டார் தொங்கவிடுவதைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாகவே உள்ளது. நாம் நம் வீடுகளில் ஸ்டாரை தொங்கவிடுவதோடு நின்றுவிடாமல், ‘’நட்சத்திரத்தின் வேலையையும்’’ செய்யும் கூடுதல் பொறுப்பையும் பெற்றுள்ளோம்.

 

கிறிஸ்து பிறப்பிலே நட்சத்திரம் தேவன் தனக்கு கட்டளையிட்ட வேலையை நேர்த்தியாய் தொடங்கி, பிள்ளை இருந்த ஸ்தலத்திற்கு மேல் வந்து நிற்கும்வரை 

அவர்களுக்கு முன் சென்று காரியத்தை கச்சிதமாய் முடித்தது. அந்நட்சத்திரம் சாஸ்திரிகளை இயேசு பாலகன் பிறந்த வீட்டிற்கு எப்படி வழிநடத்தி, வழிகாட்டி வந்ததோ, அப்படியே நாமும் கூட நம்முடைய அன்றாட வாழ்விலே, பேசும் வார்த்தையிலே, நடக்கும் நடத்தையிலே, பிறரை இயேசுவண்டை வழிநடத்துகிற ஒரு நட்சத்திரமாக வாழவே கிறிஸ்தவ வாழ்வு நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.

 

அவர்கள் அந்த நட்சத்திரத்தைக் கண்டபோது மிகுந்த ஆனந்த சந்தோஷமடைந்தார்கள் என்று வாசிக்கிறோம். இன்று நம்முடைய வாழ்க்கையைப் பார்த்து சுற்றத்தாரும், உறவினரும், பெற்றோரும், சந்தோஷப்படுகின்றனரா அல்லது துக்கப்படுகின்றனரா? நாம் வழிகாட்டியாய் மட்டுமல்ல வாழ்ந்து காட்டுகிறவர்களாகவும் இருப்போமென்றால் பிறர் நம்மை மகிழ்வோடு அணுக முடியும் அல்லது நமது குணநலன்களைக் கண்டு ஒதுங்கியே செல்வர்.

 

ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒவ்வொரு ஓடு பாதையை தேவன் நியமித்திருக்கிறார். சில நட்சத்திரங்கள் தன் பாதையை வீட்டு விலகும்போது எரிந்து கீழே விழுவதை நம் கண்களால் காணமுடியும். நாமும் தேவன் நமக்கு நியமித்துள்ள பாதையை விட்டு விலகாதபடி தேவசித்தம் நிறைவேற நம்மை அர்ப்பணிப்போமானால் ஒளிவீசும் நட்சத்திரங்களைப் போல உலகிற்கு வெளிச்சமாயிருக்கலாம்.

 

ஸ்ட்ராங்காக மனதில் பதிந்த “ஸ்டார் நியூஸ்” என்றும் நம் நினைவில் இருந்து நம்மை தேவசித்ததிற்கு நேராய் வழிநடத்தட்டும்.

- Mrs. புஷ்பா சைமன்

 

ஜெபகுறிப்பு:

மருத்துவமனை ஊழியங்கள் மூலம் சந்திக்கப்படும் நபர்களின் சுகம் மற்றும் இரட்சிப்பிற்காக ஜெபியுங்கள்.  

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250



hacklink satın al holiganbet giriş holiganbet padişahbet bets10 extrabet royalbet süperbetin padişahbet betcio romabet giriş romabet queenbet bahiscasino betcio bahiscasino atlasbet matbet matbet giriş bahiscasino celtabet queenbet casibom jojobet