Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil)  21-02-2021 (Kids Special)
Share:

By Village Missionary Movement

Sunday, 21-Feb-2021

இன்றைய தியானம்(Tamil)  21-02-2021 (Kids Special)

மன்னித்து மறந்துவிடு 

“மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னித்தால், உங்கள் பரமபிதா உங்களுக்கும் மன்னிப்பார்.” – மத்தேயு 6:14

நிஷா....நிஷா என்று சத்தம்போட்டுக் கொண்டே வேகமாக ஓடி வந்தாள், அவளது தோழி திர்ஷா. இவர்கள் இருவரும் நெருங்கிய தோழிகள் மற்றும் 7ம் வகுப்பு படிக்கும் மாணவிகள். எங்கு சென்றாலும் ஒன்றாகவே செல்வார்கள். நிஷாவுக்கு பூக்கள் என்றால் அவ்வளவு பிரியம். ஏதாவது பூக்கள் உள்ள ஸ்டிக்கர் மற்றும் காலண்டர்கள் இருந்தால் உடனே அதை எடுத்து வைத்துக்கொள்வாள். 

ஒரு நாள் இவள் படித்துக்கொண்டிருந்த வகுப்பறையில் ஒரு பழைய காலண்டர் ஒன்று கிடந்தது. அதை எடுத்து பார்த்தால் அதில் 12 மாதத்திலும் பூக்கள் படம் காணப்பட்டது. இதைக் கண்ட நிஷாவுக்கு ஒரே சந்தோஷம். யாரிடமும் கேட்காமல் அதை எடுத்து வைத்துக் கொண்டாள். மறுநாள் காலையில் அவள் வகுப்பு ஆசிரியை அந்த காலண்டரில் முக்கியமானது ஏதோ குறித்து வைத்திருந்ததினால் அதைத் தேட ஆரம்பித்தார், காணவில்லை. அவர்கள் மாணவர்களிடம் யார் அந்த காலண்டரை எடுத்தது என்று விசாரித்தார்கள். நிஷாதான் எடுத்தாள் என்றார்கள். அந்நேரம் நிஷாவும் வகுப்பறைக்குள் நுழைந்தாள். ஆசிரியை கோபத்துடன் நிஷாவை பார்த்து ஏய் நிஷா நீதான் அந்த காலண்டரை எடுத்தியா? இப்படித்தான் யாரிடமும் கேட்காமல் எடுப்பாயா, என்று திட்டி குவித்தார்கள். நிஷா அமைதியான குரலில் Sorry miss அதில் பூக்கள் படம் இருந்ததினால் எடுத்துவிட்டேன், என்னை மன்னித்துவிடுங்கள், இனிமேல் அப்படிப்பட்ட தப்பை பண்ணவே மாட்டேன் என்று சொல்லி அழுதுவிட்டாள். ஆனால் அந்த ஆசிரியை அவளை மன்னிக்க மனதில்லாமல், ஒரு அட்டையை எடுத்து அதில் “நான் ஒரு திருடி” என்று எழுதி அதை அவள் கழுத்தில் மாட்டி ஒவ்வொரு வகுப்பாக அவளை கூட்டிக்கொண்டு காட்டினார்கள். மற்ற மாணவர்கள் அவளை பார்த்து சிரிக்கவே, நிஷாவால் அந்த அவமானத்தை தாங்கிக்கொள்ள முடியவில்லை, உள்ளம் உடைந்தது. School முடிந்து மாலையில் வீட்டிற்கு சென்ற நிஷா, வீட்டின் கதவைப் பூட்டிக்கொண்டு, வகுப்பறையில் தனக்கு நடந்த ஒவ்வொரு காரியங்களை நினைத்து அழுது உள்ளம் உடைந்தவளாய் வீட்டுக்குள்ளேயே அடைபட்டுக் கிடந்தாள். யாரிடமும் பேச வெட்கப்பட்டாள். அதன்பின் படிப்பையும் தொடர விரும்பவில்லை. தவறை மன்னிக்காததால் ஒரு மாணவியின் பிரகாசிக்க வேண்டிய எதிர்காலம் மங்கிப்போனது. 

அன்பு தம்பி, தங்கச்சி! அந்த ஆசிரியை அவளை மன்னித்திருந்தால் எவ்வளவு நன்றாயிருந்திருக்கும். நீ யாரையும் மன்னிக்காமல் இருக்காதே.  உனக்கோ அல்லது உன் குடும்பத்திற்கோ விரோதமாய் எழும்பினவர்கள் மனம்மாறி மன்னிப்பு கேட்க வரும்பொழுது மனதார மன்னித்துவிட வேண்டும். அப்போதுதான் இயேசப்பா நீ செய்த தவறையும் மன்னிப்பார். Ok வா. 
-    Mrs. சாராள் சுபாஷ்   

இந்த தியானச் செய்தியை பெற்றுக்கொள்ள
Whats app: 
தமிழில் பெற -  +91 94440 11864
ஆங்கிலத்தில் பெற - +91 86109 84002
ஹிந்தியில் பெற - +91 93858 10496
தெலுங்கில் பெற - +91 94424 93250

Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.vmmorg.template.msmapp

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250



hacklink satın al