Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 12-12-2022 (Christmas Special)
Share:

By Village Missionary Movement

Monday, 12-Dec-2022

இன்றைய தியானம்(Tamil) 12-12-2022 (Christmas Special)

 

முன்மாதிரியில் அர்த்தமுள்ள கிறிஸ்துமஸ்

 

“உங்களை அழைத்தவர் பரிசுத்தராயிருக்கிறது போல நீங்களும் உங்கள் நடக்கைகள் எல்லாவற்றிலேயும் பரிசுத்தராயிருங்கள்” - 1பேதுரு 1.15

 

ஒரு வகுப்பறையில் ஆசிரியர் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அவர் எல்லா மாணவர்களிடமும், “உங்களுடைய ரோல் மாடல் யார்?” என்று கேட்டார். ஒவ்வொருவரும் அப்துல்கலாம், காந்திஜி, கிரண்பேடி... என்றெல்லாம் சொல்லிக்கொண்டே போனார்கள். ஒரு மாணவன் எழுந்து Jesus என்றான். வகுப்பறையில் உள்ள அனைவரும் அவனை ஆச்சரியமாக பார்த்தனர். 

 

பிரியமானவர்களே! நம்மால் இந்த பதிலைக் கூற முடியுமா? நம்முடைய நடை, உடை, பாவனை யாரை பிரதிபலிக்கிறது. நாம் யாரை முன்மாதிரியாகக் கொண்டு வாழ்கிறோம்? அரசியல்வாதியையா? நடிகர், நடிகைகளையா? விளையாட்டு வீரர்களையா? அல்லது கிறிஸ்துவையா? சற்று சிந்திப்போம். கிறிஸ்து பிறப்பைக் கொண்டாடும் நாம் அவரைப் போல் இருக்கிறோமா? கிறிஸ்துவின் பிள்ளைகளாகிய நம்மிடம் அவரின் சாயல், அவரின் சுபாவம் உண்டா? வேதத்தில் கூட பேதுருவைப் பார்த்து பெண்மணி ஒருவர் உன்னுடைய பேச்சு நசரேயனாகிய இயேசுவைப் போல் உள்ளது என்று கூறினார். ஆம், சில வருடங்களாகக் கூட இருந்த பேதுருவின் பேச்சு அவரை ஒத்திருக்கிறது. ஆனால் பல வருடங்களாக கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட நம்முடைய பேச்சு யாரை ஒத்திருக்கிறது. சற்று சிந்திப்போம்.

 

இயேசு இந்த பூமியில் வாழும் நாட்களில் பாவம் நிறைந்த உலகில் எப்படி பரிசுத்தமாய் வாழ்வது என்று வாழ்ந்து காட்டினார். பெற்றோருடன் அவர் வாழ்ந்த காலத்தில் அவர்களுக்கு கீழ்ப்படிந்திருந்தார். எந்த நோக்கத்திற்காக பிதா அனுப்பினாரோ அதை கடைசி மட்டும் நிறைவேற்றி முடித்தார் (யோவான் 19:30). இயேசுவை சுற்றி இருந்தவர்கள், அவருடைய வார்த்தையால் மனதுருக்கத்தால் கவர்ந்து இழுக்கப்பட்டனர். ஒரு ஒளியாக வாழ்ந்து காட்டினார். தன்னை இகழ்ந்தவரின் பாவத்தையும் மன்னித்தார். ஒருவன் கிறிஸ்துவுக்குள் இருந்தால் அவன் புதுச் சிருஷ்டியாயிருக்கிறான் என்ற வசனத்தின் படி நாமும் வாழ்வோம். இயேசு கிறிஸ்துவை மாதிரியாகக் கொண்டு வாழ்வோம். 

 

ஆனால் இன்று பலர் பாவத்தைப் போக்க வந்த கிறிஸ்துவின் பிறந்த நாளை பாவம் செய்து (குடி, போதை) கொண்டாடுகின்றனர். இது தேவனை வேதனைப்படுத்தும் காரியம். மனந்திரும்ப வேண்டிய பகுதியிலே மனம் திரும்புவோம். வரும் புதுவருடத்தில் நாம் எல்லாக் காரியத்திலும் இயேசுவை முன்மாதிரியாக வைத்து வாழ்வோம். பரலோக சிலாக்கியம் பெறுவோம். ஆமென்.

- Mrs.திவ்யா அலெக்ஸ்

 

ஜெபக்குறிப்பு:

தினந்தோறும் ஒவ்வொரு ஊழியரும் 100 கைப்பிரதிகள் கொடுத்து வருகின்றனர். கைப்பிரதியைப் பெறும் நபர்களுக்காக ஜெபியுங்கள்.  

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250



hacklink satın al