Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 11-12-2022 (Kids Special)
Share:

By Village Missionary Movement

Saturday, 10-Dec-2022

இன்றைய தியானம்(Tamil) 11-12-2022 (Kids Special)

 

அன்பில் அர்த்தமுள்ள கிறிஸ்துமஸ்

 

“தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்” - யோவான்.3.16

 

ஹலோ குட்டீஸ்! கிறிஸ்துமஸ் Program எப்படி போய்க்கொண்டிருக்கிறது. ஜாலியாக இருக்கீங்களா? Ok ... இன்றைக்கு பறவைகள், விலங்குகள் எல்லாம் நமக்கு அர்த்தமுள்ள கிறிஸ்துமஸை கொண்டாட என்ன சொல்லி தரப் போகுதுனு கதைகேட்கலாமா? 

 

காட்டு ராஜா திடீரென ஒரு கூட்டத்தை கூட்டியது. கடவுளுக்குப் பயந்த நல்ல அன்பான ராஜா சொன்னதும் எல்லா விலங்குகளும் ஒன்று கூடின. திடீரென்று எதற்காக இந்தக் கூட்டம் என்று கேட்டது யானை. இரண்டு வருடமாக பறவைகளுக்கும், நமக்கும் இருக்கிற சண்டையால் கிறிஸ்துமஸ் Celebration நடைபெறவில்லை. இந்த வருடமாவது எல்லாரும் ஒற்றுமையாக கிறிஸ்துமஸ் கொண்டாட வேண்டுமென்று ராஜா நினைக்கிறார் என்றது மான். உடனே குரங்கு, மான், முயல், என எல்லா விலங்குகளும் ஆமா... ஆமா...என்றன. சிங்கம் வந்ததும், ஆரம்ப ஜெபமும், வரவேற்புரையும் முடிந்ததும் ராஜா பேச ஆரம்பித்தது. இன்று முதல் காட்டில் சண்டை, சச்சரவுகள் வரக்கூடாது. எல்லாரும் ஒருவருக்கொருவர் உதவி செய்து அன்பாயிருக்கவேண்டும் என்றது. எல்லா விலங்குகளும் சரி என்று கோரசாக கூறின.

 

அந்நேரம் பறந்து சென்ற காகம், ‘’கூட்டம் நடைபெறுகிறது. நம்மை அழைக்கவில்லையே’’ என்று புறாவிடம் கூறியது. சரி நாம் எல்லாப் பறவைகளையும் அழைத்துச் செல்லலாம் என்று அழைப்பு விடுத்தது. தலைவரே எங்களுக்கு கூட்டம் என்பதை சொல்லவில்லை என்றது காகம். நீங்கள் வந்தாலே குழப்பம்தான் என்றது கரடி. நாங்கள் என்ன செய்தோம் என்று பறவைகள் கத்தி கூச்சலிட்டன. சிங்கம் கெர்ச்சித்ததும் எல்லாம் அமைதியாயின. கிறிஸ்துமஸ் என்றால் பிதாவானவர் நம்மீது அன்பு வைத்து தம் குமாரனை இந்த பூமிக்கு அனுப்பின நாள். நாமோ சண்டையிட்டு கோபத்துடனும் வெறுப்புடனும் கிறிஸ்துமஸ் கொண்டாடலாமா? 

 

நாம் எல்லோரும் வேற்றுமையைக் கலைந்து ஒற்றுமையோடு அன்பில் அர்த்தமுள்ள கிறிஸ்துமஸ்- ஆக கொண்டாடப் போகிறோம் என்ற ராஜாவின் கர்ஜனை சத்தத்தைக்கேட்டதும் ... விலங்குகளும் பறவைகளும் நாங்களும் அப்படியே செய்வோம் என்றது. 

 

குட்டி தம்பி தங்கச்சி, நீங்க எப்படி கிறிஸ்துமஸ் கொண்டாடப்போறீங்க. யாரோடவாது சண்டைபோட்டு பேசாம மன்னிக்க முடியாம இருக்கீங்களா? உடனே Sorry கேட்டு அன்பில் அர்த்தமுள்ள கிறிஸ்துமஸ் கொண்டாடிப் பாருங்க. அன்பின் தேவன் உங்கள் கொண்டாட்டத்தில் சந்தோஷப்படுவார். Ok குட்டீஸ். Advance Happy Christmas.

- Mrs. அன்புஜோதி ஸ்டாலின்  

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet jojobet giriş matbet giriş holiganbet giriş matbet sahabet onwin bets10 bets10 giriş bets10 güncel giriş betcio atlasbet casibom giriş deneme bonusu casibom vaycasino vaycasino giriş meritking meritking giriş cratosroyalbet realbahis realbahis giriş jojobet jojobet jojobet jojobet jojobet holiganbet holiganbet cashwin esbet tambet casibom casibom giriş casibom casibom giriş imajbet imajbet giriş imajbetapp grandpashabet grandpashabet giriş grandpashabet güncel bets10 bets10 giriş bets10 güncel giriş matbet matbet giriş alobet betmartin pashagaming ultrabet lunabet betzula meritking jojobet