By Village Missionary Movement
Friday, 09-Dec-2022இன்றைய தியானம்(Tamil) 10-12-2022 (Christmas Special)
புறஜாதிகளுக்கு ஒளி
“புறஜாதிகளுக்குப் பிரகாசிக்கிற ஒளியாகவும், உம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலுக்கு மகிமையாகவும்“ - லூக்கா2.30
இயேசுகிறிஸ்துவின் பிறப்பை நினைவுகூரும் வண்ணமாக இம்மாதம் கிறிஸ்துமஸ் கொண்டாடப் போகிறோம். நாம் அதை எப்படி நினைவுகூர்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை சற்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். புத்தாடை அணிவதும், பலவிதமான கேக்குகள், இனிப்புகள், பலகாரங்கள் சாப்பிடுவதும், விதவிதமான பிரியாணி வகைகளை உண்பதும், நம் மகிழ்ச்சியை நண்பர்களுடன் கொண்டாட மதுபானங்கள் அருந்தி மகிழ்வதும்தான் கிறிஸ்துமஸ் என்றாகிவிட்டது. இது தான் கிறிஸ்துமஸ் கொண்டாட்டமா? இப்படியா கிறிஸ்து பிறப்பின் நற்செய்தியைப் புறஜாதி மக்களுக்கு அறிவிப்பது! இதையா ஆண்டவர் விரும்புகிறார்?
புறஜாதிகளும் பண்டிகை கொண்டாடும் போது புத்தாடை அணிந்து, விருந்து உண்டு உணவுகள் புசித்து பல வித கேளிக்கைகள், களியாட்டுகளில் ஈடுபட்டு குடித்து, வெறித்து நாளைச் செலவிடுகிறார்கள். நாமும் கிறிஸ்து பிறப்பின் பண்டிகையை இப்படித்தானே கொண்டாடுகிறோம். அவர்களுக்கும், நமக்கும் என்ன வித்தியாசத்தைக் காண்பிக்கிறோம்.
தேவனுடைய ராஜ்யம் புசிப்பும் குடிப்புமல்ல, அது நீதியும், சமாதானமும், பரிசுத்த ஆவியினாலுண்டாகும் சந்தோஷமாய் இருக்கிறது என்று வேதம் கூறுகிறது. அவருடைய நீதியையும், சமாதானத்தையும், அதை அறியாத மக்களுக்கு எடுத்துச் சொல்கிறோமா? அவர் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறாரே, அந்த மெய்யான ஒளியை அறியாத மக்களுக்கு அறிமுகம் செய்கிறோமா? நாமும் மற்றவர்களைப் போல, வெறும் கொண்டாட்டத்தில் ஈடுபடாமல், கிறிஸ்துவை மற்றவர்களுக்குப் பரிசாகக் கொடுப்போம். இதுவே அர்த்தமுள்ள கிறிஸ்துமஸ் பண்டிகையாக இருக்கும்.
கிறிஸ்துமஸ்-க்கு என்ன புடவை, துணிமணிகள் நகைகள் வாங்குவது என்று யோசியாமல், யார் யாருக்கெல்லாம் கிறிஸ்துவை அறிமுகப்படுத்தலாம் என்று யோசித்து செயல்படுவோம். கண்ணுக்கு எட்டிய தூரத்திலுள்ள ஏழைக் குழந்தைகளுக்கு நல்ல உணவு, நல்ல உடைகள் கொடுக்கலாம். அப்படிச் செய்வதன் மூலம் கிறிஸ்துவின் தன்னலமற்ற அன்பை அவர்களுக்கு வெளிப்படுத்தலாம். இதுதான் இயேசு விரும்பும் கிறிஸ்மஸ். இப்படிச் செய்ய நம்மை அர்ப்பணிப்போமா?
- Mrs. புவனா தனபாலன்
ஜெபக்குறிப்பு:
ஒரு கிராமத்தில் கிறிஸ்துமஸ் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்த ரூ.5000/- தேவை. 3000 கிராமங்களில் நடத்த திட்டமிட்டுள்ளோம். தேவன் பொறுப்பெடுக்க ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250