Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 08-12-2022 (Christmas Special)
Share:

By Village Missionary Movement

Wednesday, 07-Dec-2022

இன்றைய தியானம்(Tamil) 08-12-2022 (Christmas Special)

 

கற்றுக்கொடுப்பதில் அர்த்தமுள்ள கிறிஸ்துமஸ்

 

“பலியையல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன் என்பதின் கருத்து இன்னதென்று போய்க் கற்றுக்கொள்ளுங்கள்;…” – மத்தேயு 9:13

 

இரண்டாம் உலகப்போர் உச்சத்தை அடைந்திருந்த நேரம்! போலந்து நாட்டில் உள்ள ஒரு ஆலயத்தில் யூதர்களும், யூத நபிகளும் ஜெபித்துக் கொண்டிருந்தனர். அப்பொழுது ஒரு புதிய ஆள் கிழிந்த ஆடையுடன் உடலில் இரத்தக் காயங்களுடன் ஆலயத்திற்குள் ஓடி வந்தான். அங்கு ஜெபித்துக் கொண்டிருப்பவர்களைப் பார்த்து, அங்கே உங்களுக்காக நாங்கள் போராடிக் கொண்டிருக்கிறோம், நீங்களும் வாருங்களேன் என அழைப்பு விடுத்தான். அங்கிருந்தவர்கள் இது வழக்கமாக நாங்கள் ஜெபிக்கும் நேரம் என்றனர். அபொழுது எங்கிருந்தோ ஒரு குரல் கேட்டது, “அவர்களுடன் சென்று போராடுங்கள்” என்று. 

 

இது பண்டிகை மாதம்! கிறிஸ்துமஸ்-க்கு ஆயத்தமாகும் கிறிஸ்தவர்களின் கூட்டம் ஒருபுறம், புத்தாண்டை கோலாகலமாக கொண்டாடத் துடிக்கும் மக்கள் கூட்டம் மறுபுறம்! இந்நேரத்தில் நம் எதிர்கால சந்ததிக்கு எதனைக் கற்றுக் கொடுக்கப் போகிறோம். பாரம்பரியக் கொண்டாட்டங்களையா, மாறாக தேவைகளோடு இருக்கும் மக்களின் துயர் தீர்க்கவா? மாற்கு 3:1-6ல் சூம்பின கையை உடையவன் தேவாலயத்தில் இருப்பதை இயேசு கண்டு அவனை சுகமாக்கினார். பரிசேயர்களுக்கு சுகம் பெற்றது மகிழ்ச்சியைத் தரவில்லை. மாறாக ஓய்வுநாளில் குணமாக்கினதால் குற்றம் பிடிக்கவே வகை தேடினார்கள். இயேசு அவர்களைக் கடிந்து கொண்டார். 

 

ஆம், எனக்கன்பானவர்களே! இந்த பண்டிகை நாட்களில் நாம் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம்? நம் சந்ததிக்கு எதனைக் கற்றுக் கொடுக்கிறோம்? ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என்று பண்டிகையில் நாம் சந்தோஷமாயிருப்பது எப்படி என்றா? அல்லது தேவையோடு இருக்கும் மக்களுக்கு சென்று உதவுவதையா? சடங்காச்சாரமாய் அல்ல, பாரம்பரியமாயுமல்ல! பாரம்பரியங்களைக் கடைப்பிடித்து, தேவையானதை விட்டுவிட்ட பரிசேயர்களைக் கர்த்தர் கடிந்து கொண்டதைப் போல தேவையுள்ளவைகள் எதுவோ அதனைக் கடைப்பிடிக்க நம் தலைமுறைகளுக்கு கற்றுக்கொடுப்போம். நான் உனக்குப் போதித்து நீ நடக்க வேண்டிய வழியை காட்டுவேன் என்ற நம் தேவனுடைய வழியில், அவருடைய வார்த்தையின்படி செய்ய கவனமாயிருப்போம். வேதத்தின் படி நடக்கிற உத்தம மார்க்கத்தாராக வாழ்வோம்! தேவனுக்கென்று பிரகாசிப்போம். நம் வாழ்நாளில் ஒவ்வொருநாளும் நல்ல கிறிஸ்தவர்களாய் வாழ்ந்து அர்த்தமுள்ள கிறிஸ்துமஸைக் கொண்டாடுவோம். 

- Mrs. மஞ்சுளா 

 

ஜெபக்குறிப்பு:

பசித்தோருக்கு உணவளித்தல் திட்டத்தின் மூலம் தினந்தோறும் பயன்பெறும் நபர்கள் ஆண்டவரின் அன்பை அறிய ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250



hacklink satın al