Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 04-12-2022 (Kids Special)
Share:

By Village Missionary Movement

Sunday, 04-Dec-2022

இன்றைய தியானம்(Tamil) 04-12-2022 (Kids Special)

 

கொடுப்பதில் அர்த்தமுள்ள கிறிஸ்துமஸ்

 

“...மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள்...” - மத்தேயு 25:40

 

ஹாய் குட்டீஸ், கிறிஸ்துமஸ் வரப்போகுது. புது டிரஸ் எடுத்தாச்சா? X-mas Program-க்கு ரெடிதானா? Leave-வை சந்தோஷமாய் enjoy பண்றீங்களா? 

 

உங்களைப் போலவே கேட்டி-யும், செல்சி-யும் கிறிஸ்துமஸ் விடுமுறை நாட்களில் வீட்டை சுத்தம்பண்ணவும், சாயங்காலம் விளையாடவும், சைக்கிள் ஓட்டவும் இப்படி ரொம்ப ஜாலியாகவே இருந்தனர். கேட்டி நீ அப்பாகிட்ட x-mas gift என்ன கேட்கப் போகிறாய். நான் ரிமோட் கார் கேட்கப் போகிறேன், நீ... நானா Keyboard கேட்கப்போறேன் என்றாள் செல்சி. சரி அப்பா வரட்டும், அதுவரை சைக்கிள் ஓட்டி விளையாடலாம் என்று சைக்கிள் ஓட்டப் போனாங்க. 

 

அப்போது மிகவும் ஏழ்மை நிலையில் ராபர்ட் அங்கிள் குப்பை வண்டியை ஓட்டிக்கொண்டு வந்தார். அங்கிள் உங்க பையன் ரோகித்-க்கு X-mas gift-ஆ என்ன வாங்கித்தருவீங்கன்னு கேட்டி-யும், செல்சி-யும் கேட்டாங்க. அவன் குட்டி சைக்கிள் கேட்டான். போதுமான பணம் இல்லாததால் வாங்க முடியலைன்னு சொன்னார். Evening அப்பா வந்ததும் உங்களுக்கு என்ன gift வேணும், சொல்லுங்க அப்பா வாங்கித் தர்ரேன்னு சொன்னார். 

 

கேட்டி வேகமாக ஓடிப்போய் அப்பாவோட காதுக்குள் தன் gift-ஐ சொன்னாள். செல்சியும் அப்படியே சொன்னாள். என்ன இரண்டுபேரும் குட்டி சைக்கிள் கேட்கிறீங்க என்று ஆச்சரியத்தோடு கேட்டார் அப்பா. நம்ம பக்கத்துத் தெருவில் இருக்கிற ரோகித்துக்கு சைக்கிள் வேண்டுமாம் என்றார்கள். அப்பா புரிந்துகொண்டார். ரோகித் குடும்பத்தை X-mas விருந்துக்கு அழைத்தார். அவர்களோடு இணைந்து X-mas கொண்டாடினார்கள். ரோகித்துக்கு சைக்கிள் present பண்ணியது, உண்மையாகவே எல்லையில்லா சந்தோஷம் அவர்கள் உள்ளத்தை நிரப்பியது. 

 

அன்பு செல்லங்களே! நாம் சந்தோஷமாக இருப்பதற்கு தேவன் தம்முடைய குமாரனையே நமக்காகக் கொடுத்தார். நாமும் இந்த X-mas நாட்களில் ஏழை எளிய மக்களை நினைத்து அவர்களின் தேவைகளை நிறைவேற்றி அர்த்தமுள்ள கிறிஸ்துமஸ் கொண்டாடி ஆண்டவரின் செல்லப் பிள்ளைகளாய் மாறி விடுவோம். என்ன குட்டீஸ்! உண்டியல் பணம், Pocket money இவைகளையெல்லாம் எடுத்து இல்லாதோருக்கு கொடுத்துப் பாருங்கள். பரலோகத்தில் உங்கள் பலன் மிகுதியாயிருக்கும். Ok குட்டித் தங்கங்களே! அர்த்தமுள்ள X-mas கொண்டாட என் வாழ்த்துக்கள்.

- A. பியூலா

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250



hacklink satın al holiganbet giriş holiganbet padişahbet bets10 extrabet royalbet süperbetin padişahbet betcio romabet giriş romabet queenbet bahiscasino betcio bahiscasino atlasbet matbet matbet giriş bahiscasino celtabet queenbet casibom jojobet