Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 03-12-2022 (Christmas Special)
Share:

By Village Missionary Movement

Saturday, 03-Dec-2022

இன்றைய தியானம்(Tamil) 03-12-2022 (Christmas Special)

 

நண்பர்களுக்குள் அர்த்தமுள்ள கிறிஸ்துமஸ்

 

“தீவிரமாய் வந்து, மரியாளையும், யோசேப்பையும் முன்னணையிலே கிடத்தியிருக்கிற பிள்ளையையும் கண்டார்கள். “ - லூக்கா 2:16 

 

தேவகுமாரன் மனிதனாய்ப் பிறந்த நற்செய்தி முதன்முதலில் நண்பர்களுக்கே அறிவிக்கப்பட்டது. ஆம், ஒரே இடத்தில மந்தையை மேய்த்து , சமைத்து , உண்டு உறங்கின மேய்ப்பர்கள் ஒரு நண்பர்கள் கூட்டம் தான் என்பதில் சந்தேகமில்லை. நண்பர்கள் தங்களுக்குள் எடுக்கும் தீர்மானத்தை தள்ளிப் போடமாட்டார்கள், தீவிரமாய் நிறைவேற்றுவார்கள். அதை என்ன செய்ய , இதை யாரிடமும் கொடுக்க என்றெல்லாம் ரொம்ப யோசிக்கமாட்டார்கள். அதேபோலத்தான் மேய்ப்பர்களும்! தூதன் இப்படி சொல்லி விட்டு போய்விட்டாரே! மந்தையை யார் வசத்தில் விட , யார் அவைகளுக்குத்தண்ணீர் காட்டுவார்கள் என்றெல்லாம் யோசித்து காலம் தாழ்த்தாமல் தீவிரமாய் செயல்பட்டனர் . அது போல நாமும் நாம் அறிந்திருக்கிற இயேசு பிறப்பின் செய்தி நற்செய்தியாய் இருப்பதினால் தீவிரமாய் செயல்பட்டு இயேசுவை அறியாத நம் நண்பர்களும் இயேசுகிறிஸ்துவைக் காணும்படி வழிநடத்திட வேண்டும். அவன் என்ன நினைப்பானோ அன்பு கெட்டுவிடுமோ என்ற சாக்குப்போக்கான கேள்விகளை தூர தள்ளிவிட்டு தீவிரமாய் செயல்படுங்கள். அவர்களை கிறிஸ்துமஸ் தினத்தன்று உங்கள் வீட்டிற்கு அழைத்து இயேசுகிறிஸ்து உங்கள் உள்ளத்தில் வந்த சாட்சியை பகிர்ந்துகொண்டு, அதனால் உங்கள் வாழ்வில் கிடைத்த ஆசீர்வாதத்தையும் கூறி நீங்களும் வந்து பாருங்கள் என்று வெளிப்படையாக நெற்றியில் அடித்தாற்போல் சொல்லி விடுங்கள். இதேப் போல் இன்னொரு தருணம் கிடைக்குமென்பது என்ன நிச்சயம்? அடுத்ததாக மேய்ப்பர்கள் பிள்ளையைக் குறித்து சொல்லப்பட்ட செய்தியை பிரசித்தம் செய்தனர் . ஆம், இதுபோல நாமும் செய்ய வேண்டும். உங்கள் கிறிஸ்தவ நண்பர்களை மாதமொருமுறை ஒருங்கிணைத்து அருகில் உள்ள கிராமங்களுக்கு ஊழியம் செய்ய அழைத்து செல்லுங்கள். முதலில் சிறுவர் ஊழியம், Tracts கொடுப்பதில் துவங்குங்கள் . பின் எவ்வளவு பெரிய எழுப்புதல் உண்டாகும் என்று காண்பீர்கள். நீங்கள் வழிநடத்தும் பிள்ளைகள் போதகராய், மிஷனெரியாய் உருவாகிவிடுவார்கள்.

 

மூன்றாவதாக, மேய்ப்பர்கள் தேவனை மகிமைப்படுத்தினர். ஆம் நண்பர்களாக கூடும் நேரத்தில் இணைந்து ஜெபிக்கலாம். சாதாரணமாய் இது ஆரம்பிக்கப்படலாம். ஆனால் இரண்டு மூன்று பேர் கூடி ஜெபிப்பதின் பலனைக் காணும் போது ஆச்சரியமாயிருக்கும். இப்படிப் பணியிடங்களில், கடையில் நண்பர்களோடு இணைந்து தேவனுக்காய் செயல்படுவோம். அர்த்தமுள்ள கிறிஸ்துமஸைக் கொண்டாடுவோம்.  

- Mrs. அன்பு ஜோதி ஸ்டாலின் 

 

ஜெபக்குறிப்பு:

இம்மாதத்தில் நம்முடைய பணித்தளங்களில் நடைபெறும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் நபர்கள் இரட்சிக்கப்பட ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet jojobet giriş matbet giriş holiganbet giriş matbet sahabet onwin bets10 bets10 giriş bets10 güncel giriş betcio atlasbet casibom giriş deneme bonusu casibom vaycasino vaycasino giriş meritking meritking giriş cratosroyalbet realbahis realbahis giriş jojobet jojobet jojobet jojobet jojobet holiganbet holiganbet cashwin esbet tambet casibom casibom giriş casibom casibom giriş imajbet imajbet giriş imajbetapp grandpashabet grandpashabet giriş grandpashabet güncel bets10 bets10 giriş bets10 güncel giriş matbet matbet giriş alobet