Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 30-11-2022
Share:

By Village Missionary Movement

Wednesday, 30-Nov-2022

இன்றைய தியானம்(Tamil) 30-11-2022

 

குடிசையில் தீ

 

“…இதெல்லாம் எனக்கு விரோதமாய் நேரிடுகிறது...” - ஆதி.42:36

 

நடுக்கடலில் கப்பல் ஒன்று, பயங்கர புயலில் சிக்கி, பாறையில் மோதி சுக்கு நூறானது. ஒருவர் மாத்திரம் கட்டை ஒன்றைப் பற்றிக் கொண்டு மூன்று நாட்கள் கடலில் மிதந்து, மனித நடமாட்டம் அற்ற ஒரு தீவை அடைந்தார். அங்கு ஒரு குடிசையைக் கட்டி மிருகங்களை வேட்டையாடி, சாப்பிட்டு வாழ்ந்து வந்தார். பகலில் மரத்தில் ஏறி, ஏதாவது கப்பல் வருகிறதா? என்று பார்ப்பார். என்னை தாய்நாடு கொண்டு சேர்க்க கப்பல் அனுப்புங்க இயேசப்பா என்று அடிக்கடி ஜெபிப்பார். ஒரு நாள் வேட்டையாடித் திரும்பினபோது, அவரது குடிசை தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. பார்த்ததும் கதறி அழுதார். சற்று நேரத்தில் உயிர் மீட்சி படகு ஒன்று வருவதைப் பார்த்தார். வந்த மாலுமி “நீ இவ்வளவு பெரிய நெருப்பைக் கொளுத்தினதினால் தான் மனிதர் இங்கு இருக்கலாம் என்று எண்ணி வந்தோம்” என்று கூறி அவரை அழைத்துச் சென்றார். நியாயாதிபதிகள் 6 ஆம் அதிகாரத்திலே, கிதியோன், தனக்கு தரிசனமான தூதரிடம், கர்த்தர் எங்களோடு இருந்தால் இவையெல்லாம் எங்களுக்கு நேரிடுவானேன் என்றான். ஆனால் இந்த சூழ்நிலை மூலமாக கர்த்தர் கிதியோனை ஒரு இரட்சகனாக உருவாக்கினார். அவனை ஒரு பராக்கிரமசாலியாகப் பார்த்தார்.

 

வேதத்திலே யாக்கோபு என்ற பக்தர் தேவனோடு ஜெபத்தில் போராடி ஜெயித்தவர். ஆனால் தான் அதிகமாக நேசித்த மகன் யோசேப்பை இழந்தது, அவருக்குத் தாங்க முடியாத துயரத்தை அளித்தது. அது பின்னால் வரப்போகிற பஞ்சத்தில் அவரையும் அவரது குடும்பத்தையும் காப்பாற்ற தேவன் செய்த அன்பின் செய்கை என்று அறியாமல், எல்லாம் அவருக்கு விரோதமாய் நேரிட்டது போல் தோன்றியது.

 

அன்பான சகோதர, சகோதரிகளே! இந்த மாதிரியான காரியங்கள் நமது வாழ்விலும் நமக்கு விரோதமாகக் காணப்பட்டால், நாம் செய்ய வேண்டியது, தேவனிடத்தில் விசுவாசத்தோடு, சகலமும் நன்மைக்கு ஏதுவாகவே நீர் நடத்துவீர் என்று ஜெபித்து அவர் கையில் நம் வாழ்வை ஒப்புக்கொடுத்துவிட வேண்டும். நடக்கும் காரியங்களெல்லாம் நமது அற்ப ஞானத்திற்கு விரோதமாய்க் காணப்பட்டாலும், பயப்படாதேயுங்கள். நமது பரம தகப்பனின் கரத்தில் உள்ள நன்மைகளைப், பொறுமையாய் காத்திருந்து பெற்றுக் கொள்வோம்! ஆமென்! 

- A. பியூலா

 

ஜெபக்குறிப்பு:

நமது ஊழியத்தை ஜெபத்தினாலும், காணிக்கையினாலும் தாங்கும் பங்காளர்கள் குடும்பங்களைத் தேவன் ஆசீர்வதிக்க ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250



hacklink satın al holiganbet giriş holiganbet padişahbet bets10 extrabet royalbet süperbetin padişahbet betcio romabet giriş romabet queenbet bahiscasino betcio bahiscasino atlasbet matbet matbet giriş bahiscasino celtabet queenbet casibom jojobet