Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 20-11-2022 (Kids Special)
Share:

By Village Missionary Movement

Saturday, 19-Nov-2022

இன்றைய தியானம்(Tamil) 20-11-2022 (Kids Special)

 

சகேயு மாமா 

 

‘’இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக் கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான்.’’ - வெளி. 3:20

 

ஹாய் குட்டீஸ்! உங்களுக்கு பைபிள் கதை கேட்க ரொம்பப் பிடிக்கும்தானே! அம்மா சொல்லியிருப்பாங்கதானே. சன்டே ஸ்கூல் டீச்சர் மூலமாகவும் நிறைய பைபிள் கதை கேட்டிருப்பீங்க இல்லையா! இன்றைக்கு பைபிள்ல உள்ள சகேயு என்ற மாமா பற்றிய கதை கேட்போமா?

 

எரிகோ என்ற ஒரு பெரிய நகரம் இருந்தது. அந்த நகரத்தில் சகேயு என்ற மிகவும் பணக்கார மாமா ஒருவர் இருந்தாங்க. அவங்க கவர்மெண்ட்ல ஆபிசர். சோ, மக்கள் பேசுவது நாட்டு நடப்பு எல்லாம் ரொம்ப நல்லாத் தெரியும். இயேசுவைப் பற்றியும் கேள்விப்பட்டிருந்தாங்க. சகேயு மாமா கிட்ட எல்லாரும் வந்து சொல்வாங்க. அதனால சகேயு மாமாவுக்கு இயேசுவைப் பார்க்க ஆசையாக இருந்தது.

 

ஒரு நாள் எரிகோ பட்டணத்தில பயங்கரக் கூட்டமாக மக்கள் வந்தனர். சகேயு மாமா என்ன விஷயம் என்று கேட்ட போது, இயேசு வாராங்கன்னு சொன்னாங்க. இவருக்கு இயேசுவைப் பார்க்க ரொம்ப ஆசை. ஆனால் ரொம்ப குள்ளமா இருப்பாங்க. அதனால ஜனக் கூட்டத்துல இயேசுவைப் பார்க்கவே முடியல அதனால என்ன செய்ய என்று யோசிச்சாங்க. ‘’இந்த வழியாகத்தானே இயேசு வருவாங்க. நான் முன்னாடி ஓடிப்போய், அந்தப் பாதையில உள்ள அந்த அத்தி மரத்து மேல ஏறி உட்கார்ந்து கொள்வேன்’’ என்று வேகமாகப் போய் அத்தி மரத்து மேலே உட்கார்ந்து கொண்டாங்க. 

 

இயேசு அந்த இடத்துக்கு வந்த உடனே மேலே பார்த்து, சகேயு மாமா கிட்ட ‘’சகேயுவே, நீ சீக்கிரமாய் இறங்கி வா. இன்றைக்கு நான் உன் வீட்ல தான் தங்க வேண்டும்’’ என்று சொன்னாங்க. உடனே என் பெயர் எல்லாம் இயேசப்பாவுக்குத் தெரியுதே என்று நினைத்துக் கொண்டு சந்தோஷமாக இறங்கி வந்தாங்க.

 

வீட்டிற்கு போகும்போது இயேசப்பாவிடம் என்னுடைய சொத்துல பாதிய ஏழைகளுக்கு கொடுக்கிறேன். ஒருவனிடத்தில் அநியாயமாய் வாங்கினதை நான்கு மடங்காகத் திரும்பக் கொடுப்பேன் என்று சொன்னாங்க. இயேசுவும் ‘’இன்றைக்கு இந்த வீட்டுக்கு இரட்சிப்பு வந்தது.’’(லூக்கா19:9) என்று சொல்லி சந்தோஷப்பட்டாங்க. 

 

என்ன குட்டீஸ்! நீங்களும் இயேசப்பாகிட்ட ‘’எங்க வீட்டுக்கு வாங்க. என் இருதயத்திற்குள்ள வாங்கன்னு’’ ஜெபிப்பீங்களா? அப்போது நீங்களும் ரொம்ப சந்தோஷமானவங்களா மாறிடுவீங்க.

- A. பியூலா

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet jojobet giriş matbet giriş holiganbet giriş matbet sahabet onwin bets10 bets10 giriş bets10 güncel giriş betcio atlasbet casibom giriş deneme bonusu casibom vaycasino vaycasino giriş meritking meritking giriş cratosroyalbet realbahis realbahis giriş jojobet jojobet jojobet jojobet jojobet holiganbet holiganbet cashwin esbet tambet casibom casibom giriş casibom casibom giriş imajbet imajbet giriş imajbetapp grandpashabet grandpashabet giriş grandpashabet güncel bets10 bets10 giriş bets10 güncel giriş matbet matbet giriş alobet betmartin pashagaming ultrabet