By Village Missionary Movement
Monday, 14-Nov-2022இன்றைய தியானம்(Tamil) 15-11-2022
காத்துக் கொள்வாராக
“... நான் என் பிதாக்களின் சுதந்தரத்தை உமக்குக் கொடாதபடி கர்த்தர் என்னைக் காப்பாராக என்றான்” - 1 இராஜாக்கள் 21:3
ஒரு ஊரில் இரட்சண்யப்பாடசாலை என்ற பெயரில் ஒரு ஸ்கூல் பல ஆண்டுகளாக இயங்கி வந்தது. தினமும் காலையில் அருமையான கிறிஸ்தவ தெய்வீகப் பாடல்களைக் கற்றுக் கொடுப்பார்கள். ஒரு நாள் புறமதத்தை சார்ந்த இயக்கத்தினர், மிகப்பெரிய தொகையை தருவதாக அந்த ஸ்கூல் –க்கு வாக்களித்தனர். பள்ளியின் நோக்கமே மாறியது. அந்த நிர்வாகத்தினர் பரலோகத்தில் கிடைக்கப் போகும் மேன்மைகளை அற்ப உலகப் பணத்திற்காக விற்றுப்போட்டனர். எவ்வளவு பரிதாபம்! திராட்சத் தோட்டம் கீரைக் கொல்லையாய் போனது.
நாபோத்துக்கு உரியது முற்பிதாக்களின் சுதந்தரமாகிய திராட்சத்தோட்டம். அதை ஆகாப் ராஜா கீரைக் கொல்லை ஆக்க விரும்புகிறான். ஆனால் நாபோத்திடம், ராஜா விலை பேசியபோது விலைக்கிரயத்திற்கோ அல்லது வேறு திராட்சத்தோட்டத்திற்கோ இணங்கவில்லை. நாபோத்தின் எண்ணம் எல்லாம் “இது என் பிதாக்களின் சுதந்தரம்” என்பதிலேயே இருந்தது. என் முற்பிதாக்கள் கானான் தேசத்திற்குள் வந்தபோது, இந்த சுதந்தரத்தைப் பெறுவதற்கு 31 ராஜாக்களிடம் யுத்தம் செய்தனர் என்று நினைத்திருப்பான். நாபோத் கல் எறியப்பட்டபோதிலும் (1இராஜா.9:14) தன் சுதந்தரத்தை விட்டுக் கொடுக்கவில்லை!
தேவபிள்ளையே! அந்தக் கானான் தேசத்தின் சுதந்தரத்தைப் பார்க்கிலும் விலையேறப்பெற்றது, ஆவியானவர் தந்திருக்கும் வரங்களும் கனிகளுமாகிய ஆகிய சுதந்திரங்கள்! அநேக வேளைகளில் இவைகளை நம்மிடம் பேரம் பேசுவதற்கு இவ்வுலகத்தின் அதிபதி சாத்தான் வருவதுண்டு. அழியக் கூடிய உலக மேன்மைகளைக் காட்டி வாடாததும் அழியாததுமான சுதந்திரத்தைப் பறிக்க எண்ணுவான். ஒருபோதும் ஆவிக்குரிய ஜீவியமாகிய திராட்சத் தோட்டத்தை இழந்துபோகாதே. (சங்கீதம்.119:111) ல் “உம்முடைய சாட்சிகளை நித்திய சுதந்தரமாக்கிக் கொண்டிருக்கிறேன், அவைகளே என் இருதயத்தின் மகிழ்ச்சி” என்று சொன்ன தாவீதைப் போல, முற்பிதாக்களின் சுதந்தரத்தை காத்துக்கொள்ள போராடின நாபோத்தைப் போல , நாமும் இயேசுவின் சிலுவை மரணத்தால் நாம் பெற்றுக்கொண்ட நித்திய சுதந்திரத்தையும் , ஆவியின் வரங்களையும் இழந்து போகாமல் காத்துக்கொள்வோமாக.
- A. பியூலா
ஜெபக்குறிப்பு:
ஒவ்வொரு பணித்தளத்திலும் மாதத்தில் 30 நாட்களும் 30 வீடுகளில் ஜெபக்குழுக்கள் கிரமமாக நடைபெற ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250