Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 14-11-2022 (Youth Special)
Share:

By Village Missionary Movement

Monday, 14-Nov-2022

இன்றைய தியானம்(Tamil) 14-11-2022 (Youth Special)

 

விசுவாச ஜெபம்

 

“...விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும்;…” – யாக்கோபு 5:15

 

செல்வம் 11 வயது நிரம்பிய ஒரு அனாதை பையன். அவன் சுகாதாரமற்ற தெருக்களில் வாழ்ந்ததால் பயங்கர வியாதி அவனைத் தாக்கியது. வியாதியின் தீவிரம் அவன் உடம்பில் உள்ள ஒரு உறுப்பில் அறுவை சிகிச்சையை மேற்கொண்டால்தான் பிழைக்க முடியும் என மருத்துவர்கள் கூறிவிட்டனர். ஜெபிப்பதில் செல்வம் பழகினவனாயிருந்தான். சிறந்த நற்பண்புகளையுடையவன். மருத்துவர்களும் அவனுக்கு உதவிசெய்ய முன் வந்தனர். சிகிச்சைக்கு முன் அந்த சிறுவன் செய்த செயல் தன் திறமைக்கு ஒரு மிகப்பெரிய சவால் என்பதை மருத்துவர் உணர்ந்தார். செல்வம் விசுவாசமுள்ளவனாய் முழங்கால்படியிட்டு “அறுவைசிகிச்சை பிசகின்றி நடக்க மருத்துவருக்கு உதவிசெய்யும் ஆமென்” என்று ஜெபித்தான். “விசுவாசம் மனுஷருடைய ஞானத்தினாலல்ல தேவனுடைய பெலத்தில் நிற்கும்படிக்கு... ஆவியினாலும், பெலத்தினாலும் உறுதிப் படுத்தப்பட்டதாயிருந்தது.” (1கொரி. 2:4,5) அறுவை சிகிச்சையானது நேர்த்தியாக செய்து முடிக்க காரணமானதுமாயிருந்தது. செல்வத்தின் விசுவாச ஜெபமே காரணம் என்று சொல்லி மருத்துவர் தேவனைப் புகழ்ந்தார். 

 

வேதத்தில் கூட தானியேல் என்ற ஜெபவீரனைக் குறித்து பார்க்கிறோம். இராஜாவின் கட்டளைகளை மீறி மூன்று வேளையும் தன் தேவனுக்கு முன்பாக முழங்காற்படியிட்டு ஜெபித்தான். தானியேல் சிங்கங்களின் கெபியில் போடப்பட்டாலும் எந்த சேதமும் ஏற்படாமல் விடுதலை பெற்றான். ஏனென்றால் அவன் இடைவிடாமல் ஆராதிக்கிற தேவன் அவனை விடுவிப்பார் என்று ராஜாவே சாட்சி சொல்ல செய்தார். (தானியேல் 6:16) 

 

பிரியமானவர்களே, இதை வாசித்துக் கொண்டிருக்கிற உங்களின் விசுவாசம் எப்படிப்பட்டதாய் இருக்கிறது? எல்லாக் காரியங்களிலும் அவரையே சார்ந்து, அவரோடுகூட விசுவாசம் பொருந்தினவர்களாய் இருக்கிறோமா? அல்லது ஆண்டவருக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று சொல்லி எடுத்த காரியங்களில் முடியாது நடக்காது என்று அவிசுவாசிகளாய் இருக்கிறோமா? சிந்தித்துப் பார்ப்போம்! செல்வத்தைப் போல் நாமும்கூட கர்த்தர் மேல் வைத்த விசுவாசத்தை மற்றவர்களுக்கும் எடுத்துக் கூறுவோம். விசுவாசத்தின் வல்லமையால் மகிழுவோம். 

- Mrs. ஜாஸ்மின் பால் 

 

ஜெபக்குறிப்பு: 

கிராமங்களில் Tuition Centre மூலம் சந்திக்கப்படும் ஒவ்வொரு சிறுவர்களும் இயேசுவின் அன்பைக் கண்டுகொள்ள ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250



hacklink satın al