By Village Missionary Movement
Saturday, 12-Nov-2022இன்றைய தியானம்(Tamil) 13-11-2022
சிருஷ்டி கர்த்தர்
‘’…அவருக்குள் சகலமும் சிருஷ்டிக்கப்பட்டது...’’ - கொலோ. 1:16
ரேமாண்ட் தன் குட்டி மகளான ரீனாவுடன் ஷாப்பிங் போவதற்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்தார். ரீனாவும் ரொம்பவே சந்தோஷமா நான் கடைக்குப் போறேனே! அப்பா நான் கேட்டதெல்லாம் வாங்கித் தருவார்...ஹய்யா ஜாலி என்று துள்ளிக்குதித்து அம்மாவுக்கு Bye சொன்னாள். குட்டிச் செல்லங்களே, உங்களுக்கும் அப்பா கூட கடைக்குப் போறது ரொம்பப் பிடிக்குமா? ஓகே. ஆனா அடம் பிடித்து வாங்கித் தாங்கன்னு தொந்தரவு பண்ணக்கூடாது. நீங்க எல்லாம் ரொம்ப நல்ல பிள்ளைங்கல்ல...
ரேமாண்ட் மாமா பாதி தூரம் கார்ல பயணம் பண்ணிக் கொண்டிருக்கும்போது, ஏதோ க்ரீச்...சத்தத்தோடு கார் நின்று விட்டது. கீழே இறங்கி ஏதேதோ செய்து பார்த்தார். கார் அசையவே இல்லை. குட்டி ரீனாவின் சந்தோஷமும் புஷ்ன்னு போச்சு. சிறிது நேரம் கழித்து கோலை ஊன்றி நடந்து வந்த முதியவர் நான் ஏதாவது உதவி செய்யட்டுமா என்று கேட்டார். அந்த ரேமாண்ட் மாமா அவரை மேலும், கீழும் பார்த்துவிட்டு, இவர் நமக்கு என்ன உதவி செய்யப் போகிறார் என்று நினைத்து நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்லி விட்டார். திரும்பவும் என்னென்னவோ செய்து பார்த்தார்... கார் Start ஆகவில்லை. அப்பா எனக்கு ரொம்ப போர் அடிக்குது என்ற ரீனாவின் வார்த்தையைக் கேட்ட ரேமாண்ட் மாமாவுக்கு கஷ்டமாக இருந்தது. வாக்கிங் போய்விட்டு திரும்பின அந்த வயதானவர் திரும்பவும் நான் ஏதாவது உதவி செய்யட்டுமா என்று கேட்டார்.
சலிப்படைந்து போன ரேமாண்ட் சரி என்று சொல்வதற்குள் ரீனா ஓகே தாத்தா தயவு செய்து எங்களுக்கு உதவுங்கள் என்றாள். சில நிமிடங்கள் ஏதோ செய்தார். பின்பு காரை Start பண்ண சொன்னார். இரண்டு இருமல் இருமி கார் Start ஆனது. அப்பாவுக்குத் தெரியாதது வயதானவருக்கு தெரிகிறதே! என்பதைப் போல் பார்த்தாள் ரீனா. அந்த ஃபோர்டு காரை தயாரித்ததே அந்த வயதானவர்தான். அதனால் தான் ஈஸியாக சரி செய்து விட்டார் என்பது அவர்கள் இருவருக்கும் தெரியாது. ஆச்சரியத்தோடு அவரைப் பார்த்தனர். ரேமாண்ட் அவரிடம் கேட்டார், ’’நன்றி ஐயா! உங்கள் பெயர் என்ன?” என்று கேட்டதற்கு ‘’நான்தான் ஹென்றிஃபோர்டு’’ என்று சொல்லி விட்டு கரமசைத்து டா...டா... சொல்லி கோலூன்றி நடைபோட்டார். அவர் சொன்னதும் எல்லாம் புரிந்து விட்டது. நன்றி நெகிழ்வோடு அவருக்கு கரமசைத்து சென்றனர். அப்பா மகளிடம் பேச ஆரம்பித்தார், ‘’இதேப்போலத்தான் நமக்கு ஏற்படுகின்ற கஷ்டமான சூழ்நிலைகளையும் சிருஷ்டி கர்த்தர் இயேசப்பாகிட்ட சொல்லும் போது அவர் ஈஸியாக சரி செய்து விடுவார். என்ன ரீனா அப்பா சொன்னது புரிகிறதா? நீ எதிர்பார்த்த சூப்பர் மார்கெட் வந்தாச்சு’’ என்றார். ஏதோ குட்டி சன்டே கிளாஸ்க்கு போனதைப் போல இருந்தது ரீனாவுக்கு...
அன்பு தம்பி தங்காய், என்னை கவனிக்க யாருமில்லை எனக்கு உதவி செய்ய, தேவைகளை சந்திக்க ஒருவருமில்லையே என்று நினைக்கிறாயா? உன்னைப் படைத்த சிருஷ்டி கர்த்தர் இருக்கிறார். உன் நிலை எதுவானாலும் அவர் சரி செய்துவிடுவார். கலங்காதே!.
- Mrs. ஜீவா விஜய்
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250