Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 08-11-2022
Share:

By Village Missionary Movement

Monday, 07-Nov-2022

இன்றைய தியானம்(Tamil) 08-11-2022

 

நாம்

 

‘’என்னோடே கூடக் கர்த்தரை மகிமைப்படுத்துங்கள்; நாம் ஒருமித்து அவர் நாமத்தை உயர்த்துவோமாக’’ - சங்கீதம் 34:3 

 

ஒரு மானுடவியலாளர் (anthropologest) ஆப்பிரிக்கப் பழங்குடியின சிறுவர்களுக்கு ஒரு போட்டி நடத்தினார். ஒரு கூடை நிறைய பழங்களை நிரப்பி ஒரு மரத்தின் கீழே வைத்துவிட்டு, அங்கிருந்த சிறுவர்கள் அனைவரையும் நூறு மீட்டர் தூரத்தில் வரிசையாக நிற்க வைத்தாராம். ‘’யார் முதலில் மரத்தை தொடுகிறார்களோ அவர்களுக்கு அந்த பழம் முழுவதும் பரிசு” என்றார். தயார் நிலையில் நின்ற சிறுவர்களுக்கு விசில் ஊதினார். அவர்கள் அனைவரும் 

ஒருவர் கையை ஒருவர் பிடித்துக்கொண்டு ஒன்றாக ஓடி மரத்தைத் தொட்டுப் பழங்களை பகிர்ந்து சாப்பிடத் தொடங்கினார்கள். இதைக் கண்டு ஆச்சரியம் அடைந்த மானுடவியலாளர் ஏன் இப்படி செய்தீர்கள் என கேட்டதற்கு அவர்கள் எல்லாரும் ஒரே குரலில் ‘’உபுண்டு’’ என்றார்களாம். அதற்கு ‘’நான் என்றால் அது நானல்ல! நாங்கள்!!” (I am because, we are!) என்று அர்த்தமாம். பிறர் சோகத்துடன் இருக்கும்போது ஒருவர் மட்டும் எப்படி சந்தோஷமாயிருப்பது என்றார்களாம். 

 

எருசலேமிலிருந்து பாபிலோனுக்கு அடிமைகளாக சில வாலிபர்கள் கொண்டு வரப்பட்டார்கள். தானியேல், சாத்ராக், மேஷாக்,ஆபேத்நேகோ! அந்த வாலிபர்கள் தாங்கள் உண்ணும் உணவினால் கூட தீட்டுப்படலாகாது என்று எண்ணி ஒற்றுமையாக பிரதானிகளின் தலைவனிடத்தில் வேண்டிக் கொண்டார்கள். இவர்களுக்கு என தனியாக ஆகாரம் கொடுக்கப்பட்டது. அது மட்டுமல்ல நேபுகாத்நேச்சார் தான் கண்ட சொப்பனத்தையும், சொப்பனத்தின் அர்த்தத்தையும் சொல்லாதவர்கள் கொலை செய்யப்படுவார்கள் என்ற கட்டளை பிறந்தபோது தானியேல் தன் தோழர்களோடு கூட தேவனுடைய இரக்கத்தைப்பெற மன்றாடினார் (தானி. 2:17). நம் தேவன் சொப்பனத்தையும் அதின் அர்த்தத்தையும் தானியேலுக்கு வெளிப்படுத்தினார். ராஜாவினிடத்தில் அவர் கண்ட சொப்பனத்தையும் அர்த்தத்தையும் சொன்னபோது அநேக வெகுமதிகளைக் கொடுத்து அவனை பாபிலோன் மாகாணம் முழுவதுக்கும் அதிபதியாகவும் பிரதான அதிகாரியாகவும் நியமித்தான். தானியேல் ராஜாவை வேண்டிக்கொண்டதினிமித்தம் அவனுடைய தோழர்கள் அவனோடு கூட உயர்த்தப்பட்டார்கள். (தானி.2:24-49) 

 

ஆம், பிரியமானவர்களே ! இதோ சகோதரர் ஒருமித்து வாசம் பண்ணுகிறது எத்தனை நன்மையும் எத்தனை இன்பமுமானது? (சங்.133:1) என்னும் சத்தியம் எத்தனை உண்மையானது. அது அழகானதும் கூட. சகோதர சிநேகத்திலே நிலைத்திருங்கள் என்றும், சகோதர சிநேகத்திலே அன்பையும் கூட்டி வழங்குங்கள் (2பேதுரு1;7 ) என்றும் வேதம் கூறுகிறது. ஒருவேளை சகோதரர்களுக்குள்ளும், நம்மை சுற்றியிருப்பவர்களுக்குள்ளும் ஏதேனும் பிரிவினைகள் வருமானால் அன்பு ஒன்றை மட்டும் ஆயுதமாக்குங்கள், தீமையை நன்மையால் வெல்லுங்கள். சமாதானம் பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனுடைய புத்திரர் என்னப்படுவர். நாமும் இயேசுவின் அன்பை பிரதிபலிப்போம். ஆமென்! 

- Mrs. மஞ்சுளா

 

ஜெபக்குறிப்பு:

மீடியா ஊழியங்களுக்குத் தேவையான லேப் டாப், கேமரா, லைட்டுகள் வாங்கப்பட ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: reachvmm@gmail.com

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250



hacklink satın al