By Village Missionary Movement
Saturday, 05-Nov-2022இன்றைய தியானம்(Tamil) 06-11-2022 (Kids Special)
நறுமணம்
“...நற்கிரியைகளைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு, தேவனுடைய செய்கையாயிருக்கிறோம்;..” – எபேசியர் 2:10
ஹலோ குட்டிச் செல்லங்களே! நீங்கள் எப்படி இருக்கீங்க. எல்லாரும் சுகமாய் இருப்பீர்கள் என்று கர்த்தருக்குள் நம்புகிறேன். ஒவ்வொரு நாளும் நம்மை சுகத்தோடு பாதுகாத்து வருகின்ற இயேசப்பாவுக்கு நன்றி சொல்ல மறக்கவே கூடாது. ஓகே குட்டீஸ்! கதை கேட்க ரெடியா?
சாலை வசதியே இல்லாத ஒரு அழகான சிறிய கிராமம் இருந்தது. அந்த கிராமத்தில் ஓன்று முதல் ஐந்து வகுப்புகள் உள்ள பள்ளிக்கூடமும் இருந்தது. அங்கு மதிய உணவு கொடுப்பார்கள். ஓ.. உங்க ஸ்கூல்லயும் மதிய உணவு உண்டா? சூப்பர். அங்கு கிடைத்த உணவுக்காக தினமும் பிரார்த்தனை பண்ணி இயேசுவுக்கு நன்றி சொல்லிட்டுத்தான் சாப்பிடுவான் விக்கி. நீங்களும் சாப்பிடும்போது இயேசுவுக்கு நன்றி சொல்வீங்களா? இல்லையா? கண்டிப்பா சொல்லணும் குட்டீஸ் ஓகேவா. விக்கி பிரார்த்தனை பண்ணி சாப்பிடுறதைப் பார்த்த மற்ற மாணவர்கள் கிண்டல் அடித்தார்கள். இவன் ஜெபிக்கின்றதால சாம்பார் சாதம் ஏதாவது பிரியாணியாக மாறப் போகுதான்னு பார்ப்போம் என்று சிரித்தார்கள்.
அப்பொழுது ஸ்கூல் தலைமையாசிரியர் பிள்ளைகள் எப்படி சாப்பிடுகிறார்கள் உணவு நன்றாக இருக்கிறதா என்று பார்வையிட வந்தார். உணவை வீணாக்காமல் நன்றாக சாப்பிட வேண்டும் என்று மாணவர்களுக்கு அறிவுரை கூறினார். தலைமையாசிரியரை பார்த்ததும் விக்கியை கிண்டலடித்த மாணவர்கள் அமைதியானார்கள். என்ன இங்கே சிரிப்பு! மாநாடு நடந்ததைப் போல் இருந்ததே என்று சார் கேட்க ... ஒரு மாணவன் சார் விக்கி தினமும் பிரார்த்தனை பண்ணிட்டு சாப்பிடுவதைத் தான்.. என்று இழுத்தான், என்னது பிரார்த்தனை பண்றதை கிண்டலடிக்கிறீங்களா? அவன் படிப்பில் ஒழுக்கத்தில் எவ்வளவு சிறந்த மாணவனாக இருக்கிறான் பார்த்தீர்களா? அவன் பிரார்த்தனை பண்ணி எதையும் செய்வதால் தான் சிறந்த மாணவனாக இருக்கிறான் என்று சார் சொன்னதைக் கேட்ட மாணவர்கள் தங்கள் தவறை உணர்ந்து கொண்டார்கள். இனிமேல் விக்கியைப் போல இருக்க எல்லாருக்கும் ஆசை வந்தது. அடுத்தநாள் உணவுக்காக எல்லாரும் இயேசுவுக்கு நன்றி சொன்னாங்க. அந்த தலைமையாசிரியர் ஏதோ யோசித்துக்கொண்டே போனார். தானும் இயேசுவை அறிந்திருந்தும் ஒருநாள் கூட சாப்பிடும் போது பிரார்த்தனை பண்ணிட்டு சாப்பிட்டதில்லையே என்பதை உணர்ந்துகொண்டார். அவருக்குள்ளேயும் ஒரு மாற்றம் வந்தது. விக்கியின் நறுமணம் அநேகரை இயேசுவண்டை இழுத்து வந்தது.
அன்பு செல்லங்களே! இந்த கதையின் ஹீரோ விக்கியைப் போல நீங்களும் நறுமணம் தருகின்ற நற்கந்தமாய் வாழும்போது, உன்னைச் சுற்றியுள்ள நண்பர்கள் இயேசுவை அறிந்து கொள்ளுவார்கள். என்ன குட்டீஸ், இயேசப்பாவும் ரொம்ப ரொம்ப சந்தோஷப்படுவாங்க இல்லையா? நீங்க அவரை சந்தோஷப்படுத்த ரெடியா?
- Sis. தெபோராள்
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250