Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 30-10-2022 (Kids Special)
Share:

By Village Missionary Movement

Sunday, 30-Oct-2022

இன்றைய தியானம்(Tamil) 30-10-2022 (Kids Special)

 

PRAISE பண்ணு 

 

“எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ்செய்யுங்கள்; அப்படிச் செய்வதே கிறிஸ்து இயேசுவுக்குள் உங்களைக் குறித்துத் தேவனுடைய சித்தமாயிருக்கிறது” - 1தெச. 5:18

 

நீங்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் Children’s Special வந்தாச்சு, நீங்க சுற்றுலா போயிருக்கீங்களா? ரொம்ப Super ராகவும், Jolly -யாகவும் இருக்கும் தானே! கூட சந்தோஷமா enjoy பண்ணியிருப்பீங்க அப்படித்தானே! மனோ அண்ணனும் அவங்க friends -ம் சுற்றுலா போயிருந்தாங்க. எல்லா இடத்தையும் சுற்றிப் பார்த்து விட்டு, பூங்காவிலிருந்து வெளியே வந்தார்கள். “வாங்க எல்லோருக்கும் Ice cream வாங்கித் தருகிறேன்” என்று மனோ அண்ணன் எல்லாருக்கும் வாங்கிக் கொடுத்தாங்க. சாப்பிட்டுக்கொண்டே பேண்ட், சட்டை பாக்கெட்டைத் தடவிப் பார்த்தால் பர்ஸை காணவில்லை. “இயேசப்பா! என் பேண்ட் பாக்கெட் கிழியாமல் பர்ஸ் தொலைந்ததற்காய் உமக்கு ஸ்தோத்திரம்” என்று அந்த மனோ அண்ணன் சொன்னது நண்பர்களுக்கு ஆச்சரியமாய் இருந்தது.

 

“என்ன, நீ பணத்தை தொலைத்துவிட்டு ஸ்தோத்திரம் என்று சொல்கிறாயே! எங்களுக்கு ஆத்திரமாக இருக்கிறது” என்று கோபப்பட்டார்கள். இடையில் ஒருவன் வந்து “ஐயா! என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். உங்க பர்ஸை திருடிக்கொண்டு போய் பணத்தை எடுக்கும் போது ஒரு வசன அட்டை இருந்தது. அதில் “இதோ! உன்னை என் உள்ளங்கைகளில் வரைந்திருக்கிறேன்” என்று எழுதியிருந்தது. கடவுள் என்னோடு பேசுவதைப்போல் இருந்தது. அவர் என்னை உள்ளங்கையில் வைத்து பார்த்துக்கொண்டேயிருக்கிறார், என்னால் இனி திருட முடியாது. திருட்டுப் பிழைப்பை விட்டு வேலை செய்து வாழப்போகிறேன் “ என்று சொன்னதும் மனோவின் நண்பர்களின் ஆத்திரம் எங்கே போனதென்று தெரியவில்லை. இப்படியும் நடக்குமா? என்பதைப் போல பார்த்தார்கள். அதன் பின் அவர்களும் இன்ப, துன்ப நேரங்களில், நன்மையோ தீமையோ எதுவானாலும் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் என்று சொல்லக் கற்றுக் கொண்டார்கள். “இன்றைய நாள் சுற்றுலா எங்கள் மனதுக்கு மட்டும் சந்தோஷத்தையல்ல, வாழ்க்கைக்கும் மகிழ்ச்சியை கொடுக்கின்றதாய் அமைந்தது“ என்று நண்பர்கள் சொல்ல மனோ அண்ணன் Jesusக்கு thank you சொல்லி மகிழ்ச்சியோடு பிரியா விடை பெற்றுச் சென்றார்கள். 

 

என்ன குட்டீஸ்! கதை எப்படி இருந்தது? “Supero .. super “-ன்னு சொல்லிட்டு மட்டும் போயிடக்கூடாது. நீங்களும் எல்லாவற்றிற்கும் ஸ்தோத்திரம் சொல்ல வேண்டும். உனக்குப் பிடித்ததோ, பிடிக்காததோ, மகிழ்ச்சியோ , துக்கமோ எதுவானாலும் Jesus –ஐ praise பண்ணிவிட்டால் போதும், எந்த தடைகளையும் தாண்டி வெற்றி வாழ்க்கை வாழ்ந்து விடலாம். ok தானே! Bye, Happy Sunday.

- Mrs. அன்புஜோதி ஸ்டாலின்  

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: reachvmm@gmail.com

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250



hacklink satın al holiganbet giriş holiganbet padişahbet bets10 extrabet royalbet süperbetin padişahbet betcio romabet giriş romabet queenbet bahiscasino betcio bahiscasino atlasbet matbet matbet giriş bahiscasino celtabet queenbet casibom jojobet