Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 28-10-2022
Share:

By Village Missionary Movement

Thursday, 27-Oct-2022

இன்றைய தியானம்(Tamil) 28-10-2022

 

தேவனின் நினைவுகள் 

 

‘’என் நினைவுகள் உங்கள் நினைவுகள் அல்ல; உங்கள் வழிகள் என் வழிகளும் அல்லவென்று கர்த்தர் சொல்லுகிறார்” - ஏசாயா 55:8

 

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்-ஐப் பற்றி அறியாதவர்கள் இருக்க முடியாது. அவர் கணிதத் திறமைகள் கொண்ட ஒரு கோட்பாட்டு இயற்பியல் அறிஞர் ஆவர். ஆனால் இவரது இளமைக் காலத்தைக் குறித்து நாம் வாசிக்கும்போது, இவரால் வேகமாகக் கற்க முடியாது என்பதை அறியலாம். அதே போல தாமஸ் ஆல்வா எடிசன் என்ற விஞ்ஞானியின் வாழ்வை நாம் திரும்பிப் பார்க்கும்போது நம்மை வியப்படையச் செய்கிறது. இவருக்குக் காதின் கேட்கும் திறன், சிறு வயது முதலே மிகவும் குறைவாக இருந்தது. அது மட்டுமின்றி பள்ளியில், தனது ஆசிரியரால் ‘’மூளைக் கோளாறு உள்ளவன்’’ எனக் கூறப்பட்டு பள்ளியிலிருந்து பாதியிலேயே நீக்கப்பட்டார். அதன் பின் தனது தாயாரின் மூலம் வீட்டிலிருந்தபடியே கல்வியைக் கற்றார். இவர்களைப் போன்ற மற்றுமொரு நபர் ஆபிரகாம் லிங்கன். இவரை அமெரிக்காவின் ஜனாதிபதியாக நாம் அறிவோம். ஆனால், இவர் தனது வாழ்வில் கண்ட தோல்விகள் ஏராளம், ஏராளம். 1826 -ஆம் ஆண்டு மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டு 6 மாதங்கள் படுத்த படுக்கையானார். அதைத் தொடர்ந்து மூன்று முறை அரசியல் பதவிகளுக்குப் போட்டியிட்டு தோல்வியையே அடைந்தார். ஆனால் இறுதியில் இவரது விடா முயற்சி, இவரை அமெரிக்காவின் ஜனாதிபதியாக தேசத்தில் உயர்த்தியது.

  

எனக்கன்பானவர்களே! சாதித்தவர்களின் பட்டியலைப் பார்த்தால் தோற்றுப்போன பின்பே சாதித்தவர்கள் அநேகர். இயேசப்பா எல்லோருக்குமே ஒரு தாலந்துகளைத் தந்திருக்கிறார். இதை எழுதுகிற நான் கூட நன்கு படித்துப் பெரிய ஆளாக வரவேண்டுமென்று தான் நினைத்தேன். ஆனால் ஆண்டவருடைய திட்டமோ வேறு விதமாக என்னை நடத்தியது. நான் ஆண்டவரிடம் அழுத நாட்களுண்டு. ஆண்டவரோ அமைதியாக இருந்தார். பாடுகளின் வழியாக நடக்கும்போது, நான் ஆண்டவரிடம் கேள்வி கேட்பவளாகக் காணப்பட்டேன். நான் உன்னைத் தாயின் வயிற்றில் உருவாக்கு முன்னே உன்னை அறிந்தேன் (எரேமியா1:5) என்று பதில் தந்த தேவன், இன்று அநேகருக்கு ஆசீர்வாதத்தின் வாய்க்காலாக என்னைப் பயன்படுத்தி வருகிறார். என்னைப் பயன்படுத்திய தேவன் உங்களையும் பயன்படுத்துவார். 

     

எனவே தோல்வியின் நேரங்களில் துவண்டுவிடாமல், தேவன் மேல் நம் பாரங்களை வைத்துவிட்டு, அவர் தரும் பெலனோடு கூட சூழ்நிலைகளை எதிர்த்துப் போராடும்போது, நிச்சயம் அது நம் வாழ்வில் தேவனின் நினைவுகளை நிறைவேற்றும். ஆண்டவர் நமக்காக வைத்துள்ள ஓட்டத்தில் பொறுமையோடு ஓடி, அவர் சித்தத்தை நிறைவேற்றித் தேவ ஆசீர்வாதம் பெறுவோம். ஆமென்.   

- Mrs. S. ஞானசெல்வம் செல்வராஜ்           

 

ஜெபக்குறிப்பு:

நம்பிக்கை TV மற்றும் சத்தியம் TV மூலம் தினமும் வெளிவரும் நிகழ்ச்சிகளில் சந்திக்கப்படும் நபர்கள் தேவனின் அன்பில் வளர ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: reachvmm@gmail.com

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet holiganbet giriş matbet giriş matbet matbet giriş sahabet onwin bets10 bets10 giriş bets10 güncel giriş betcio atlasbet casibom giriş deneme bonusu casibom vaycasino vaycasino giriş meritking meritking giriş realbahis realbahis giriş casibom casibom giriş casibom casibom giriş imajbet imajbet giriş imajbetapp grandpashabet grandpashabet giriş grandpashabet güncel bets10 bets10 giriş bets10 güncel giriş matbet matbet giriş alobet betmartin pashagaming ultrabet lunabet betzula meritking jojobet esbet amgbahis betpuan grandpashabet sonbahis mercurecasino betplay cratosroyalbet grandpashabet grandpashabet casibom marsbahis grandpashabet casibom jojobet jojobet casibom superbetin superbetin giriş marsbahis marsbahis giriş almanbahis almanbahis giriş amgbahis amgbahis giriş betasus betasus giriş betmartin betmartin giriş betoffice betoffice giriş jojobet jojobet giriş betpas betpas giriş betsat betsat giriş betsmove betsmove giriş egebet egebet giriş galabet galabet giriş grandpashabet grandpashabet giriş hiltonbet hiltonbet giriş holiganbet holiganbet giriş jasminbet jasminbet giriş kareasbet kareasbet giriş kargabet kargabet giriş kavbet kavbet giriş matbet matbet giriş mavibet mavibet giriş nakitbahis nakitbahis giriş norabahis norabahis giriş pashagaming pashagaming giriş perabet perabet giriş piabellacasino piabellacasino giriş tarafbet tarafbet giriş