Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 25-10-2022
Share:

By Village Missionary Movement

Tuesday, 25-Oct-2022

இன்றைய தியானம்(Tamil) 25-10-2022

 

மாயமற்ற அன்பு

 

“ஒருவன் தன் சிநேகிதருக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலுமில்லை” – யோவான் 15:13

 

அன்னை தெரசாவின் அன்பைப் பற்றி நாம் கேள்விப்பட்டிருப்போம். தொழுநோயாளிகளிடம், ஏழை மக்களிடம் அவர் காட்டிய அன்பு மிகவும் பெரியது. தன்னுடைய சொந்த நாட்டை விட்டு இந்தியாவிற்கு வந்த அவர், நம் மக்களிடம் கொண்ட அன்பு காரணமாக 45 வருடங்கள் தொண்டு செய்தார். அவரது இறப்பின்போது 123 நாடுகளில் 610 தொண்டு நிறுவனங்கள் இயங்கிக் கொண்டிருந்தன. இதில் எய்ட்ஸ், தொழுநோய் மற்றும் காசநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நல்வாழ்வு மையங்கள், அனாதை இல்லங்கள், பள்ளிக்கூடங்கள் ஆகியவை அடங்கும். எவ்வளவு பெரிய அன்பு பாருங்கள். 

 

இன்றைய வேதபகுதியில் யோனத்தான் மற்றும் தாவீதினுடைய அன்பு குறித்து பார்க்கிறோம். இஸ்ரவேல் மக்களின் முதல் அரசன் சவுல். அவருடைய மகன் யோனத்தான். தாவீதோ ஆடு மேய்க்கும் இளைஞனாக இருந்தான். சவுலுக்குப் பிடித்திருந்த அசுத்த ஆவி ஓடும்படியாக தாவீதை இசைக்கருவி மீட்டும்படிக்கு அரண்மனைக்கு கொண்டு வந்தார்கள். யோனத்தானும், தாவீதும் நல்ல நண்பர்கள் ஆனார்கள். சில காரணங்களால் சவுல், தாவீதைக் கொலை செய்யும்படிக்கு ஆட்களை அனுப்பும்போது கூட யோனத்தான் தாவீதிற்காக பரிந்து பேசி உதவி செய்கிறதைப் பார்க்கிறோம். மேலும் தாவீது, சவுலுக்குப் பயந்து வனாந்தரத்தில் ஒளித்துக் கொண்டிருக்கும்போது கூட, யோனத்தான் அங்கு சென்று தாவீதைத் திடப்படுத்தி ஆறுதல்படுத்துவதை நாம் பார்க்கிறோம். ஒரு நாட்டின் இளவரசனுக்கு, சாதாரண ஒரு வாலிபன் மீது இருந்த மாயமற்ற அன்பைப் பாருங்கள். 

 

பிரியமானவர்களே! நாம் பிறரிடம் காட்டும் அன்பு எப்படிப்பட்டது? என்று சற்று சிந்திப்போம். நமக்கு ஏதாவது ஆதாயம் கிடைக்குமென்று எண்ணி எத்தனையோ முறை நாம் போலியான அன்பை பிறருக்கு கொடுத்திருக்கிறோம். ஆனால் அன்னை தெரசா ஏதோ ஆதாயத்திற்காக புகழுக்காக பெயருக்காக இந்தியர்களுக்கு சேவை செய்யவில்லை. மிக மிக எளிய வாழ்க்கை வாழ்ந்ததை நாம் அறிந்ததே. எல்லாவற்றிற்கும் மேலாக இயேசுகிறிஸ்து தன் ஜீவனையே கொடுத்து நம்மிடம் காட்டிய உண்மையான அன்பு எத்தனை மேலானது. அதனால்தான் நாம் இன்றும் நிலை நிற்கிறோம். நாமும் பிறரிடம் கிறிஸ்துவின் உண்மையான அன்பைக் காட்டுவோம். கிறிஸ்துவின் சாயலைப் பிரதிபலிப்போம்.

- Mrs. திவ்யா பெர்னார்ட் 

 

ஜெபக்குறிப்பு:

7000 ஊழியர்கள் மூலம் 1இலட்சம் கிராமங்கள் சந்திக்கப்பட, ஒத்த தரிசனமுள்ள ஊழியர்கள் நம்மோடு இணைய, தேவன் தந்த தரிசனம் நிறைவேற ஜெபியுங்கள். 

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: reachvmm@gmail.com

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250



hacklink satın al holiganbet giriş holiganbet padişahbet bets10 extrabet royalbet süperbetin padişahbet betcio romabet giriş romabet queenbet bahiscasino betcio bahiscasino atlasbet matbet matbet giriş bahiscasino celtabet queenbet casibom jojobet