Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil)  15-02-2021
Share:

By Village Missionary Movement

Monday, 15-Feb-2021

இன்றைய தியானம்(Tamil)  15-02-2021

சீட்டு உன் பேரில் 

“...சீட்டு மத்தியாவின் பேருக்கு விழுந்தது; அப்பொழுது அவன் பதினொரு அப்போஸ்தலருடனே சேர்த்துக்கொள்ளப்பட்டான்.” – அப். 1:26

சர்வதேச இந்திய கிரிக்கெட் அணியில் ஒரு வீரனாக இடம் பிடிப்பது என்பது அவ்வளவு சுலபமல்ல. அதிலும் தற்போது மிகவும் விரும்பத்தக்க T20 சர்வதேச இந்திய அணியில் இடம் பெறுவது மிகவும் கடினம்தான். 2020 அக்டோபர் 26ம் தேதி சர்வதேச இந்திய அணியின் ஆஸ்திரேலிய பயணத்தில் 15 பேர் கொண்ட குழுவில் நடராஜன் என்ற தமிழக வீரரும் இடம் பெற்றிருந்தார். அதே ஆண்டு நவம்பர் 4ம் தேதி நடைபெற இருந்த இரண்டாவது T20 ஆட்டத்தில் முக்கியமான வீரர்கள் காயமடையவே சீட்டு விழுந்தது போல் நடராஜனுக்கு ஆடும் வாய்ப்பு கிடைத்தது. மிகவும் கஷ்டப்பட்ட குடும்பப்பின்னணி, எந்த ஒரு பெரிய சிபாரிசும் இல்லை. களம் இறக்கப்பட்ட முதல் ஆட்டத்திலேயே முக்கியமான 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார். அத்தொடரை வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி கோப்பையை நடராஜன் கையில் கொடுத்து அழகு பார்த்தார். நட்சத்திர வீரர் கார்த்திக் பாண்டியாவும் அதையே செய்தார். இதன் மூலம் நடராஜனின் பெற்றோருக்கும், ஊருக்கும் ஏன் தமிழ்நாட்டுக்கே பெருமை. தற்போது சர்வதேச இந்திய கிரிக்கெட் அணியின் T20 யில் ஒரு நிரந்தர வீரராகி விட்டார் தங்கராசு நடராஜன். 

பரிசுத்த வேதாகமத்தில் அப்போஸ்தலர் முதலாம் அதிகாரத்தில் பார்க்கும்போது, இயேசு கிறிஸ்துவின் 12 சீஷர்களில் ஒருவனாக யூதாஸ்காரியோத்து பண ஆசையினால் சாத்தானுக்குத் தன்னை ஒப்புக்கொடுத்து, இயேசுவைக் காட்டிக் கொடுத்து, பின்பு நாண்டுகொண்டு செத்தான் எனப் பார்க்கிறோம். அவன் வகித்து வந்த அந்தப் பெரிய இடத்தை நிரப்ப சீஷர்கள் முடிவெடுத்தனர். அப்போது சீட்டு மத்தியாவின் பேருக்கு விழுந்தது (அப். 1:26) இது மத்தியாவுக்கு கிடைத்த ஒரு பெருமை என்று கூறலாம். மத்தியாவுக்கும் அப்போஸ்தலப் பட்டம் கிடைத்தது. என்ன ஆச்சரியம் மத்தியா நினைத்துக் கூடப் பார்த்திருக்க மாட்டார். ஆனால் சீட்டு விழுந்ததும் ஏற்றுக் கொண்டு பதினொரு அப்போஸ்தலருடன் இணைந்து கொண்டு சுவிசேஷம் பரப்புவதற்கு ஒரு காரணமாக அமைந்தார். 

இதை வாசிக்கும் நண்பர்களே, சீட்டு விழுவதைப் போல தேவனுடைய ஊழியத்தைச் செய்யும்படிக்கான அழைப்பு உங்களுக்கும் வரலாம். ஒரு பிரசங்கத்தின் மூலமோ, வேத தியானத்தின் மூலமோ, சூழ்நிலைகளின் மூலமோ நீங்கள் தேவனுடைய ஊழியத்தை செய்ய உணர்த்தப்படலாம். அப்போது நீங்களும் அந்த அழைப்பை ஏற்று ஊழியம் செய்ய முன்வாருங்கள், ஊழியத்தை தாங்க முன்வாருங்கள். மேற்கண்ட இருவரும் சீட்டு விழுந்ததை ஏற்று தங்களால் முடிந்தவரை அவரவர் இடத்திற்கு பெருமை சேர்த்தனர். “உங்கள் பேரில் சீட்டு விழுந்தால்?” நீங்களும் தேவ ஊழியத்தை செய்து உங்களால் முடிந்தவரை நம் நாட்டிற்கு ஆசீர்வாதத்தைக் கொண்டு வர முடியும்.
-    T. சங்கர்ராஜன் 

ஜெபக்குறிப்பு:
கிராமங்களைத் தத்தெடுத்துள்ள குடும்பங்களை தேவன் ஆசீர்வதிக்க ஜெபியுங்கள்.

இந்த தியானச் செய்தியை பெற்றுக்கொள்ள
Whats app: 
தமிழில் பெற -  +91 94440 11864
ஆங்கிலத்தில் பெற - +91 86109 84002
ஹிந்தியில் பெற - +91 93858 10496
தெலுங்கில் பெற - +91 94424 93250

Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.vmmorg.template.msmapp

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250



hacklink satın al