Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 23-10-2022 (Kids Special)
Share:

By Village Missionary Movement

Sunday, 23-Oct-2022

இன்றைய தியானம்(Tamil) 23-10-2022 (Kids Special)

 

TIME IS GOLD

 

“நாட்கள் பொல்லாதவைகளானதால் காலத்தைப் பிரயோஜனப்படுத்திக் கொள்ளுங்கள்” – எபேசியர் 5:16 

 

Hello குட்டீஸ்! School life ரொம்ப ஜாலியா போயிட்டு இருக்குதா? ஒரு நாள் லீவு கிடைத்தால் கூட வெளியே போய் சுத்திப் பார்க்கணும்னு ஆசைப்படுவீங்க இல்லையா? உங்க ஆசை நியாயமானதுதான். ஆனால் நேரத்தை எப்படிப் பயன்படுத்துறீங்க? சின்னப் பிள்ளைகள் தானே! நாங்க ஜாலியா இருக்கக் கூடாதா? என்று கேட்கலாம். சிறு வயதிலிருந்தே நீங்க நேரத்தை சரியாய் பயன்படுத்தப் பழகிக் கொண்டீர்களானால், நீங்க அநேகருக்கு ஆசீர்வாதமாய் மாறீடுவீங்க. கேத்தி, அவள் தனது லீவு நாட்களை எப்படி பயன்படுத்தினாள் என்று கதை கேட்கலாமா? 

 

ஒரு லீவு நாளில் கேத்தி தன் அப்பா கூட அவர்கள் தென்னந்தோப்புக்கு சென்றாள். அது மலையடிவாரத்தில் ஒரு ஆற்றுக்குப் பக்கத்தில் இருந்தது. பார்ப்பதற்கே மிகவும் அழகாக இருந்தது. தென்னை மரத்தில் அணில்கள் அங்கும் இங்கும் ஓடுவதும்... குருவிகள் கீச்..கீச்..என்று சத்தம் போடுவதையும் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தாள் கேத்தி. அதற்குள் அப்பா இளநீர் வெட்டி கொடுத்தார்கள். ரொம்ப சுவையாக இருந்தது. நீங்களும் இளநீர் குடிச்சிருக்கீங்களா? ஆமா, வெயில் நேரம் குடித்தால் உடம்புக்கு ரொம்ப நல்லது. சரி, இந்த கேத்தி அடுத்து என்ன செய்தாள் தெரியுமா? அந்தத் தோப்பிலுள்ள மரங்களுக்கு பம்ப் செட் மூலமாக தண்ணீர் பாய்ந்து கொண்டிருந்தது. அதில் சந்தோஷமாகக் குளித்து விளையாடினாள், ஜாலியாக இருந்தது.    

 

மதியம் வீட்டிற்குச் சென்று சாப்பிட்டு விட்டு, ஒரு குட்டித் தூக்கம் தூங்கினாள். மாலையில் ஹோம் ஒர்க் செய்து விட்டு, வீட்டைச் சுத்தம் செய்தாள். குட்டிப் பிள்ளைகளே! நீங்களும் அம்மாவுக்கு உதவி பண்ணுவீங்களா? சூப்பர்! அம்மா டீ போடுவதற்கு சீனி இல்லாததால் கடைக்குப் போகச் சொன்னார்கள். அந்த வேலையையும் சந்தோஷமாகச் செய்தாள். இரவு குடும்ப ஜெபத்தில் தேவனுக்கு நன்றி சொன்னாள். அந்த ஒரு நாள் லீவைப் பிரயோஜனமா கழித்தாள் கேத்தி. இயேசப்பாவும் கேத்தியைப் பார்த்து ரொம்ப சந்தோஷப்பட்டிருப்பாங்க, இல்லையா குட்டீஸ்?   

 

குட்டிச் செல்லங்களே! இயேசப்பா நமக்குத் தந்த ஒவ்வொரு நாளும் திரும்பக் கிடைக்காத விலைமதிப்புள்ளவைகள். காலம் பொன்போன்றது. இதனால் செல்போன், டிவி பார்த்துகிட்டே, ஹோம் ஒர்க் எழுதாம, படிப்பில் கவனம் செலுத்தாமல் இருக்கக்கூடாது. கேத்தியைப்போல ஜாலியாய் என்ஜாய் பண்ணலாம். அதே போல உங்க கடமைகளையும் செய்யணும். ஒகே-வா. நல்ல தீர்மானம் எடுக்க என் வழ்த்துக்கள். நன்றி! 

- A. பியூலா

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: reachvmm@gmail.com

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250



hacklink satın al