Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 22-10-2022
Share:

By Village Missionary Movement

Friday, 21-Oct-2022

இன்றைய தியானம்(Tamil) 22-10-2022

 

எழுதினது மாற்றப்படும் 

 

‘’…உமது பார்வைக்கு நலமானதைச் செய்தேன் என்பதை நினைத்தருளும்...” - 2 இராஜாக்கள் 20:3 

 

ஜான் டி.ராக்ஃபெல்லர் சீனியர் என்பவர் எப்படியாகிலும் பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்று முடிவெடுத்தவராய், அதற்காக கடுமையாக உழைக்க ஆரம்பித்தார். 43- வது வயதில் உலகத்திலேயே பெரிய கம்பெனிக்கு உரிமையாளரானார். 53 வது வயதில் உலகின் பெரிய பணக்காரரானார். ஆனால் அந்த நேரத்தில் அவருக்கு அலோஃபீசியா என்னும் வியாதி வந்தது, அவருக்கு எல்லா முடியும் கொட்டிப்போய் விட்டது. அவரால் பாலையும், சில பிஸ்கெட்டுகளையும் தான் சாப்பிட முடியுமே தவிர வேறு ஒன்றும் சாப்பிட முடியாது! என்ன ஒரு பரிதாபமான நிலைமை ! அவருக்கு வைத்தியம் செய்த வைத்தியர்கள் ‘’அவர் இன்னும் இரண்டு வருடம் தான் உயிரோடு இருப்பார்” என்று சொல்லி விட்டார்கள். அவருக்கு தூக்கம் என்பது மறந்து போயிற்று. ஒரு நாள் காலை புதுத்தெம்போடு எழுந்தார். தன்னுடைய அளவற்ற செல்வத்தை எடுத்து, மிஷனெரி ஊழியங்களுக்கும், ஏழைகளுக்கும், உதவிக்கரம் நீட்டி வாரி வழங்க ஆரம்பித்தார். Rockefeller foundation என்ற ஒரு ஸ்தாபனத்தை தொடங்கி மருத்துவ ஆய்வுகளுக்குத் தேவையான பணம் கொடுத்ததன் மூலம் பென்சிலின் மருந்து கண்டுபிடிக்கப்பட்டது. அவருடைய துக்கம் இன்பமாக மாறியது. டாக்டர்கள்’’அவர் ஒரு வருடம் தான் அதாவது 54 –வயது வரைதான் உயிரோடு இருப்பார்’’ என்று கூறினர். ஆனால் அதற்கு பிறகு 98 வயது வரை சுகமாய் வாழ்ந்து கிறிஸ்துவுக்குள் மரித்தார். 

 

மேற்கண்ட சம்பவத்தைப்போல, வேதத்திலும் எசேக்கியா ராஜா வியாதிப்பட்டு மரணத்துக்கு ஏதுவாயிருந்தான். அப்பொழுது ஆமோத்சின் குமாரனாகிய ஏசாயா என்னும் தீர்க்கதரிசி மூலமாக ‘’நீர் பிழைக்கமாட்டீர், மரித்துப் போவீர்’’ என்று கர்த்தரால் எச்சரிக்கப்பட்டார். கர்த்தருடைய சமுகத்தில் விண்ணப்பம் பண்ணி அழுதார். மீண்டும் கர்த்தருடைய தீர்க்கதரிசனமான வார்த்தை ஏசாயாவுக்கு உண்டாகி, கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால் ‘’உன் கண்ணீரைக் கண்டேன், உன் நாட்களோடே பதினைந்து வருஷங்களைக் கூட்டுவேன்’’ என்று உரைக்கப்பட்டதால், எசேக்கியாவின் மரண நாட்கள் மாற்றியமைக்கப்பட்டது.   

 

இதை வாசிக்கின்றதான பிரியமானவர்களே! நீண்ட நாட்களாக வியாதியோடு போராடிக் கொண்டிருக்கிறீர்களா? மருத்துவரால் உங்களுடைய மரண நாள் முன் குறிக்கப்பட்டுவிட்டதா? அல்லது இவ்வளவு நாட்கள் வரைதான் ஜீவனம் பண்ணமுடியும் என்று எழுதப்பட்டு விட்டதா? மருத்துவரால் எழுதப்பட்டதை, சிலுவையில் சிந்தின இயேசுவின் இரத்தத்தால் மாற்றி எழுத முடியும். மேலும் உங்களைப் பற்றி யாரோ ஒருவர் ஏற்படுத்தின அவப்பெயரை உங்களால் மாற்றமுடியவில்லை என்றாலும், தேவனுடைய பார்வைக்கு நீங்கள் நலமானதை நிறைவேற்றும் போது மற்றவர்களால் உங்களைப் பற்றி எழுதி வைக்கப்பட்டதும், இயேசுவினால் நிச்சயம் நன்மைக்கு ஏதுவாக மாற்றி எழுதப்படும். அல்லேலூயா! 

- Mrs. சக்தி சங்கர்ராஜ் 

 

ஜெபக்குறிப்பு: 

‘’கண்மணியே கேள்’’ பத்திரிக்கையை வாசிக்கும் வாலிபப் பெண்பிள்ளைகள் தேவனுக்காக வைராக்கியமாய் ஜீவிக்க ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: reachvmm@gmail.com

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250



hacklink satın al