Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 20-10-2022
Share:

By Village Missionary Movement

Thursday, 20-Oct-2022

இன்றைய தியானம்(Tamil) 20-10-2022

 

விட்டுக்கொடுப்போம்

 

“...நீ இடதுபுறம் போனால், நான் வலதுபுறம் போகிறேன்; நீ வலதுபுறம் போனால், நான் இடதுபுறம் போகிறேன் என்றான்.” – ஆதியாகமம் 13:9 

 

செய்தித்தாளில் வாசித்த ஒரு சம்பவம்: ஒருவர் தனது நிலத்தைச் சுத்தப்படுத்தி வீடு கட்டுவதற்காக அளந்து எல்லா வேலைகளையும் பார்க்கத் தொடங்கினார். அப்போது எதிர்பாராதவிதமாக தனது நிலத்திற்கு அருகில் உள்ள மற்றொருவரின் நிலத்தில் அரைஅடி (6 inch) கூடுதலாக அளந்து விட்டார். பக்கத்து நில உரிமையாளர் இதனால் கோபமடைந்து சண்டைபோட்டு அது பெரிய பகையாக மாறியது. இருவருமே சமரசம் ஆகவில்லை. ஒருநாள் வீடு கட்டிக்கொண்டிருந்த இந்த நபரை, பக்கத்து நில உரிமையாளர் கொலை செய்துவிட்டார். என்னே பரிதாபம்! இப்போது அந்த நபர் ஜெயிலில் உள்ளார். பேசித் தீர்க்க வேண்டிய காரியம் கொலையில் முடிந்தது. 

 

பரிசுத்த வேதாகமத்தில் ஆபிரகாம் நல்ல ஒரு முன்மாதிரியாகத் திகழ்ந்தார். ஆபிரகாமின் சகோதரன் மகன் லோத்துக்கும் அநேகம் ஆஸ்திகள் இருந்ததைப் பார்க்கிறோம். ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் ஆபிரகாமின் மேய்ப்பருக்கும், லோத்தின் மேய்ப்பருக்கும் தங்குவதற்கான இடம் குறித்து வாக்குவாதம் ஏற்படுகிறது. ஆதி.13-ம் அதிகாரத்தில் ஆபிரகாம் சொல்லும் ஒரு அற்புதமான காரியத்தை நாம் பார்க்க முடியும். ஆபிரகாம் லோத்திற்கு விட்டுக்கொடுத்து விட்டார். “நீ வலதுபுறம் போனால் நான் இடதுபுறம் போகிறேன், நீ இடதுபுறம் போனால் நான் வலதுபுறம் போகிறேன்” என்று விட்டுக்கொடுத்தார். அப்படி விட்டுக் கொடுத்ததால் ஆபிரகாமுக்கு ஒரு குறைவும் ஏற்பட்டுவிடவில்லை. தேவன் ஆபிரகாமை மென்மேலும் ஆசீர்வதித்தார். 

 

இதை வாசிக்கின்ற நண்பர்களே! இன்றைய உலகின் போக்கு மோசமாக உள்ளது. இந்த விட்டுக்கொடுக்கிற குணம் அநேகரிடத்தில் இல்லை. ஆகவே கிறிஸ்துவை அறிந்த நாம் நமது குடும்பத்தில், குடும்ப உறவுகளிடத்தில், வேலை செய்யுமிடத்தில், ஊழியம் செய்யும் இடங்களில் நாம் தான் விட்டுக்கொடுக்க வேண்டும். இந்த குணம் நம்மிடத்தில் இருந்தால் நாம் அநேகருக்கு ஆசீர்வாதமாய் மாற முடியும். இந்த உலகில் சுயநலத்தை மட்டுமே மையமாக வைத்து ஓடுகிறவர்கள் ஏராளம். ஆனால் நாம் பிறருக்காக விட்டுக்கொடுக்கிறவர்களாக வாழ்வோமென்றால் நம் மூலமாக அநேகர் தேவனை அறிந்துகொள்ள முடியும்! 

- T. சங்கர்ராஜ்

 

ஜெபக்குறிப்பு: 

இரண்டு மாதங்களுக்கொரு முறை ஊழியர்களுக்கென வெளிவரும் கழுதைகள் கையேடு பத்திரிக்கையின் மூலம் அவர்களின் தரிசனம் புதுப்பிக்கப்பட ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: reachvmm@gmail.com

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250



hacklink satın al