Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 16-10-2022 (Kids Special)
Share:

By Village Missionary Movement

Saturday, 15-Oct-2022

இன்றைய தியானம்(Tamil) 16-10-2022 (Kids Special)

 

நீ தான் SPECIAL                 

 

“…அநேகம் அடைக்கலான் குருவிகளைப் பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்களாயிருக்கிறீர்கள்“ - மத்தேயு 10:31       

 

Hello friends! உங்களுக்கு ஒன்று தெரியுமா? “Jesus” பார்வையில் நீங்க ரொம்ப “special”. என்ன சொல்லுறீங்க? என்னை “கருவாச்சி, முட்டைக்கண்ணா, குட்டச்சி இப்படியெல்லாம் கிண்டல் பண்ணுறாங்களே! நானா special?” என்று நீங்க கேட்கலாம். குட்டிச் செல்லங்களே! உண்மையாகவே உங்களைப் படைத்த ஆண்டவர் “நீங்கள் விசேஷமானவர்கள்“ என்பதை வேதத்தில் எழுதி வைத்திருக்கிறார். “ச்சே... நான் ரொம்ப அசிங்கமா இருக்கிறேன். குரல் கூட நல்லாவே இல்லை“ என்று feel பண்ணிய ஒரு பறவையைப் பற்றி கதை கேட்கலாமா? 

 

ஒரு பசுமையான காட்டுப்பகுதியில் விலங்குகள், பறவைகள் ஒற்றுமையாய் வாழ்ந்து வந்தது. நீங்க எப்படி? school –ல, வீட்டுல ஒற்றுமையா இருப்பீங்களா? சில நேரங்களில் சண்டை போடுவீங்களா? சரி, சரி. உடனே சமாதானமாகிடணும், ok வா? குரங்கு மரத்துக்கு மரம் தாவி ரொம்ப ஜாலியா இருந்தது. துள்ளிக் குதித்து வந்த முயல் “என்ன குரங்கண்ணா, எப்படி இருக்கீங்க? “ என்றது. “ நாளை சர்க்கஸ்ல என் வித்தைகளைக் காட்ட போறேன். அதை நினைத்தாலே எனக்கு happy-யா இருக்கு“ என்றது குரங்கு. “சரி... சரி.. நீ என்ன இவ்வளவு make up - போட இருக்குற “ என்று கேட்டது. “இன்றைக்கு நம்ம நரி மாமா வீட்டில் function – அதுல நான் dance ஆடப்போறேனே “ என்று குதித்துக் குதித்து ஓடியது முயல். இதையெல்லாம் கவனித்துக்கொண்டிருந்த காகம் ரொம்ப கவலைப்பட்டது. “எனக்கு அழகு, திறமை எதுவுமே இல்லை. கடவுள் என்னைக் கருப்பா படைச்சிட்டாரு, குரலாவது நல்ல இருக்கும்னு நெனச்சா... நான் கா...கா ... வென கத்த ஆரம்பித்தாலே ச்சீ , போ “ என்று மனிதர்கள் என்னை விரட்டி அடிக்கிறாங்க. “ எதுக்குத்தான் பிறந்தேனோ?” என்று நொந்து கொண்டது. அப்போது “கூ ...கூ ...” என்று கூவிக்கொண்டே காக்கா பக்கத்தில் வந்து அமர்ந்தது குயில், Hai blacky, how are you?“ என்றது. “உனக்கென்ன நீ கூவும் சத்தத்தைக் கேட்டாலே, எல்லோருக்கும் உன்னை ரொம்ப பிடிக்கும். ஆனா...” என்ற காகத்திடம்“ நீ தான் special, காக்கைகளைப் பாருங்கள் அவை விதைப்பதுமில்லை, அறுப்பதுமில்லை என்று இயேசுகிறிஸ்து உங்களைத்தான் மனிதர்களுக்கு example-ளாகவே வைத்திருக்கிறார். இப்ப சொல்லு, நீ feel பண்ணலாமா?“ என்றது குயில். “ஓ .. அப்படியா? இது எனக்கு தெரியாம போச்சே. இயேசுகிறிஸ்துவே எங்களைப் பற்றி பேசியிருப்பதை நினைத்தா அளவில்லா சந்தோஷம் என் உள்ளத்தை நிரப்புதே! இனிமேல் நான் என்னோட குறைவை நினைத்து கவலைப்படமாட்டேன். எப்பவும் சந்தோஷமாய் இருப்பேன்“ என்றது காகம். “Bye Blacky” என்று பறந்துபோனது குயில். 

 

அன்பு செல்லங்களே! கதையிலுள்ள காகத்தைப்போல , நீங்களும் “எனக்கு அழகு இல்லை, அறிவு இல்லை, திறமை இல்லை“ ன்னு feel பண்றீங்களா? காகத்தையே ஒரு நோக்கத்தோடு படைத்திருப்பாரென்றால் அதை விட விசேஷமான உங்களை ரொம்பப் பெரிய நோக்கம் வைத்து படைத்திருக்கிறார். So feel பண்ணாதீங்க. இயேசப்பா கரத்தில் உங்களை கொடுத்து விட்டால் உங்க Life super –o super தான்”. 

- Mrs. ஜீவா விஜய்

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: reachvmm@gmail.com

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250



hacklink satın al