Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil)  14-02-2021 (Kids Special)
Share:

By Village Missionary Movement

Sunday, 14-Feb-2021

இன்றைய தியானம்(Tamil)  14-02-2021 (Kids Special)

மாறாத அன்பு 

“தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.” – யோவான் 3:16

“டே நண்பா! வெய்ட் பண்ணு, இந்தா இந்த சாக்லேட்டெல்லாம் உனக்குத்தான்” என்றான் மகேஷ். “ஏதுடா உனக்கு விலையுயர்ந்த சாக்லேட்” என்று கேட்டான் பிரபு. “நேற்றுத்தான் என் அப்பா வெளிநாட்டிலிருந்து வந்தார். உனக்கு கொடுக்காம எனக்கு சாப்பிட மனசு வரலைடா, அதுதான் உனக்கு முதல்ல கொண்டு வந்தேன்” ன்னு சொன்னான் மகேஷ். என் மீது மகேஷ்க்கு எவ்வளவு பாசம் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டான் பிரபு. இவர்கள் இருவரும் இணைபிரியா நண்பர்கள். சிறு வயதிலிருந்தே ஒன்றாக படித்து, ஒரே தெருவில் வசித்து வருவதால், இவர்கள் இருவரும் நல்ல நண்பர்கள் என்று எல்லாருக்கும் தெரியும். அந்த தெருவில் உள்ளவர்கள் கூட நண்பர்களா இருந்தா மகேஷ், பிரபுவை போல இருக்கணும். சண்டை போடாம எவ்வளவு நட்பா இருக்கிறாங்க என்று மெச்சிக் கொள்வார்கள். இதனால் இவர்களின் நட்பு இன்னுமதிகமாய் வளர்ந்தது. 

ஒருநாள் அவர்கள் கிராமத்துக்குப் பக்கத்திலுள்ள அடர்ந்த காட்டுப்பகுதியில் வாக்கிங் போக நினைத்தார்கள். இரண்டு பேரும் பேசிக் கொண்டே நடந்து போனார்கள். திடீரென்று ஒரு சத்தம் கேட்டது. கரடியா இருக்குமோ? என்று நினைத்த மாத்திரத்தில் கரடியே வந்து விட்டது. மகேஷ்க்கு மரம் ஏற தெரியும், ஆனா பிரபுவுக்கு மரம் ஏற தெரியாததால் பயந்தான். “டே நண்பா என்னை உயிருக்கு உயிராய் நேசிக்கிறேன்னு அடிக்கடி சொல்லுவியே என்னையும் மரத்தில் ஏற்றிவிடு, Please” என்று பிரபு கத்தினான். “ஐய்யய்யோ என்னால் முடியாதுப்பா” என்று ஓடிப்போய் மரத்தில் ஏறிக் கொண்டான் மகேஷ். ஏதோ ஒரு ஞாபகம் வரவே டக் என்று பிரபு செத்தவனைப் போல் மூச்சு விடாமல் தரையிலே படுத்துக் கொண்டான். கரடி வந்து அவனை முகர்ந்து பார்த்து விட்டு, செத்து போனதை சாப்பிடாததால் அப்படியே சென்று விட்டது. உயிருக்கு ஆபத்து என்றதும் மகேஷ் என்னை மறந்து விட்டானே! நண்பனின் அன்புக்கு ஒரு எல்லை உண்டு என்பதை பிரபு அன்றைக்கு புரிந்து கொண்டான். கீழே இறங்கிய மகேஷ், “டேய் பிரபு கரடி உன் காதுகிட்ட ஏதோ சொல்லிச்சே, என்னடா” என்றான். “உன் நண்பனை நம்பாதே. அவன் அன்பு மாறிவிடும் என்றது” எனக் கூறினான். ஆம், எல்லையில்லாத அன்பு இயேசுவின் அன்பு மட்டும்தானே. 

ஆமா! தம்பி, தங்கச்சி உன்னை உயிருக்குயிராய் நேசிக்கின்றேன் என்று சொல்லுகிறவர்களையெல்லாம் நம்பி ஏமாந்து விடாதே! உனக்காக உயிரையே கொடுத்த இயேசுவின் அன்பை நினைத்துப்பார். அவரின் அன்புதான் மாறாதது. எந்த சூழ்நிலையிலும் உன்னை நேசித்து, உனக்கு உதவி செய்ய ஆசையாய் காத்திருக்கிறார். அந்த இயேசுவின் அன்பை நீ தாராளமாய் நம்பலாம். Ok, வா!
-    Mrs. ஜீவா விஜய்

இந்த தியானச் செய்தியை பெற்றுக்கொள்ள
Whats app: 
தமிழில் பெற -  +91 94440 11864
ஆங்கிலத்தில் பெற - +91 86109 84002
ஹிந்தியில் பெற - +91 93858 10496
தெலுங்கில் பெற - +91 94424 93250

Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.vmmorg.template.msmapp

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250



hacklink satın al