Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 13-10-2022
Share:

By Village Missionary Movement

Wednesday, 12-Oct-2022

இன்றைய தியானம்(Tamil) 13-10-2022

 

எழுப்புதல்            

 

“பூமியின்மேல் அக்கினியைப் போட வந்தேன், அது இப்பொழுதே பற்றி எரிய வேண்டுமென்று விரும்புகிறேன்“ - லூக்கா 12:49 

 

பண்டித ராமாபாய் ஒரு பிராமணப் பெண்மணி. இவர் 1891ஆம் ஆண்டு கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டார். இவர் சமூக சேவையில் சிறந்தவர். 1886 ஆண்டில் ஏற்பட்ட பஞ்சத்தில் தாய் தந்தையை இழந்தவர். இவரது 22வது வயதில் வங்காளத்தைச் சேர்ந்த வக்கீலை திருமணம் செய்தார். ஆனால் அவரது கணவர் 19 மாதங்களில் இறந்து போனார். பின்பு அவருடைய ஒரே சகோதரனும் இறந்து போனார். இளம் விதவையானார் ராமாபாய். விதவைகள் உடன் கட்டை ஏறிக் கொண்டிருந்த காலம் அது. விதவைகள் மறுமணம் புரிந்து கொள்வதை ஏற்றுக்கொள்ளாத சமுதாயத்தின் மத்தியில் பண்டித ராமாபாய் கிறிஸ்துவுக்காய் வாழ்ந்தார். 1899 ஆண்டு இந்தியா தேசத்தின் எழுப்புதலுக்காக ஜெபத்திலும் உபவாசத்திலும் அதிக நேரம் செலவிட்டார். அவருக்குள் எழுப்புதல் தாகம் இன்னும் அதிகமாயிற்று. பின்பு பத்துப் பேர்கள் கொண்ட பல ஜெபக் குழுக்கள் அமைத்து இந்தியாவிலுள்ள அனைத்து பெயர் கிறிஸ்தவர்கள் இரட்சிக்கப்படவும், பரிசுத்த ஆவியானவர் இந்தியா முழுவதும் ஊற்றப்படவும் வேண்டும் என இந்த ஜெபக்குழுக்கள் வைராக்கியமாக ஜெபிக்கத் துவங்கினர். இவர் மூலம் பெண்கள் மத்தியிலும் பெரிய எழுப்புதல் உண்டானது. 

 

லூக்கா எழுதின சுவிசேஷத்தில் இரண்டாம் அதிகாரத்தில் கூட ஆசேருடைய கோத்திரத்தாளும் பானுவேலின் குமாரத்தியுமாகிய அன்னாள் என்னும் ஒரு தீர்க்கதரிசி இருந்தார். இவர் தன்னுடைய கணவருடன் 7 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்து விதவையானாள். பின்பு தன்னுடைய வாழ்க்கையைக் குறித்து எண்ணாமல் தன்னுடைய சொந்த ஜனங்களின் இரட்சிப்பிற்காக தன்னை அர்ப்பணித்து இரவும் பகலும் உபவாசித்து ஜெபித்து தேவாலயத்தை விட்டு நீங்காமல் ஆராதனை செய்து கொண்டிருந்தாள். 84 வயதிலும் திறப்பில் நின்றவர் அருமையான அன்னாள்.              

 

இதை வாசிக்கும் தேவப்பிள்ளைகளே! நீங்கள் கர்த்தருக்காக என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்! இந்துப் பின்னணியில் பிறந்து இளம் வயதில் பெற்றோரையும் கணவரையும் இழந்து இளம் விதவையான பண்டித ராமாபாய் கர்த்தருக்காக இவ்வளவு வைராக்கியமாய் எழுந்து நின்று, இந்தியாவில் எழுப்புதலைக் கொண்டு வந்திருப்பார்களானால், உங்கள் மூலம் கர்த்தர் பெரிய எழுப்புதலைக் கொண்டு வருவது அதிக நிச்சயம் அல்லவா! எழுப்புதலைக் குறித்து தாகம் உங்கள் உள்ளத்தில் இருக்குமானால், தேவ அக்கினி இன்றே உங்களைத் தொடும் என்பதில் சந்தேகமில்லை. நான் ஒரு சாதாரண ஆள் தானே என்னால் என்ன செய்யமுடியும் என்று முடங்கிக் கிடந்தது போதும்! எழுப்புதல் தீயாக எழும்புங்கள்! தேவன் உன்னையும் பற்றி எரிய வைப்பார்!!

- Mrs. ரூபி அருண் 

 

ஜெபக்குறிப்பு:

நமது ஊழியத்தில் மொத்தம் 790 மிஷனெரிகள் முழுநேரமாக ஊழியம் செய்கின்றனர். ஒவ்வொருவரையும் தேவன் கடைசிக்கால எழுப்புதலின் கருவியாய் பயன்படுத்த ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: reachvmm@gmail.com

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet jojobet giriş matbet giriş holiganbet giriş matbet sahabet onwin bets10 bets10 giriş bets10 güncel giriş betcio atlasbet casibom giriş deneme bonusu casibom vaycasino vaycasino giriş meritking meritking giriş cratosroyalbet realbahis realbahis giriş jojobet jojobet jojobet jojobet jojobet holiganbet holiganbet cashwin esbet tambet casibom casibom giriş casibom casibom giriş imajbet imajbet giriş imajbetapp grandpashabet grandpashabet giriş grandpashabet güncel bets10 bets10 giriş bets10 güncel giriş matbet matbet giriş alobet