By Village Missionary Movement
Saturday, 08-Oct-2022இன்றைய தியானம்(Tamil) 09-10-2022
சுமையைக் குறை
‘’வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்” - மத்தேயு 11.28
Hai friends எப்படி இருக்கீங்க? Daily school – க்குப் போக, Home work எழுத, இப்படி Busy – யாக இருக்கிறீங்களா? OK…OK இன்றைக்கு ரொம்ப அழகா Bright –ஆ, சுறுசுறுப்பா இருக்கீங்களே. Super, உங்களைப் பார்த்ததும் எனக்குக் கதை சொல்லணும்னு தோணுது. நீங்க ரெடியா இருக்கீங்களா? சரி. Story க்குள்ளே போகலாமா?
ஒரு முதலாளிக்கு நிறைய வேலைக்காரர்கள் இருந்தாங்க. முதலாளி என்றாலே அவங்க சொன்ன பேச்சை கேக்கணும் இல்லையா? அப்படி கேக்கலைன்னா வேலையை விட்டே தூக்கிடுவாங்க அல்லது தண்டனை கொடுப்பாங்க. அப்படித்தானே! ஆனால் இந்த முதலாளி ரொம்ப அன்பானவர். எல்லாரையும் நேசித்து உதவி செய்வார். இவர் என்ன சொன்னாலும் கேள்வி கேட்காமல் கீழ்ப்படிவார்கள் வேலைக்காரர்கள். ஒரு நாள் இரண்டு வேலையாட்களை அழைத்துக் கனமான பையை ஒருத்தர்கிட்டேயும், இலகுவான பையை இன்னொருவர் கிட்டேயும் கொடுத்து, ‘’ 10 கி.மீ தொலைவிலுள்ள அந்த ஊரில் போய் சேர்த்துடணும்’’ என்று சொன்னார். மேலும் “பையிலுள்ள பொருட்களைக் குறைப்பதும், கூட்டுவதும் உங்கள் விருப்பம்’’ என்றார். இலகுவான பையை வைத்திருந்தவர் ரொம்ப சந்தோஷத்தோட நான் தான் முதல் ஆளாக போவேன் என்று Jolly-யாக நடக்க ஆரம்பித்தார்.
ஆனால் கனமான பையை வைத்திருந்தவர் வேகமாக நடக்க முடியாதில்லையா? ‘’ஆண்டவரே, எனக்கு உதவி செய்யும்’’ என்று ஜெபித்துக்கொண்டே மெதுவாக நடக்க ஆரம்பித்தார். போகின்ற வழியில் நிறைய குட்டிப்பிள்ளைகள் விளையாடிக் கொண்டிருந்தாங்க. சற்று இளைப்பாறும்படி பையை இறக்கிவைத்தார். அவர்களுக்கு ஏதாவது கொடுக்கலாம் என்று எண்ணி இதில் என்னதான் இருக்கிறதென்று பார்த்தார். நிறைய Snacks மற்றும் வாழைப்பழங்கள் இருந்தது. விளையாடிக் கொண்டிருந்த சிறு பிள்ளைகளுக்கு Snacks கொடுத்தார். முதலாளி கொடுத்தனுப்பிய பையில் முக்கியமான பொருள் ஏதும் இருக்கிறதா என பார்த்துக் கொண்டிருந்தார். வேலை செய்து களைப்போடிருந்த பெரியவர்களுக்கு வாழைப்பழங்ளைக் கொடுத்தார். இப்போது பை லேசானது. வேகமாக நடந்து போக வேண்டிய இடத்தை அடைந்தார். இலகுவான பையைக் கொண்டு போனவர் பையில் தான் இடமிருக்கிறதே என்று வழியிலே ‘’1கிலோ மாம்பழம் வாங்கினால் 1கிலோ இலவசம்’’ என்றதும் வாங்கிக்கொண்டார். இளநீர் குறைவான விலைக்குக் கிடைத்ததால் அதையும் வாங்கிக்கொண்டார். அந்த சுமையை சுமக்க முடியாமல் மெதுவாக நடந்து போனார். இவ்வளவு Weight –ஐ சுமந்து கொண்டு, நான் போக வேண்டிய இடத்துக்கு எப்படிப் போவேனோ? என்று புலம்பிக் கொண்டே போனார். இவர் யாரையும் விசாரிக்கவுமில்லை யாருக்கும் உதவி செய்யவும் இல்லை. தனக்கு என்ன நன்மை கிடைக்குமென்பதைத் தான் பார்த்தார்.
அன்பான தம்பி-தங்கச்சி, சுயநலமான வாழ்வு, உலக பாரத்தால் நிறைந்த வாழ்வு! பாவம், கவலை, இப்படிப்பட்ட உலகச்சுமைகளை சுமந்து கொண்டு பரலோகம் செல்ல முடியாது. எல்லா சுமைகளையும் இயேசப்பாவிடம் இறக்கி வைத்துவிட்டு மற்றவர்களை நேசித்து உதவி செய்து இயேசப்பா பிள்ளையாய் வாழ்ந்தால் பரலோக நாடு சென்றுவிடலாம். OK!
- Sis.தெபொராள்
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250