Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 06-10-2022
Share:

By Village Missionary Movement

Thursday, 06-Oct-2022

இன்றைய தியானம்(Tamil) 06-10-2022

 

அற்பமாய் எண்ண வேண்டாம்  

 

“...மனுஷன் முகத்தைப் பார்ப்பான்; கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார்...” - 1 சாமு.16:7

 

குவாடன் இங்கிலாந்து நாட்டில் உள்ள ஒரு சிறுவன். அவன் மற்ற சிறுவர்களைப் போலில்லாமல் சரீரத்தின் வளர்ச்சி குன்றி இருந்தான். இவனுடன் படிப்பவர்கள், அருகிலுள்ளவர்கள் என சிலர் அவ்வப்போது அவனை கிண்டல் செய்து, அற்பமாய் பேசுவார்கள். இவன் 5–வது வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது ஒருநாள் பள்ளியில் உள்ளவர்கள் இவனை அற்பமாய் பேசியுள்ளார்கள். அவர்கள் பேசியதைக் கேட்டு குவாடனின் உள்ளம் உடைந்தது. பள்ளியிலிருந்து வீட்டிற்கு வந்த குவாடன் “நான் சாகவேண்டும்” எனக் கத்திக்கொண்டே தன் அம்மாவிடம் அழுதான். அவனுடைய அம்மா அழுகையோடு என்ன செய்வது என்று அறியாமல் அவன் பேசியதை தனது செல்போனில் வீடியோ எடுத்தார். வீடியோ எடுத்த அதே நாளே அதை தனது சமூகவலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்தார். அந்த வீடியோ வைரலாகி இலட்சகணக்கானோருக்குப் பரவியது. அந்த வீடியோ பதிவைப் பார்த்த அதிபர், உடனே அந்த சிறுவனை கனப்படுத்த விரும்பினார். அன்றைக்கு நடக்க இருந்த ரக்பீ (Rugby) உலகக்கோப்பை போட்டியில், “முடிவு (Finals) ஆட்டத்தில் இங்கிலாந்தின் அணிக்கு முன்பாகத் தலைமை தாங்கி நிற்கத் தகுதியான ஒரே ஆள் குவாடன் தான்” என அதிபர் உத்தரவிட்டார். குவாடன் முன்னே நிற்க, அணி வீரர்கள் அவன் பின்னே அணிவகுக்க அந்தக் காட்சி கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.

 

வேதத்தில் தாவீதின் ஒரு கால கட்டத்தைப் பார்ப்போமென்றால், அவன் எல்லாராலும் புறக்கணிக்கப்பட்டு, அற்பமாய் எண்ணப்பட்டான். வீட்டில், வெளியில், யுத்தக்களத்தில் என அனைத்து இடங்களிலும் அற்பமாகப் பார்க்கப்பட்டான். ஆனால் தேவனோ அவனைக் கனப்படுத்தினார். அந்த கனம் ஒரு சாதாரணமானது அல்ல. அவன் நினைப்பதற்கும் மேலாக உயர்த்தப்பட்டான். சமஸ்த இஸ்ரவேலருக்கும் ராஜாவாக அபிஷேகம் பண்ணப்பட்டான்.

 

நண்பர்களே! நாம் யாரையும் அற்பமாக எண்ணிவிடவே கூடாது. ஏனென்றால் மனிதர்களாகிய நாம் பிறரது முகத்தை மட்டுமே பார்ப்போம். ஆனால் தேவனோ இருதயத்தைப் பார்க்கிறவர். தாழ்விலிருப்பவரை உயர்த்தவும், உயர்விலிருப்பவரை தாழ்த்தவும் அவராலே மட்டும் ஆகும். ஆகவே நாம் ஒருவரையும் அற்பமாக நினைக்காமல், தேவ சாயலால் சிருஷ்டிக்கப்பட்டவர்கள் என ஒவ்வொருவரையும் கவனமாகப் பார்ப்போம்! அப்போது தேவனுடைய சித்தம் இந்தப் பூமியில் நம் மூலமாக நிறைவேறும் என்பதில் சந்தேகமில்லை.

- T.சங்கர் ராஜ் 

 

ஜெபக்குறிப்பு:

“மோட்சப் பயணம்” பத்திரிக்கைகளை சமூக வலைதளத்தின் மூலம் வாசிக்கும் ஒவ்வொரு இருதயமும் ஞான எழுப்புதல் அடைய ஜெபியுங்கள்.   

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: reachvmm@gmail.com

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250



hacklink satın al deneme bonusu deneme bonusu veren siteler holiganbet holiganbet giriş holiganbet güncel giriş meritking meritking giriş meritking güncel giriş betcio betcio giriş holiganbet holiganbet giriş Enbet enbet giriş enbet güncel giriş perabet perabet perabet giriş deneme bonusu deneme bonusu veren siteler deneme bonusu deneme bonusu veren siteler meritking meritking giriş meritking güncel giriş bahissenin bahissenin güncel giriş bahissenin giriş superbetin giriş superbetin giriş süperbetin nakitbahis nakitbahis giriş enbet enbet giriş Matbet Matbet giriş holiganbet holiganbet giriş perabet perabet giriş matbet vaycasino marsbahis marsbahis güncel giriş marsbahis giriş casibom casibom giriş holiganbet güncel giriş betsat betsat betsat giriş betsat güncel giriş alobet alobet giriş meritking güncel giriş Vdcasino jasminbet jasminbet giriş klasbahis klasbahis giriş imajbet imajbet giriş İmajbet nakitbahis nakitbahis giriş vaycasino vaycasino giriş vaycasino güncel giriş matbet matbet giriş matbet güncel giriş yakabet yakabet giriş yakabet güncel giriş betsmove betsmove giriş betsmove güncel giriş betsat betsat giriş betsat güncel giriş safirbet safirbet giriş safirbet güncel giriş dumanbet giriş dumanbet dumanbet güncel giriş vaycasino vaycasino giriş vaycasino güncel giriş marsbahis marsbahis marsbahis giriş marsbahis güncel giriş kingroyal kingroyal giriş kingroyal güncel giriş meritking meritking giriş meritking güncel giriş meritbet meritbet giriş meritbet güncel giriş nakitbahis nakitbahis giriş nakitbahis güncel giriş dumanbet dumanbet giriş dumanbet güncel giriş Holiganbet holiganbet giriş holiganbet güncel giriş bahissenin bahissenin giriş bahissenin güncel giriş jojobet jojobet bayconticasino bayconticasino giriş bayconticasino güncel giriş imajbet imajbet giriş imajbet güncel giriş prizmabet prizmabet giriş pashagaming pashagaming giriş pashagaming güncel giriş interbahis interbahis giriş interbahis güncel giriş