Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 05-10-2022
Share:

By Village Missionary Movement

Wednesday, 05-Oct-2022

இன்றைய தியானம்(Tamil) 05-10-2022

 

ஆசீர்வாதத்திற்கான வழி  

 

“அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரண பரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார்.” - பிலிப்பியர் 2:8 

 

ஒரு அழகிய தோட்டத்தில் நிறைய மூங்கில் மரங்கள் இருந்தன. இவை எல்லாவற்றையும் அதன் எஜமான் நன்றாகக் கவனித்து நீர் பாய்ச்சி வந்தார். அவருக்குப் பிடித்தமான ஒரு மூங்கில் மரத்தினிடத்தில் தினமும் சில நிமிடங்கள் பேசுவார். ஒருநாள் அந்த எஜமான் மூங்கில் மரத்திடம் “உன்னை நான் பயன்படுத்தப்போகின்ற நேரம் வந்து விட்டது” என்றார். அது மிகுந்த சந்தோஷத்துடன், “என்னை எப்படி பயன்படுத்தப் போகிறீர்?” எனக் கேட்டது அதற்கு எஜமான் “உன்னை அந்த இடத்தில் இருந்து வெட்டுவேன், பிறகு உன் கிளைகளை எல்லாம் நறுக்குவேன், அதன் பின் உன்னை இரண்டாகப் பிளந்து நான் பயன்படுத்தப் போகிறேன்” என்றார். அதற்கு அந்த மூங்கில் மிகுந்த துக்கத்துடன், “இத்தனை காயங்கள் ஏற்படுத்தி பயன்படுத்தப் போகிறீரா? வேண்டாம்“ என சொன்னது. பின் சிலமணி நேரங்கள் யோசித்து, “என்னை பயன்படுத்தும்” என தன்னை ஒப்படைத்தது. அந்த எஜமான் அந்த மூங்கிலை வெட்டி அதன் கிளைகளை நறுக்கி அதை இரண்டாகப் பிளந்து ஒரு நீரூற்றில் வைத்தார். அதன் மறுமுனையை வறண்ட வயல்வெளியை நோக்கி வைத்தார். வறண்ட வயல்வெளி ஈரப்பதமானது. சில நாட்களில் அந்த நிலத்தை உழுது விதைத்தார். அதில் நெல் பயிர்கள் முளைத்த பின்னர் அதை அறுவடை செய்தார். அந்த மூங்கிலின் கீழ்ப்படிதலால் எஜமானுக்கும் மிகுந்த சந்தோஷம். 

 

வேதத்திலே சவுலிடம், “அமலேக்கை மடங்கடித்து அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் அழித்துவிடு” என்று கர்த்தர் சாமுவேல் மூலமாகச் சொன்னார். ஆனால் சவுலோ ஆண்டவருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படியாமல் அமலேக்கின் ராஜாவாகிய ஆகாகை உயிரோடே வைத்து, ஆடுமாடுகளைத் தப்ப விடுகிறார். முடிவில் சவுலுடைய ராஜ்யபாரம் அவரை விட்டு நீங்கினதற்கு அவருடைய கீழ்ப்படியாமையே காரணமாயிற்று. நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையிலும் தேவனுக்குக் கீழ்ப்படியாமல் மாம்சீகம் மேற்கொள்கிறதா? சிந்தியுங்கள். (2 சாமுவேல்15:21,22,23)  

 

அன்புக்குரியவர்களே! ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல், தம்மைத் தாமே வெறுமையாக்கி அடிமையின் ரூபமெடுத்து மனுஷர் சாயலானார். சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி தம்மைத்தாமே தாழ்த்தினார். ஆதலால் தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தினார். ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் கீழ்ப்படிதல் முழு மனுக்குலத்திற்கும் இரட்சிப்பைத் தந்ததல்லவா? எந்தச் சூழ்நிலையிலும் கர்த்தருடைய கட்டளைகளுக்கும், கற்பனைகளுக்கும் கீழ்ப்படிந்து பிறருக்கு ஆசீர்வாதமாக வாழ நம்மை அர்ப்பணிப்பது எத்தனை பெரிய சந்தோஷம்!

- Mrs. நிரோஷா ஆல்வின்                                                                 

 

ஜெபக்குறிப்பு:  

Peace center –ல் வந்து தங்கி ஜெபிக்கும் நபர்கள் பரிபூரண விடுதலை பெற, தேவனுக்கு சாட்சியாக வாழ ஜெபியுங்கள்.                

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: reachvmm@gmail.com

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250



hacklink satın al