By Village Missionary Movement
Sunday, 02-Oct-2022இன்றைய தியானம்(Tamil) 02-10-2022 (Kids Special)
சகலமும் நன்மைக்கே
“...தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறது...” - ரோமர் 8:28
Hello குட்டீஸ் எப்படி இருக்கிறீங்க? நல்லா இருக்கிறீங்களா ok, குட்டீஸ் நீங்க எல்லாரும் விவசாய வேலை, கட்டிட வேலை, paint அடிக்கிற வேலை மற்றும் கூலி வேலை செய்கிற நிறைய பேரைப் பார்த்திருப்பீங்க, விறகுகளை வெட்டி வியாபாரம் பண்ணுகிறவர்களை பார்த்திருக்கிறீங்களா! இப்போ அவர்களை பற்றித்தான் பார்க்கப்போகிறோம்.
தினேஷ், கோபி-ன்னு இரண்டு அண்ணன் இருந்தாங்க. அவங்க இரண்டுபேரும் இந்த விறகு வெட்டுகிற வேலையை செய்துதான் தங்களோட குடும்பத்தை நடத்தி வந்தாங்க. இரண்டுபேருமே இயேசப்பாவைப் பற்றி நன்கு தெரிந்தவங்க. ஆனால் தினேஷ் அண்ணன் இயேசப்பா செய்த சிறுசிறு நன்மைகளுக்கும் நன்றி சொல்லிக் கொண்டே இருப்பாங்க. ஆனால் கோபி அண்ணனோ இயேசப்பா எத்தனை நன்மை செய்தாலும், குறை கூறிக்கொண்டும், முறுமுறுத்துக்கொண்டும் தான் இருப்பார்கள். காலையில் காட்டிற்கு செல்லும் இருவரும் இரவுதான் வீடு திரும்புவார்கள்.
ஒருநாள் காலையில் எப்பவும் வழக்கம்போல விறகுவெட்ட காட்டிற்குச் சென்றார்கள். அங்கே பெரிய அதிர்ச்சி அவர்களுக்குக் காத்திருந்தது. என்னவென்றால் காடு முழுவதும் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. இதைக்கண்டதும், கோபி அண்ணன் பொங்கி எழுந்தார். ”இந்தக் கடவுள் எப்பவுமே நம்மை நிம்மதியை வாழவிடமாட்டார். இந்தக் காட்டையும், மரங்களையும் நம்பினால் நாமும் நம் குடும்பமும் தெருவில்தான் நிற்க வேண்டும்” என்று சொல்லி விட்டு, வேறு ஊருக்குச் சென்றுவிட்டார். தினேஷ் மனமுடைந்தவராய் வீட்டிற்கு வந்து முழங்கால்படியிட்டு கண்ணீரோடு இயேசுவை நோக்கிப் பார்த்தார். “இயேசப்பா என் வாழ்க்கையிலே நீங்க என்ன செய்தாலும் நன்மைக்காகத்தான் செய்வீங்க. இப்போ காட்டில் உள்ள மரங்களெல்லாம் தீப்பிடித்து எரிந்து விட்டது, நான் என்ன செய்ய?” என்று கேட்டான். உடனே கர்த்தர் அவன் இருதயத்தில் பேசினார், “நீ போய் அந்த காட்டில் எரிந்து நிற்கும் கரிக்கட்டைகளை எடுத்துக்கொண்டு போய் வியாபாரம் செய் “ என்றார். இவரும் சந்தோஷமாய் கர்த்தர் தனக்குச் சொன்னபடியே செய்தார். விறகுகளைப் பார்க்கிலும், கரிக்கட்டைகள் அதிக விலைக்கு விற்கப்பட்டது. கர்த்தர் தினேஷ் அண்ணனை ஆசீர்வதிக்க ஆரம்பித்தார். தனக்கென ஒரு சொந்தக்கடையை ஆரம்பித்து அதற்கு முதலாளியானார். அவர் வாழ்க்கையே மாறிப் போயிடுச்சி.
குட்டி தம்பி, தங்கச்சி பார்த்தீங்களா, அவசரப்பட்டு முடிவு எடுத்திருந்தால் இந்த அண்ணனோட வாழ்க்கை எப்படியோ போயிருக்கும். கஷ்டப்பட்டு விறகு வெட்டிக் கொண்டிருந்த அண்ணனுக்கு, கஷ்டப்படாமலே ஈசியான வேலையை இயேசப்பா கொடுத்திட்டாரு பார்த்தீங்களா! “இயேசப்பா எப்பவுமே நன்மைக்கு ஏதுவாகத்தான் எதையுமே செய்வாங்க, நம்ம அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுத்து இயேசப்பா தரும் ஆசீர்வாதத்தை இழந்துவிடக் கூடாது“. ok வா?
- Mrs. சாராள் சுபாஷ்
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250