By Village Missionary Movement
Friday, 12-Feb-2021இன்றைய தியானம்(Tamil) 12-02-2021
நம்மை மேற்கொள்வது எது?
“தேவவசனம் விருத்தியடைந்தது;…” -அப். 6:7
கிராமம் ஒன்றில் ஒரு வயதான தம்பதியினருக்கு 9 ஏக்கர் நிலம் இருந்தது. நிலத்தில் பலவிதமான பயிர்களைப் பயிரிட்டிருந்தார்கள். போதுமான மழை இல்லாததினால் கிணற்றில் இருந்த தண்ணீர் எல்லாம் வற்றி வெறும் பாறைகள் தான் தெரிந்தது. பயிர்கள் எல்லாம் வாட ஆரம்பித்தது. அந்த சமயத்தில் கர்த்தரை நோக்கி அவர்கள் ஜெபிக்க ஆரம்பித்தார்கள். ஒரு நாள் ஜெபித்துவிட்டு வேத வசனத்தை வாசித்துக்கொண்டு இருந்தபோது “அவர் கன்மலையைத் தண்ணீர்த் தடாகமாகவும், கற்பாறையை நீரூற்றுகளாகவும் மாற்றுகிறார்.” (சங்கீதம் 114:8) என்கிற ஒரு வேதவசனம் அவர்களோடு பேசியது. அந்த வேத வசனத்தை, அப்படியே விசுவாசித்து அன்று இரவே அந்த வசனத்தை சொல்லி கற்பாறையை நீரூற்றாக மாற்றுகிற தேவனே, வெறும் பாறையாக இருக்கிற எங்கள் கிணற்றை நீர் வாக்குக் கொடுத்திருக்கிறபடியே நீரூற்றாக மாற்றும் என்று விசுவாசத்தோடு ஜெபித்தார்கள். தங்கள் ஜெபத்திற்கு கர்த்தர் பதில் தந்துவிட்டார் என்ற நிச்சயம் தங்கள் உள்ளத்தில் வரும்வரை ஜெபித்தார்கள். காலையில் எழுந்து தங்கள் வயலுக்குச் சென்று அந்த கிணற்றை பார்த்தபோது வெறும் பாறையாக இருந்த அந்த கிணற்றில் தண்ணீர் ஊற்று பெருக்கெடுத்து, அந்தக் கிணறு தண்ணீரால் நிரம்பி இருப்பதைப் பார்த்து கர்த்தரைத் துதித்தார்கள். அந்த பகுதியில் உள்ள எல்லா கிணறுகளும் வறண்டு போயிருக்க அவர்களுடைய கிணற்றில் மட்டும் தண்ணீர் 9 ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த பயிருக்கு தேவையான தண்ணீரை கர்த்தர் கொடுத்தார்!
ஆபிரகாமும் அவரது மனைவி சாராளும் வயது சென்று முதிர்ந்தவர்களாய் இருந்தனர். அவர்களுக்கோ பிள்ளை இல்லாதிருந்தது. ஆனாலும் ஆபிரகாம் “உன் சந்ததியைப் பூமியின் தூளைப் போலப் பெருகப் பண்ணுவேன்;” என்று தன்னோடு பேசின கர்த்தரின் வார்த்தையின்மேல் விசுவாசம் வைத்தான். தன் 100வது வயதிலும் ஈசாக்கைப் பெற்றான்.
அன்பானவர்களே, நம்முடைய வாழ்விலும் கூட அநேக வேதவசனங்களின் மூலம் கர்த்தர் பேசுகிறார். நாம் அந்த வசனத்தைப் பிடித்துக்கொண்டு ஜெபிக்கிறோமா? நம்மை அதிகமாய் அசைப்பது கடினமான சூழ்நிலையா, இல்லை கர்த்தரின் வார்த்தையா? வார்த்தையை விசுவாசித்தால் வெற்றியே! ஒரு விதை விதைக்கப்பட்டால் தான் அது வளர்ந்து பலன் தரமுடியும். அதே போலத் தான் நம் வாழ்விலும் வசனத்தை கேட்டுவிட்டு செல்கிறவர்களாய் அல்ல, வேதவசனம் நமக்குள் விதைக்கப்பட்டு அது வேரூன்றி, விருத்தியடையும் போது நாம் சூழ்நிலைகளை மேற்கொண்டு ஜெயம் எடுக்கிறவர்களாய் காணப்படுவோம்.
- Mrs. வசந்தி ராஜமோகன்
ஜெபக்குறிப்பு:
நம்பிக்கை டி.வி.யில் ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிக்கு ஒரு Program க்கு ரூ.4500 கொடுத்து தாங்கும் குடும்பங்கள் எழும்ப ஜெபியுங்கள்.
இந்த தியானச் செய்தியை பெற்றுக்கொள்ள
Whats app:
தமிழில் பெற - +91 94440 11864
ஆங்கிலத்தில் பெற - +91 86109 84002
ஹிந்தியில் பெற - +91 93858 10496
தெலுங்கில் பெற - +91 94424 93250
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.vmmorg.template.msmapp
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250