Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 24-09-2022
Share:

By Village Missionary Movement

Friday, 23-Sep-2022

இன்றைய தியானம்(Tamil) 24-09-2022

 

நாவடக்கம்   

 

“...நாவானது... ஆயுள் சக்கரத்தைக் கொளுத்திவிடுகிறதாயும்... இருக்கிறது!” - யாக்கோபு 3: 6   

 

நம்முடைய அவயவங்களில் மிகவும் முக்கியமானது நாவு. அது சிறிய அவயவம் தான். ஆனால் பல பயன்களை உடையது. உணவை உண்பதற்கு, ருசி பார்ப்பதற்கு இதன் மூலம் நம் உடலும் உள்ளமும் மகிழுகின்றது. முக்கியமாக மற்றவரிடம் பேசவும், பாடவும் பயன்படுகிறது. ஆனால் சில நேரங்களில் நெருப்பைப் போல மாறி விடுகின்றது. அதாவது நாம் பேசும் போது தேவையற்ற வார்த்தைகளைப் பேசி பிறரைக் காயப்படுத்தி, உறவுகளைப் பிரித்து விடுகின்றது. தேவனை நாம் இந்த நாவினால்தான் துதிக்கிறோம். அதே நாவினால் மற்றவர்களை சபிக்கிறோம். இப்படி ஒரே நாவினால் தேவனைப் புகழ்வதும், மனிதர்களை சபிப்பதும் ஏற்றுக்கொள்ளப்படுமா? நிச்சயம் இல்லை. மாறாக அது தேவனை துக்கப்படுத்தும். நம் ஆத்துமாவையும் கறைபடுத்ததிவிடும். அப்படியானால், நாவின் தவறான வார்த்தைகளால் நம் முழு சரீரமும் கறைபட்டதாக மாறிவிடுகின்றது. அது பட்டயம் போல் மற்றவர்களை காயப்படுத்தி விடுகின்றது.

 

நாம் பேசுகின்றவைகளைச் சற்று கூர்ந்து கவனிப்போம். நம் வாயிலிருந்து புறப்படும் வார்த்தைகள் எப்படிப்பட்டவைகள்? கெட்ட வார்த்தைகள் ஒன்றும் உங்கள் வாயிலிருந்து புறப்பட வேண்டாம் என வேதம் எச்சரிக்கிறது. ஆகையால் நாம் பேசும் போது யோசித்து, பொறுமையுடன் பேசப் பழகுவோம். நெருப்பு போன்ற நம் வார்த்தைகள் மற்றவர்களோடு சேர்த்து நம்மையும் அழித்துவிட பலமுள்ளதாயிருக்கிறது. அதாவது நாவினால் நம் ஆயுள் சக்கரம் கொளுத்தப்படுகிறது. எனவே, இந்த நாவை நாம், நம் கட்டுப்பாட்டுக்குள் வைக்கப் பழகுவோம். முதலாவதாக நம் நாவு ருசி பார்ப்பதிலே, சில கட்டுப்பாடு வேண்டும். நம் உடலுக்குத் தேவையான சத்தான உணவுகளை மட்டுமே சாப்பிட வேண்டும். அதை மீறி நாம் சாப்பிடும் போது, அது “மாம்சப் பெருந்தீனி“ என வேதம் கூறுகிறது. அது நம்மைக் கறைபடுத்தும்.

 

கடைசியாக, “ஏற்ற சமயத்தில் சொன்ன வார்த்தை வெள்ளித் தட்டில் வைக்கப்பட்ட பொற்பழங்களுக்குச் சமானம்“ என்றும், “மரணமும் ஜீவனும் நாவின் அதிகாரத்தில் உள்ளது” என்றும் வேதம் கூறுகிறது. ஆகவே பேசவேண்டிய சமயத்தில் பேசத் தவறாமலும், பேசத் தவிர்க்கவேண்டிய இடத்தில் நாவடக்கத்துடன் இருப்பதும் நல்லதல்லவா! எனவே நம் உடலின் சிறிய அவயவமாகிய நாவின் அதிகாரத்தைக் குறித்து அதிக ஜாக்கிரதையுள்ளவர்களாய் இருப்போம். நம் ஆயுசின் நாட்களை கூட்டிக்கொள்வோம்.

- Mrs. புவனா தனபாலன்

 

ஜெபக்குறிப்பு: 

இந்தியா முழுவதும் ஒரு லட்சம் கிராமங்களில் திருச்சபைகள் உருவாக்கப்பட ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: reachvmm@gmail.com

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250



hacklink satın al