Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 23-09-2022
Share:

By Village Missionary Movement

Friday, 23-Sep-2022

இன்றைய தியானம்(Tamil) 23-09-2022

 

தீண்டாமை  

 

“...தேவன் பட்சபாதமுள்ளவரல்ல...” - அப். 10:34 

 

“நாங்கள் பிறரை ஏற்றுக்கொள்கிறோம். பிற மக்களோடு கலக்க விரும்புகிறோம் ஆனால் கலப்பினத்தவராக இருக்க நாங்கள் விரும்புகிறது இல்லை” இதை சொன்னவர் ஹங்கேரி நாட்டு பிரதமர் விக்டர் ஆர்பன் என்பவர் ஆவார். தி கார்டியன் என்ற பத்திரிக்கையில் இவரது பேட்டி வெளிவரவே ஹங்கேரி முழுவதும் பெரிய அதிர்வலைகள் உண்டானது. “ஒரு நாட்டு பிரதமரே தன் நாட்டில் குடியிருக்கும் மக்களை இன ரீதியாக பிரித்துப் பேசுவது எவ்வளவு வஞ்கத் தன்மை” என்று அவருடைய அமைச்சரவையில் உள்ள அமைச்சர் ஒருவர் தன் பதவியை ராஜினாமா செய்து தன் கண்டனத்தைப் பதிவு செய்தார். 

 

இன ரீதியாகவும் நிறவெறியாகவும் ஒருவர் இருப்பாரென்றால் ”அது நரகத்திற்கு வழிநடத்தக்கூடிய கொடிய பாவம்” என்று பரிசுத்த வேதாகமம் நம்மை எச்சரிக்கிறது. எகிப்தியருக்கு ஆடு மேய்ப்பவர்கள் என்றால் அருவருப்பு, யூதருக்கு சமாரியர்கள் என்றால் தீட்டானவர்கள். இதைப்போன்று வேதாகமத்தில் ஒவ்வொரு இன மக்களுக்கும் மற்ற ஜனங்களைக் காணும்பொழுது, “தங்களை அவர்களை விட உயர்ந்தவர்கள்“ என்று எண்ணிக் கொள்ளும் மனநிலையுடைய அநேகரைப் பற்றி வாசிக்கின்றோம். இந்த சுபாவத்தை தேவன் ஒரு நாளும் விரும்புகிறதில்லை. மதம், மார்க்கம், இனம் என வேறுபடுத்தி பட்சபாதத்தோடு நடந்துகொள்வதை நம் தேவன் அருவருக்கிறார்.

 

கலாத்தியர் நிருபத்தில் பேதுரு விருத்தசேதனமுள்ளவர்களுக்குப் பயந்து, புறவின மக்களிடம் மாய்மாலம் பண்ணினதை பவுல் கண்டிக்கிறதை வாசிக்கிறோம். இரட்சிக்கப்பட்டுள்ள அநேகரிடம் மனதளவில் ஜாதிப் பற்று இருப்பதை இன்றளவும் மறுக்க முடியாது. தான் கண்ட சகோதரனிடத்தில் அன்பு கூராதவன், காணாத தேவனிடத்தில் எப்படி அன்பு செலுத்துவான்? அருமையாக இதை யோவான் நமக்கு நிருபங்களில் எழுதி இருக்கிறார். சக மனிதருடன் பழகுவதில், நட்புக் கொள்வதில் உள் மனதிற்குள் சமரசம் இல்லை என்றால் தேவனுக்கு முன்பாக நீங்கள் அருவருப்பானவர்களே. யாவரையும் பட்சபாதம் இல்லாமல் ஒன்றுபோல் நேசிக்கும் நம் தேவனை இரட்சகராகக் கொண்டிருக்கும் நம்மிடத்தில் பட்சபாதம் இருக்கும் என்றால் அது எவ்வளவு பெரிய மாய்மாலமாக இருக்கும். நம் ஆண்டவரின் சிந்தனைகளே நம்மிடமும் இருக்கக் கடவது.

- P. ஜேக்கப் சங்கர் 

 

ஜெபக்குறிப்பு:

7000 ஊழியர்களைக் கொண்டு ஒருலட்சம் கிராமங்களைச் சந்திக்க எடுக்கும் பிரயாசங்களில் தேவக்கரம் உடனிருக்க ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: reachvmm@gmail.com

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet holiganbet giriş holiganbet güncel giriş holiganbet güncel giriş holiganbet giriş sahabet onwin casibom giriş casibom casibom giriş casibom matbet matbet giriş casibom casibom giriş amgbahis amgbahis giriş casibom casibom giriş jojobet jojobet giriş perabet perabet giriş holiganbet holiganbet giriş matbet matbet giriş superbetin superbetin giriş supertotobet supertotobet giriş superbetin superbetin giriş supertotobet supertotobet giriş imajbet imajbet giriş perabet perabet giriş coinbar coinbar giriş klasbahis klasbahis giriş ngsbahis ngsbahis giriş matbet matbet giriş mavibet mavibet giriş nakitbahis nakitbahis giriş marsbahis marsbahis giriş interbahis interbahis giriş mariobet mariobet giriş betpas betpas giriş artemisbet artemisbet giriş betsmove betsmove giriş restbet restbet giriş egebet egebet giriş https://yourfilterconnection.com/ grandpashabet jojobet jojobet giriş Hiltonbet Hiltonbet giriş Hiltonbet güncel Hiltonbet