Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 21-09-2022
Share:

By Village Missionary Movement

Wednesday, 21-Sep-2022

இன்றைய தியானம்(Tamil) 21-09-2022

 

பரிபூரண ஆசீர்வாதம்  

 

“உண்மையுள்ள மனுஷன் பரிபூரண ஆசீர்வாதங்களைப் பெறுவான்;...” – நீதி. 28:20

 

ரஷீதா அக்காவிற்கு ஒரு மகன் இருந்தான். சரியான நேரத்திற்குத் தன் கடமைகளைச் செய்ய அவனுக்கு Rules போட்டுக்கொண்டேயிருப்பார்கள். குளிக்கப்போனால் towel –ஐ சரிவரக் காயப்போட்டாயா? குழாயைச் சரியாக Close பண்ணினாயா? Bath Room Light – ஐ Off பண்ணினாயா? School முடிந்து வந்ததும் Uniform மாற்றினாயா? Bible Reading - ற்கு கொடுக்கப்பட்ட அதிகாரங்களை முடித்தாயா? Home Work 9: 00 மணிக்குள் முடித்துவிட்டாயா? வாலிபப் பிராயத்திலும் இதே ஒழுங்கு முறைகளைக் கடைப்பிடிக்க வற்புறுத்தினார்கள்.

 

வாலிபத் தம்பிக்கு மிகவும் எரிச்சலாக இருந்தது. தனது பட்டப்படிப்பை முடித்து வேலைக்குச் செல்வதற்கு ஒரு Interview Attend பண்ண வேண்டியிருந்தது. குறிப்பிட்ட நாள் வந்தது. மாடியில் உள்ள அறையில் Interview நடக்க இருந்தது. முன் அறையில் நுழைந்ததும் ஒழுங்கீனமாகக் கிடந்த Chairs –ஐ அடுக்கி வைத்தான். படிக்கட்டில் ஏறும்போது எரிந்துகொண்டிருந்த Light –ஐ Off செய்தான். பக்கத்திலுள்ள Wash Basin-ல் நூல்போல் வடிந்துகொண்டிருந்த குழாயைச் சரி செய்தான். மடங்கிக் கிடந்த மிதியடியை நேராக்கினான். தன் தாய் அவனைப் பழக்குவித்த அந்தப் பழக்கங்கள் அவனையும் அறியாமல் இந்தக் காரியங்களை அவனைச் செய்ய வைத்தது. Late ஆக 100 பேருடன் 101--வது நபராக அமர்ந்தான். அவன் அமர்ந்தவுடன் ஒருவர் வந்து அவனை உள்ளே வரும்படி அழைத்துச் சென்றார். மற்ற 100 பேரும் அவனைத் திரும்பிப் பார்த்தனர்.

 

அவன் செய்த காரியங்களை CCTV மூலம் கவனித்திருந்த அந்த Company M.D அவன் உள்ளே நுழைந்தபோதே type செய்து வைத்திருந்த Appointment Order-ஐ அவனுக்குக் கொடுத்தார். எந்தக் கேள்வியும் கேட்கவில்லை.

 

வேதம் கூட இப்படிப்பட்ட ஒழுக்கங்களை நாம் பின்பற்றவேண்டும் என்றே கூறுகின்றது. மேலும் சிறுசிறு காரியங்களில் நாம் மனிதர்களுக்கு முன்பாக நிற்கிறோம் என நினைத்து, காரியங்களை உண்மையாய் நடப்பிப்போமானால் நிச்சயம் அதற்கான ஆசீர்வதங்களை நாம் பரிபூரணமாய்ப் பெறுவோம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. மேலே வாசித்த நிகழ்வில் அந்த மகனுக்கு வாலிப வயதில் கட்டுப்பாடுகள் கோபத்தை வரவழைத்தாலும், அதுவே அவனுக்குப் பெரிய ஆசீர்வாதத்தைப் பெற்றுத் தந்தது. அதுபோலவே வேதம்கூறும் கட்டுப்பாடுகள் நமக்குக் கசப்பாய் இருந்தாலும், அவை நம்மை சரியான பாதையில் நடத்துவதற்கும், தேவன் நம்மை ஆசீர்வதிப்பதற்குமே, என உணர்ந்து அவற்றைப் பின்பற்றுவோம். தேவ ஆசீர்வாதம் பெறுவோம். ஆமென்!

- Mrs. ஜாஸ்மின் பால் 

 

ஜெபக்குறிப்பு: 

வீட்டுச்சபை உருவாக்கும் திட்டத்தின் கீழ் அநேக வீட்டுச் சபைகள் உருவாக்கப்பட ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: reachvmm@gmail.com

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet holiganbet giriş holiganbet giriş matbet holiganbet sahabet onwin casibom giriş casibom casibom giriş casibom matbet matbet giriş jojobet superbetin superbetin giriş marsbahis casibom casibom giriş holiganbet holiganbet giriş jojobet jojobet giriş casibom çarkbet vizebet alobet alobet giriş amgbahis amgbahis giriş sweet bonanza tlcasino amgbahis holiganbet wbahis casibom casibom giriş jojobet jojobet giriş perabet perabet giriş holiganbet holiganbet giriş casibom casibom giriş casibom güncel giriş matbet matbet giriş superbetin superbetin giriş carkbet carkbet giris supertotobet supertotobet giriş superbetin superbetin superbetin giriş marsbahis marsbahis giriş