By Village Missionary Movement
Thursday, 11-Feb-2021இன்றைய தியானம்(Tamil) 11-02-2021
சாதிகள் இல்லையடி பாப்பா
“...எந்த மனுஷனையும் தீட்டுள்ளவனென்றும் அசுத்தனென்றும் நான் சொல்லாதபடிக்கு தேவன் எனக்குக் காண்பித்திருக்கிறார்.” – அப். 10:28
படைத்த தேவனின் பார்வையில் எல்லோரும் சமம்தான். ஆனால் தொட்டதற்கெல்லாம் சாதி பார்ப்பது மனிதனின் குணமாகிவிட்டது. கிறிஸ்தவர்களும், ஊழியம் செய்பவர்களும் இதற்கு விதிவிலக்கல்ல. சாதி பார்ப்பதின் உச்சக்கட்டமாக, ஒரே ஊரில் இரண்டு சபைகளைக்கட்டி இது இந்த சாதியினருக்கு என்றும், அது அந்த சாதியினருக்கு என்றும் பிரிந்து ஆராதித்துக்கொண்டிருக்கிறார்கள். அநேக மிஷனெரி ஸ்தாபனங்கள் தேவையுள்ள இடங்களில் கூட ஒரு ஆலயத்தைக் கட்ட முடியாமல் பொருளாதார ரீதியாக கஷ்டப்படும்போது, ஒரு ஊரில் இரு ஆலயங்கள்! இது வேதனையானது! சாதியின் அடிப்படையில் இப்படி பிரிந்து கிடப்பது நியாயமா? என ஒவ்வொரு கிறிஸ்தவனும் யோசிக்க வேண்டும்!
பரிசுத்த வேதாகமத்தில் அப். 10ம் அதிகாரத்தை பார்க்கும் போது, பேதுருவுக்கு தேவன் ஒரு தரிசனம் கொடுத்தார். அதிலே நாலு முனைகளும் கட்டப்பட்ட, பெரிய துப்பட்டியை போல ஒரு கூடு வானத்திலிருந்து இறங்கி வந்தது. அதிலே பூமியிலுள்ள நாலுகால் ஜீவன்கள், காட்டுமிருகங்கள்,
ஊரும்பிராணிகள், ஆகாயத்துப் பறவைகளையும் பார்த்தார். மேலும் பேதுருவே அடித்துப் புசி என்ற சத்தத்தையும் கேட்டார். பேதுரு தீட்டும் அசுத்தமுமானதை ஒருக்காலும் சாப்பிட்டதில்லை எனக் கூறுகிறான். ஆனால் பேதுரு கேட்ட ஒரு சத்தம், “தேவன் சுத்தமாக்கினவைகளை நீ தீட்டாக எண்ணாதே” என்பது. இதைப் போல மூன்று முறை நடக்கிறது. அப்பொழுது பேதுரு யூதரல்லாத கொர்நேலியு என்ற மனிதனின் வீட்டிற்குப் போய் “எந்த மனுஷனையும் தீட்டுள்ளவனென்றும் அசுத்தனென்றும் நான் சொல்லாதபடிக்கு தேவன் எனக்கு காண்பித்திருக்கிறார்” என்னே ஒரு படிப்பினை.
இதை வாசிக்கின்ற நண்பர்களே! நாம் இன்றைக்கு யாரையும் தீட்டுள்ளவர்களென்றும், அசுத்தமானவர்களென்றும் பார்க்காதபடி கவனமாயிருப்போம். சாதியை வைத்துக் கொண்டு தேவன் சுத்தமாக்கின மனிதர்களை நாம் அசுத்தமாகவும், தீட்டாகவும் நினைக்கவே வேண்டாம். “சாதிகள் இல்லையடி பாப்பா, குல தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்” என்ற பாரதியாரின் வரிகளை நினைவு கூருவோம். ஆண்டவரை ஏற்றுக்கொண்ட ஒவ்வொருவரும் அப்போஸ்தலரில் உள்ள மேற்கண்ட சம்பவத்தை தியானித்து ஒப்புக் கொடுத்தால் உங்களையும் ஆண்டவர் பேதுருவைப்போல மாற்றிவிடுவார். ஆமென்.
- T. சங்கர்ராஜன்
ஜெபக்குறிப்பு:
You tube, Twitter, Facebook மூலம் ஒளிபரப்பப்படும் நமது சிறுவர் வாலிபர் நிகழ்ச்சியின் மூலம் அநேகர் தேவனை அறிகிற அறிவில் வளர ஜெபியுங்கள்.
இந்த தியானச் செய்தியை பெற்றுக்கொள்ள
Whats app:
தமிழில் பெற - +91 94440 11864
ஆங்கிலத்தில் பெற - +91 86109 84002
ஹிந்தியில் பெற - +91 93858 10496
தெலுங்கில் பெற - +91 94424 93250
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.vmmorg.template.msmapp
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250