By Village Missionary Movement
Wednesday, 14-Sep-2022இன்றைய தியானம்(Tamil) 15-09-2022
போராயுதம்
“...பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள்...” - யாக்கோபு 4:7
ஒவ்வொரு தேவப்பிள்ளைக்கும் ஆவிக்குரிய போராட்டம் ஒவ்வொரு நாளும் உண்டு. எனவே எந்த ஒரு தேவப்பிள்ளையும் அஜாக்கிரதையாக ஒரு நாளைத் துவங்கக் கூடாது.
ஹெர்ப் காயென் என்ற எழுத்தாளர் ஒரு பத்திரிக்கையில் இவ்வாறு எழுதியிருக்கிறார். ஆப்பிரிக்காவில் வாழும் கேசல் என்ற மிக வேகமாக ஓடும் மான் ஒவ்வொருநாளும் காலையில் எழுகிறது. “அன்றைய தினத்தில் தன்னை மிக வேகமாகத் துரத்தும் சிங்கத்தைவிட மிகவேகமாக ஓடாவிட்டால் கொல்லப்பட்டு விடுவோம்“ என்று அறிகிறது. ஒவ்வொரு காலையிலும் ஒரு சிங்கமும் விழித்து எழுகிறது. “அன்றைய தினத்தில் மிக வேகமாக ஓடும் கேசல் மானை விட தான் வேகமாக ஓடாவிட்டால் அன்றைய தினம் பட்டினி கிடக்க வேண்டும்” என்று அறிகிறது. ஆகவே, “ நீ ஒரு சிங்கமோ, கேசலோ, யாராக இருந்தாலும் வேகமாக ஓடிக்கொண்டுதான் இருக்கவேண்டும் “ என்று எழுதுகிறார்.
ஸ்பர்ஜன் என்ற தேவ ஊழியர் இப்படியாக எழுதுகிறார் “நீ தேவனைத் தேடிக்கொண்டிருக்காவிட்டால், பிசாசு உன்னைத் தேடிக்கொண்டிருப்பான்” என்று எழுதுகிறார். “நம் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிகிற சிங்கம் போல் எவனை விழுங்கலாமோ என்று சுற்றித் திரிகிறான்.” எனவே ஒவ்வொருநாளும் தேவனுடைய பாதுகாப்பின் செட்டைகளுக்குள் ஓடி ஒளித்துக்கொள்ள வேண்டும். எப்பொழுது? அதிகாலையிலேயே! ஒவ்வொரு நாளும் அதிகாலையில் தேவனைத் தேடி அவரை நமது அடைக்கலமாகக் கொண்டுவிட வேண்டும். ஒவ்வொருநாளும் பிசாசு கொண்டு வரும் பாவச் சோதனைகளுக்கு தப்ப அது ஒன்றுதான் நம் போராயுதம். சாத்தானை எதிர்க்கும் பெலத்தை அதிகாலையிலேயே பெற்றுவிட வேண்டும்.
அன்பானவர்களே! ஒவ்வொரு நாள் அதிகாலையிலும் கர்த்தரைத் தேடி பெலத்தின் மேல் பெலனடைந்து நம் ஓட்டத்தைத் தொடருங்கள். இந்த உலகத்தையும் பிசாசையும் எதிர்க்க நம்முடைய சொந்த பெலன் உதவாது. தேவ பெலன் மாத்திரமே உலகத்தை ஜெயிக்கும் ஜெயம். தேவபெலத்தொடு நீங்கள் ஒவ்வொரு நாளையும் எதிர்கொள்ளும்போது நிச்சயமாகவே வெற்றியுள்ள கிறிஸ்தவ வாழ்க்கை வாழமுடியும்.
- Mrs. கீதா ரிச்சர்டு
ஜெபக்குறிப்பு:
நமது பத்திரிக்கைகள் அச்சடிப்பதற்கும் வெளியிடுவதற்குமான தேவைகள் சந்திக்கப்பட ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்