Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 14-09-2022
Share:

By Village Missionary Movement

Tuesday, 13-Sep-2022

இன்றைய தியானம்(Tamil) 14-09-2022

 

வேதமே மனமகிழ்ச்சி                                                            

 

“மனமகிழ்ச்சி முகமலர்ச்சியைத் தரும்; மனோதுக்கத்தினாலே ஆவி முறிந்துபோம். “ - நீதிமொழிகள் 15 :13

 

வேதத்தை நேசித்து, வாசித்து, அனுதினமும் தியானித்து கர்த்தரின் வார்த்தைகளுக்கு கீழ்ப்படிந்து வாழும் தேவப்பிள்ளைகளை தேவன் அனுதினமும் பரிசுத்தமடையச் செய்கிறார். தேவன் தம் முகப் பிரகாசத்தை தம் பிள்ளைகளுக்கு அருளி முகமலர்ச்சியுடனும், மனமகிழ்ச்சியுடனும் வாழ அருள் செய்கிறார். நம் இதயம் முழுவதும் வேத வார்த்தைகளால் நிறைந்திருக்கும் போது தம் சாயலையும் தம் பிள்ளைகளுக்கு அருள வல்லவர். 

 

ஒரு சமயம் அமெரிக்க ஜனாதிபதி தாமஸ்ஜெபர்சன் அவர்கள் தன் நண்பர்களோடு சேர்த்து நாட்டைச் சுற்றிப் பார்க்கச் சென்றார். இரவு பெய்த பலத்த மழையினால், காட்டாற்றை கடந்து செல்ல வேண்டிய மரப்பாலம் தண்ணீரில் அடித்துச் சென்றுவிட்டது. தம், தம் குதிரைகளுடன் அந்த காட்டாற்றை கடந்து செல்ல முற்பட்ட போது, அங்கிருந்த மனிதன் ஜனாதிபதியிடம் “ஐயா என்னிடம் குதிரை இல்லை, தயவு செய்து என்னை உங்களுடன் அழைத்துச் செல்வீர்களா”? என்றான். எவ்வித தயக்கமுமின்றி மகிழ்ச்சியுடன் அந்த மனிதனை தன் குதிரையில் ஏற்றிக்கொண்டு கரை சேர்த்தார். நண்பர்கள் அனைவரும் “நாங்கள் இத்தனை பேர் இருக்க ஜனாதிபதியான அவரிடம் உதவி கேட்க உனக்கு எவ்வளவு தைரியம்?” என்றார்கள். “அவர் ஜனாதிபதி என்று தெரியாது, ஆனால் உங்கள் யாரிடமுமில்லாத அன்பும், உதவும் மனப்பான்மையுடனிருந்த அவரின் முகச் சாயலே என்னை உதவி கேட்கத் தூண்டியது” என்றானாம்.

 

ஆம் அன்பானவர்களே! தேவனை நேசித்து, அவர் தம் வார்த்தைகளோடு வாழ்ந்துகொண்டிருக்கும் தேவப்பிள்ளைகளுக்கு தம் குணாதிசயமான அன்பு, சந்தோஷம், நீடிய பொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம் என்ற ஆவியின் கனிகளை பரிசாக அளிப்பார். உமது வசனத்தை மறவேன். உம்முடைய வேதமே என் மனமகிழ்ச்சி என அவருடன் இணைந்து நம் வாழ்க்கையில் இயேசுவை மற்றவர்களுக்கு காட்டுவோம். தேவன் தரும் மனமகிழ்ச்சியும், முகமலர்ச்சியும், நம் உடலையும் மனதையும் ஆரோக்கியப்படுத்தி நன்றாக வாழச்செய்யும். நல்ல மனம், நற்குணத்தையும் நற்கிரியைகளையும் வெளிப்படுத்தும். தேவன் நம்மை பரிசுத்தப்படுத்தி, பயன்படுத்துவாராக! வேதத்தை நேசிப்போம், வாசிப்போம். அதுவே நம் சுவாசமாகவும் இருப்பதாக! ஆமென்.

- Mrs. சரோஜா மோகன்தாஸ்.  

 

ஜெபக்குறிப்பு:

ஒவ்வொரு மாநிலத்திலும் 3000 ஜெபக்குழு தலைவர்கள் மற்றும் ஜெபக்குழுக்கள் எழும்ப ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: reachvmm@gmail.com

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250



hacklink satın al holiganbet giriş holiganbet padişahbet bets10 extrabet royalbet süperbetin padişahbet betcio romabet giriş romabet queenbet bahiscasino betcio bahiscasino atlasbet matbet matbet giriş bahiscasino celtabet queenbet casibom jojobet